»   »  ராஜ் டிவியின் புதிய சேனல்

ராஜ் டிவியின் புதிய சேனல்

Subscribe to Oneindia Tamil

தமிழின் நம்பர் டூ சானலான ராஜ் டிவி புதிதாக ஒரு சானலை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதேபோலமும்பையில் அதி நவீன ஸ்டூடியோவையும் அது கட்டவுள்ளது.

சன் டிவியைத் தொடர்ந்து தமிழில் தொடங்கப்பட்ட டிவி ராஜ் டிவி. இன்று சன் டிவிக்கு அடுத்த இடத்தில் ராஜ்டிவி உள்ளது. ராஜ் டிவி குழுமத்தில் தற்போது ராஜ் டிவி மற்றும் ராஜ் டிஜிட்டல் பிளஸ் என இரு சானல்கள்உள்ளன.

இடையில் தெலுங்கில் ஒரு சேனலையும், தமிழில் மியூசிக் சானலையும் ராஜ் டிவி தொடங்கியது. ஆனால் பாஜகஆட்சியில் அவர்கள் தந்த தைரியத்தில் இரு சேனல்களுக்கும் உரிய உரிமம் பெறாமல் நடத்தியதால் இருசானல்களையும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தடை செய்து விட்டது.

இந் நிலையில் தற்போது புதிதாக ஒரு சானலை தொடங்கத் திட்டமிட்டுள்ளது ராஜ் டிவி நிறுவனம்.இளைஞர்களுக்கான சானலாக இது இருக்கும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் மும்பையில்செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து ராஜேந்திரன் கூறுகையில், அடுத்த ஆண்டு ஜூன் மாத மத்தியில் இந்த புதிய இளைஞர் சானல்ஒளிபரப்புக்கு வரும். இதற்காக ரூ. 10 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய சானலில் இசை, கேம் ஷோக்கள் உள்ளிட்டைவ இடம் பெறும். இதில் திரைப்படங்கள் இடம் பெறாது. 15முதல் 40 வயது வரையில் உள்ளவர்களை இலக்காக் கொண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

ராஜ் டிவி குழுமத்தின் வளர்ச்சிக்காக ரூ. 100 கோடி அளவுக்கு பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளோம்.ஜனவரி மாத மத்தியில் இந்த பங்குகள் வெளியிடப்படும்.

மும்பையில் 9000 சதுர அடி பரப்பளவில் அதி நவீன நிகழ்ச்சித் தயாரிப்பு ஸ்டூடியோவை கட்டத்திட்டமிட்டுள்ளோம்.

இதுதவிர ராஜ் டிவி நிகழ்ச்சிகளை மேம்படுத்தவும், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களை மட்டுமல்லாதுஅனைத்து இந்தியர்களையும் கவரும் வகையிலான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பவும திட்டமிட்டுள்ளோம்.

அதிக அளவில் டெலிபிலிம்களைத் தயாரித்து ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. ராஜ் டிவி நிறுவனத்தின்வசம் தற்போது 1300 திரைப்படங்கள் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 374 கோடியாகும். இதை மேலும்அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராஜ் டிவிக்காக நிகழ்ச்சிகளைத் தயாரிக்க பிரபல இயக்குநர்கள், நட்சத்திரங்களை அணுக முடிவுசெய்யப்பட்டுள்ளது. மாறி வரும் நேயர்களின் விருப்பத்திற்கேற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடும்.

அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, லத்தீன் அமெரிக்கா ஆகியபகுதிகளிலும் ராஜ் டிவியின் அடித்தளத்தை வலுவாக்க திட்டமிட்டுள்ளோம்.

தமிழ் சந்தையை மட்டும் குறி வைக்காமல், ஒட்டு மொத்த இந்தியர்களையும் கவரும் வகையில் எங்களதுநடவடிக்கைகள் அமையும். தமிழ் நிகழ்ச்சிகளுக்கு இந்திய மொழிகள் அனைத்திலும் சப் டைட்டில் போட்டுமேற்கண்ட நாடுகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்றார் ராஜேந்திரன்.

Read more about: raj tv start another channel
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil