»   »  ரம்யா ஒரு தரம் ரக்ஷிதா ரெண்டு தரம்!

ரம்யா ஒரு தரம் ரக்ஷிதா ரெண்டு தரம்!

Subscribe to Oneindia Tamil

கன்னடத் திரையுலகில் சமீபத்தில் ஒரு களேபரம் நடந்தேறியது. அதாவது தனம் தனம் என்ற படத்தில் நடித்தரம்யா (நம்மகுத்து ரம்யா தான்) மற்றும் ரக்ஷிதா (தம் நாயகி) ஆகியோரின் உடைகளை ஏலம் விட்டு செம காசுபார்த்துள்ளனர்.

நடிகர் ஷாமின் முதல் கன்னடப் படம்தான் தனம் தனம். அங்கு சூப்பர் ஹிட் படமாகியுள்ளது. இதில்ஷாமாவுக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் ரம்யா, இன்னொருவர் ரக்ஷிதா.

இருவருக்கும் இடையே படப்பிடிப்புக்கு முன்பே பெரும் ஊடல் இருந்தது. இதனால் படப்பிடிப்பின்போதேதினம் தினம் ஏதாவது ஒரு ரவுசு ஏற்பட்டு கலக்கலாக போனது ஷூட்டிங்.

ஒருமுறை ரம்யா வர லேட் ஆக காத்திருந்து பார்த்து கடுப்பாகி பாய்காட் செய்தார் ரக்ஷிதா. பிறகுசமாதானப்படுத்தி கூட்டி வந்து குத்தாட்டம் போட வைத்தார்களாம். யார் பெரியவர் என்ற போட்டியில்ஆரம்பத்திலிருந்தே ரம்யாதான் லீடிங்கில் இருந்து வந்தாராம் (யூனிட் பாய் ஒருவர் சொன்ன தகவல் இது).

இப்படி இருவரும் முறைத்துக் கொண்டே நடித்த முடித்து வெளியான தனம் தனம் தயாரிப்பாளருக்கு நிம்மதிதரும் வகையில் வசூலையும் வாரிக் குவித்து ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் ஹிட் ஆனதைப் பார்த்த தயா>ப்பாளர், இந்தப் படத்தில் ரம்யா, ரக்ஷிதா இருவரும் அணிந்து நடித்தஉடைகளை ஏலம் விட்டு அதிலும் காசு பார்க்க திட்டமிட்டார். இதையடுத்து சடுதியாக ஏலத்தை ஏற்பாடுசெய்தார்கள்.

இதிலும் ரம்யாதான் கலக்கினார். அதாவது அவரது உடைகள்தான் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதாம்.ரம்யா அணிந்து களைந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள உடைகள், ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம்போனதாம்.

ரக்ஷிதா அணிந்து அவிழ்த்துப் போட்ட ரூ. 900 (இம்புட்டுத்தானா??) மதிப்புள்ள உடையை ரூ. 33,000 ஏலம்எடுத்தனராம். ஏலத்தில் விடப்பட்டவை எல்லாம் முழு அளவிலான ஆடைகள்தானாம். அவர்கள் அணிந்திருந்தஅரைகுறை ஆடைகளை இதில் சேர்க்கவில்லையாம்.

நடிகைகளின் உடைகளை ஏலம் விட்டு அதில் நல்ல காசு கிடைத்ததைப் பார்த்த பல தயாரிப்பாளர்களும் தங்களதுபட நாயகிகளின் டிரஸ்களையும் ஏலத்தில் போட்டு பேரீச்சம்பழம் வாங்கலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

Read more about: actress dresses auctioned
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil