»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்சில் போட்டுத் தாக்கிய ரகஸ்யாவைப் போல மும்பை எக்ஸ்பிரசிலும் ஒரு குஜிலியை ஆட விட்டுகலக்கியுள்ளனராம்.

கமல்ஹாசன், பிரபுவின் கூட்டணியில் உருவான வசூல் ராஜாவில் ரகஸ்யா போட்ட சிருக்கி சிரிச்சி வந்தா சீனா தானாடோய்ஆட்டம் அவரை கோலிவுட்டின் பிரதான ஐட்டம் நம்பர் ராணியாக மாற்றியுள்ளது. கை நிறைய சம்பளத்துடன், குறைந்தஅளவிலான உடைகளுடனும், நிறைய படங்களில் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

ரகஸ்யாவை தூக்கிச் சாப்பிடும் வகையில் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு குட்டியை இறக்கி விட்டுள்ளார்களாம். அவரது பெயர்ராக்கி சாவ்ந்த். மும்பை பிஜிலியான (மின்னல்) ராக்கி, படு தூளாக போட்டுத் தாக்கியுள்ளாராம்.

இந்திப் படங்களில் வில்லியாக, சைட் டான்ஸராக வந்து போய்க் கொண்டிருக்கும் ராக்கியை முதலில் மும்பை எக்ஸ்பிரஸ்படத்தில் ஆட வைக்கும் திட்டமே கமலிடம் இல்லையாம்.

ஆனால் படத்தை முக்காவாசி எடுத்து முடித்துவிட்டுப் பார்த்தபோது காரம் கொஞ்சம் கம்மியாக இருப்பதாக உணர்ந்தார்களாம்.இதையடுத்து ராக்கியைத் தூக்கி வந்துவிட்டார்களாம். இஞ்ச் கணக்கில்தான் இதில் ராக்கிக்கு உடை.

ரஷ்ய சர்க்கஸ்களில் ரப்பர் மாதிரி பறந்து, பறந்து அப்படியே மியூசிக்குக்கு ஏற்றபடி ஆட்டம் காட்டிவிட்டுப் போவார்களே அந்தஊர் தேவதைகள். அதே மாதிரி கொஞ்சமே கொஞ்சமாய் உடை கொடுத்து, சர்க்கஸ் பேக்கிரவுண்டில் ராக்கியை டான்ஸ் ஆடவைத்திருக்கிறார்கள்.

ராக்கியின் இடை ஆட்டத்தை பார்த்து மிரளப் போகிறார்கள் நம்ம ஊர்க்காரர்கள். அந்த அளவுக்கு அடித்துத் தூள்பண்ணியுள்ளாராம்.

கூடவே கமலும் தன் வயசை மறந்து டான்ஸ் ஆடியிருக்கிறாராம். ராக்கியை அவ்வளவு சீக்கிரத்தில் நம்மவர்கள் விட மாட்டார்கள்.நிச்சயம், ஒரு ஐந்தாறு படங்களாவது தேறும் என்கிறார்கள்.

மும்பை எக்ஸ்பிரசில் படத்தில் ஒரு பாட்டுக்காக ஆடி விட்டுப் போன ராக்கி சமீபத்தில் மும்பை பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்குவதாக இருந்தால் நிர்வாணமாக கூட நடிக்கத் தயார்என்று குண்டைப் போட்டுள்ளார்.

அப்படி போடு அருவாள...

Read more about: kamal, mumbai express, rakhi
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil