»   »  மல்கோவா ரக்ஷா!

மல்கோவா ரக்ஷா!

Subscribe to Oneindia Tamil

மங்களூரிலிருந்து ஒரு மல்கோவா புதுச்சேரிக்கு வந்துள்ளது. அதாவது புதுச்சேரி படத்தில் நடிக்க வந்துள்ளது.

எப். பிலிம்ஸ் தயாரிக்கும் படம்தான் புதுச்சேரி. இதில் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ள ரக்ஷா, பார்க்க படுலட்சணம். மூக்கும் முழியுமாக இருக்கும் ரக்ஷா, பேரழகி ஐஸ்வர்யா ராயின் தூரத்து சொந்தமாம்.

மங்களூரில் பொறந்த ரக்ஷாவுக்கு புதுச்சேரி தான் முதல் படமாம். ஆனால், அப்படிச் சொல்ல முடியாத அளவுக்குமுதல் படத்திலேயே கிளாமரில் புகுந்து விளையாடி வருகிறார்.

விளம்பரப் படங்களில் நடித்த அனுபவம் ரக்ஷாவுக்கு ஜோடியாக ராகுல் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார்.திலகம், புதுக்குடித்தனம் என இரண்டு படங்களை இயக்கிய ரகுவாசன் இப்படத்தை இயக்குகிறார்.

மல்கோவா மாம்பழம் கணக்காக அம்சமாக இருக்கும் ரக்ஷாவிடம், எப்படி நடிக்கப் போறீங்க என்று கேட்டால்,எப்படியும் நடிக்க நான் ரெடி. கிளாமர் இல்லாமல் சினிமா கிடையாது. எனவே கிளாமருக்கும் நான் ரெடி.

ஸ்விம் சூட் கூட எனக்கு ஓ.கே.தான். உதட்டு முத்தம் அந்தரங்க விஷயம். எனவே அப்படிப்பட்ட காட்சிகளில்மட்டும் அப்பட்டமாக நடிக்க மாட்டேன். பொதுவான கிஸ்ஸிங் காட்சின்னா ஓ.கே.தான் என்று தெளிவாகவேபேசுகிறார் ரக்ஷா.

ஐஸ்வர்யா ராய் எனக்கு தூரத்து சொந்தம்தான். எங்க சொந்த ஊரில் எனது வீடும், ஐஸ்வர்யாவின் வீடும் ஒரேதெருவில்தான் இருக்கிறது என்று தங்களது நெருக்கத்தை பறை சாற்றுகிறார் ரக்ஷா.

ரக்ஷா போதாதென்று படத்தில் ஏற்கனவே ரெஜினா என்ற படு கிளமாரான பாம் வேறு இருக்கிறார்.

அப்ப, டபுள் பாம்...

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil