»   »  ரக்ஷிதாவுக்கு டும் டும்!

ரக்ஷிதாவுக்கு டும் டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தம், மதுர ஆகிய படங்களில் நடித்துள்ள டன்லப் பாப்பா ரக்ஷிதாவுக்கு கல்யாணம் ஆகப்போகிறது. கன்னட இயக்குநரை மணந்துஇல்லத்தரசியாகப் போகிறார் ரக்ஷிதா.

கன்னடத்து இளங்கிளியான ரக்ஷிதா, தம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர். அப்படத்தில் சிம்புக்கு, அக்கா மாதிரியான தோற்றத்தில்இருப்பார் ரக்ஷிதா.

பின்னர் மதுர படத்தை விஜய்யைக் கவர முயலும் கேரக்டரில் கிளாமரோடு நடிப்பைப் பிசைந்து கொடுத்து பிளிறியிருந்தார். திமுதிமு உடம்போடுஇருந்ததால் இளம் நடிகர்கள் ரக்ஷிதாவோடு சேர ஆர்வம் காட்டவில்லை.

இதனால் போங்கப்பா என்று அலுத்துக் கொண்டு கன்னடத்துக்கேத் திரும்பினார். அங்கு போய் உடம்பைக் கொஞ்சம் போல குறைத்துக் கொண்டுநிறையப் படங்களில் நடித்து வந்தார். குத்து ரம்யாவுக்கும், ரக்ஷிதாவுக்கும்தான் அங்கு கடும் போட்டியே.

பல படங்களில் நடித்து முடித்து விட்ட ரக்ஷிதா இப்போது கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகப் போகிறார். கன்னடத்தில் பெரும் வெற்றியைப்பெற்ற ஜோகி படத்தின் இயக்குநர் பிரேம் தான், ரக்ஷிதா மணக்கப் போகும் மணாளன்.

கடந்த ஆண்டு நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டனர். மார்ச் 8ம் தேதி பெங்களூரில் வைத்து கல்யாணம் நடக்கவுள்ளது. அதற்குப் பிறகு ரக்ஷிதாநடிக்க மாட்டாராம், வீட்டோடு இருந்து பிரேமை இயக்குவாராம்.

ரக்ஷிதா ஒரு பக்கம் கல்யாணத்திற்கு ரெடியாகி வரும் நிலையில் இன்னொரு கன்னடத்து கிளியான மாளவிகாவும் கல்யாணத்திற்கு படு வேகமாகதயாராகிக் கொண்டிருக்கிறார்.

மாளவிகாவுக்கும், சுமேஷ் மேனனுக்கும் கூட மார்ச் மாதத்தில்தான் கல்யாணமாம். ஆனால் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லையாம். வருகிற16ம் தேதி சென்னை வரும்போது தேதியை சொல்லவுள்ளாராம் மாளு.

மாளவிகா, சுமேஷின் திருமண உடைகளை பிரபல டிசைனர் மனீஷ் மல்ஹோத்ராதான் டிசைன் செய்து வருகிறாராம்.மாளவிகாவின் கல்யாணமும் பெங்களூரில்தான் நடக்கிறது. திருமணம் நெருங்கி வருவதால், கைவசம் உள்ள படங்களை வேகமாக முடித்துக்கொடுத்து வருகிறாராம் மாளவிகா.

சபரி பாக்கி வந்துடுச்சா மாளவிகா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil