twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராக்கம்மா கையைத் தட்டு.. இன்று இதை எத்தனை முறை கேட்டீங்க? #HBDIlayaraja #HBD75RAJASIR

    |

    Recommended Video

    ராஜாவின் ராஜ்ஜியங்கள்- வீடியோ

    சென்னை: இளையராஜாவின் இசைத் தொகுப்புகளில் உங்களுக்குப் பிடித்தது எது என்று கேட்டால் கண்டிப்பாக உங்களால் எதையுமே தேர்வு செய்ய முடியாது.

    காரணம் அந்தக் குவியலுக்குள் போய் விட்டுத் திரும்பி வரவே முடியாது. அந்த நிலையில் எதைத் தேர்வு செய்து வெளியே வருவது.. !

    ஆனால் உலகெங்கும் ஒரு பாட்டுக்கு ஓங்கிக் கை தட்டியது என்றால் அது ராக்கம்மா கையைத் தட்டு தான். துள்ளல் இசைக்கு அப்படி ஒரு ஜில்லிப்பைக் கொடுத்திருப்பார் ராஜா இந்த தளபதி பாடலில்.

    மேதைகளின் சங்கமம்

    மேதைகளின் சங்கமம்

    தளபதி.. இந்தப் படம் லெஜண்டுகளின் சங்கமம். ரஜினி ஒரு பக்கம், மம்முட்டி மறுபக்கம். மணிரத்தினம் இயக்கம்.. ஆனால் படத்தின் மொத்த நாயகன் ராஜாதான். பின்னணி இசையில் மிரட்டியிருப்பார். பாடல்களிலோ போட்டுப் புரட்டியிருப்பார். இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவில் மீண்டும் எப்போது வரும் என்றே தெரியவில்லை.

    நூறாண்டுகளில் சிறந்த பாடல்

    நூறாண்டுகளில் சிறந்த பாடல்

    ஒரு நூறு ஆண்டுகளின் சிறந்த பாடல்கள் என்று பிபிசி ஒரு வாக்கெடுப்பு நடத்தி பட்டியலை வெளியிட்டது. அதில் முதல் இடத்தைப் பிடித்த பாடல் ராக்கம்மா கையைத் தட்டு. இளையராஜாவில் தமிழ் கூறும் நல்லுலகம் பெருமை கொண்டது. பூரித்துப் போனது.

    கடுமையான போட்டி

    கடுமையான போட்டி

    படம் வெளியாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த போட்டி இது. இளையராஜாவுக்குப் போட்டியாக எத்தனையோ பேர் வந்திருந்த காலம் அது. ஆனால் அதையும் தாண்டி ராக்கம்மா டாப்புக்குப் போனது இளையராஜா என்ற சரித்திரத்திற்குக் கிடைத்த அங்கீகாரம்.

    இணைந்து கொண்டாடும் இருவர்

    இன்று தளபதியின் கர்த்தா மணிரத்தினமும் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மிகப் பெருத்தமான இந்த நேரத்தில் இருவராலும் தமிழுக்குக் கிடைத்த கெளரவப் பாடலை மீண்டும் நினைவு கூருவோம்.

    English summary
    Rakkamma kaiya thattu, Manirathinam and Raja are unbeatable and inseparable. After so many years still the song is warming up our minds.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X