மறுபடியும் ராஜீவ் மேனன்
தமிழில் கட்டம் கட்டப்பட்டு விட்ட ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். இம்முறை இந்தியில் படம் இயக்கவுள்ளார்.
ஒளிப்பதிவாளராக இருந்த ராஜீவ் மேனன், பிரபல பாடகி கல்யாணி மேனனின் மகன் ஆவார். வெற்றிகரமான ஒளிப்பதிவாளராக இருந்த இவர் பின்னர் இயக்குநராக மாறினார்.மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என இரு படங்களை இயக்கினார். இரு படங்களும் சூப்பர் ஹிட் ஆகின. ஆனால் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தால் கலைப்புலி தாணு பெரும் கடனாளியானார், சிரமத்திற்கு ஆளானார்.
இதையடுத்து ராஜீவ் மேனனுக்கு தமிழில் இனிமேல் படம் இயக்க, தயாரிக்க ரெட் கார்டு போடப்பட்டது. இதனால் அவர் தமிழில் எதுவும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். இந்தியில் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கிறார் ராஜீவ் மேனன்.
தனது மறு வருகை குறித்து ராஜீவ் கூறுகையில், எத்தனை படங்கள் இயக்கினோம் என்று நான் பார்ப்பதில்லை. இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளேன். ஆனால் இரண்டுமே நல்ல படங்களாக கொடுத்தோம் என்ற திருப்தி உள்ளது.
இப்போது இளைஞர்களுக்கான ஒரு படத்தை இந்தியில் கொடுக்கப் போகிறேன். பொருத்தமான கலைஞர்களை தேடி வருகிறேன். அது முடிந்ததும் படப்பிடிப்பை ஆரம்பிப்பேன் என்றார் ராஜீவ்.


Click it and Unblock the Notifications











