ரூ.4 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய ராம்சரண்.. ஆர்.ஆர்.ஆர் எப்போ ஓடும்னு தெரியல.. காராவது ஓட்டுவோம்!

ஹைதராபாத்: மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் பிரபல டோலிவுட் நடிகருமான ராம்சரண் மெர்சிடஸ் மேபேச் (Mercedes Maybach GLS600) எனும் சொகுசு கார் ஒன்றை ரூ. 4 கோடிக்கு வாங்கி உள்ளார்.

பாகுபலி பட இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ள ராம்சரண் அந்த படத்தின் ரிலீசுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்.

நடிகர் ராம்சரண் புதிதாக மெர்சிடஸ் கார் வாங்கி உள்ள நிலையில், அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மெகா ஸ்டார் மகன்

மெகா ஸ்டார் மகன்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வாரிசு தான் நடிகர் ராம்சரண். 2007ம் ஆண்டு சிறுத்த எனும் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராம்சரண் அடுத்ததாக இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் வெளியான மகதீரா படம் மூலம் இந்தியளவில் பிரபலமானார். தமிழில் அந்த படம் மாவீரன் என டப் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ரங்கஸ்தலம்

ரங்கஸ்தலம்

தெலுங்கு திரையுலகில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் உள்ளனர். நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் கடந்த 2007ம் ஆண்டு ஹீரோவாக திரைத்துறைக்கு வந்த நிலையில், மகதீரா, நாயக், எவடு, தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கான துருவா, ரங்கஸ்தலம், வினய விதேய ராமா என பல பிளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்து இவரும் முன்னணி நடிகராக மாறி விட்டார்.

மீண்டும் ராஜமெளலி உடன்

மீண்டும் ராஜமெளலி உடன்

மகதீரா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள படம் தான் ஆர்.ஆர்.ஆர். ராம்சரண் உடன் இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த திரைப்படம் மீண்டும் தேதி குறிப்பிடாமல் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

அப்பாவுடன் இணைந்து

அப்பாவுடன் இணைந்து

ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு முடிந்து அடுத்ததாக அப்பா சிரஞ்சீவி உடன் இணைந்து ஆச்சார்யா படத்திலும் நடிகர் ராம்சரண் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் புதுப்படத்தில் நடிக்கவும் ஆரம்பித்து விட்டார்.

ஷங்கர் இயக்கத்தில்

ஷங்கர் இயக்கத்தில்

சமீபத்தில் RC15 படத்தின் பூஜை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வருக்கும் கலெக்டருக்கும் இடையே ஏற்படும் மோதல் காரணமாக கலெக்டர் முதல்வராகும் கதை தான் RC 15 என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகி உள்ளார்.

4 கோடிக்கு கார்

4 கோடிக்கு கார்

இந்நிலையில், நடிகர் ராம்சரண் புதிதாக மெர்சிடஸ் மேபேச் (Mercedes Maybach GLS600) எனும் விலையுயர்ந்த சொகுசு காரை கடந்த ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பர் 12ம் தேதி) வாங்கி உள்ளார். இந்த கார் இந்தியாவின் முதல் கஸ்டமைஸ் கார் என்கிற அந்தஸ்த்தை கொண்டுள்ளது.

Recommended Video

நான் வாழ்க்கையில் வாங்கிய ஒரே பரிசு | VJ Pappu Fun Speech | Adangamai Audio Launch | Filmibeat Tamil
வைரலாகும் புகைப்படங்கள்

வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் ராம்சரணுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷோ ரூமில் இருந்து கார் வாங்கும் புகைப்படங்கள் மற்றும் காரில் அமர்ந்து கார் ஓட்டும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

கார் கலெக்‌ஷன்

கார் கலெக்‌ஷன்

கார் பிரியரான நடிகர் ராம்சரண் ஏகப்பட்ட சொகுசு கார்களை இதுவரை வாங்கி வைத்துள்ளார். Aston Martin V8 Vantage, Range Rover Autobiography, Rolls Royce Phantom and Mercedes Benz GL 350 உள்ளிட்ட கார்களை வைத்துள்ள ராம்சரண் தற்போது புதிதாக Mercedes Maybach GLS600 காரும் வாங்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X