ஆபாச சர்ச்சையில் ராக்கி
விருந்தில் இந்தி பாப் பாடகர் மிகா சிங் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராக்கி சாவந்த், புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்தி பாப் ஆல்பங்கள் மூலம் பிரபலமானவர் ராக்கி சாவந்த். நர்ஸ் உடையில் இவர் ஒரு ஆல்பத்தில் படு செக்சியாக ஆடியதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். சில சினிமாக்களிலும் படு கிளாமராக நடித்துள்ளார் ராக்கி.ஒரு பார்ட்டியில் தனது நண்பி கைனாசுக்கு உதட்டோடு பயர் முத்தம் தந்து தீயைக் கிளப்பினார்.
சமீபத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் ராக்கியை, இந்தி பாப் பாடகர் மிகா சிங் கட்டிப் பிடித்து உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டார். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார் ராக்கி.
இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் புதிதாக ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ளார் ராக்கி. புதிதாக ஒரு இசை ஆல்பத்தில் நடித்துள்ளார் ராக்கி. அதில் ஒரு குளியல் காட்சியை படு கிளாமராக, கிட்டத்தட்ட படு ஆபாசமாக எடுத்துள்ளனராம்.
விஷயம் என்னவென்றால் ராக்கி குளியல் போடும் இடத்திற்கு அருகே ஒரு புத்தர் சிலை அமைதியாக அமர்ந்திருப்பது போல வருகிறதாம். இதுதான் பிரச்சினையை சூடாக்கி விட்டது.
புத்த மதத்தினர் ராக்கிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மகாராஷ்டிராவில் போராட்டம் நடந்துள்ளது. ஒரு காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸாரும் அதைப் பதிவு செய்துள்ளனர்.
புத்தரைப் போய் சீண்டிப் பார்க்கலாமா?


Click it and Unblock the Notifications











