என்னால ராமராஜனுக்கும் நளினிக்கும் விவாகரத்து ஆகல... சேது ஹீரோயின் பரபரப்பு பேட்டி

சென்னை: சேது திரைப்படம் மூலம் தமிழக மக்களுக்கு பிரபலமானவர், அறிமுகமானவர் நடிகை அபிதா எனும் ஜெனி.

அதன் பின்னர் திருமதி செல்வம் என்கிற தொலைக்காட்சி தொடர் மூலம் மக்கள் மனதில் இன்னும் ஆழமாக பதிந்து விட்டார்.

சமீபத்தில் இவர் கொடுத்துள்ள பேட்டியில் நடிகர் ராமராஜன் மற்றும் நடிகை நளினி ஆகியோரின் விவாகரத்து பற்றி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

சேது

சேது

சேது திரைப்படத்தின் போது கதாநாயகிக்கான தேர்வு நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட நடிகை ஜெனியின் நடிப்பு பாலாவிற்கு பிடித்துவிட்டதாம். இதற்கு முன்னர் ஏதேனும் நடித்துள்ளீர்களா என்று கேட்டதற்கு, தொலைக்காட்சி தொடர்களிலும் படங்களில் செகண்ட் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறேன் என்றும் ஜெனி கூறியிருக்கிறார். அப்போது, இந்தப் படத்திற்காக புது முகத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறிவிட்டு அனுப்பிவிட்டாராம். அதன் பின்னர் கீர்த்தி ரெட்டி என்கிற நடிகையை வைத்து படத்தை ஒரு வாரம் எடுத்துள்ளார்கள்.

அபிதாவாக மாறிய ஜெனி

அபிதாவாக மாறிய ஜெனி

படப்பிடிப்பில் கீர்த்தியின் நடிப்பு பாலாவிற்கு செட் ஆகாததால் மீண்டும் அபிதாவை அழைத்துள்ளார்கள். அப்போது, பல கதாநாயகிகளை பார்த்தோம். ஒரு கதாநாயகியை வைத்து சூட்டிங்கும் தொடங்கினோம். ஆனால் எங்களுக்கு திருப்தி இல்லை. ஆடிஷனில் நீங்கள் நடித்தது பிடித்துள்ளது. நீங்களே நடியுங்கள் என்று கூறி அப்படித்தான் சேது திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமானாராம். ஜெனி என்கிற பெயருடன் அறிமுகமாக வேண்டாம். சயானா என்கிற பெயர் வைக்கிறேன் என்று ஆரம்பத்தில் கூறினாராம். அதுபோலவே பத்திரிகைகளிலும் சயானா என்ற கதாநாயகி அறிமுகமாகிறார் என்று செய்திகள் வந்ததாம். ஆனால் படத்தின் பிரவ்யூ பார்த்தபோதுதான் அபிதா என்கிற பெயரை திரையில் முதன் முதலில் பார்த்தாராம். படத்தில் கதாபாத்திரத்தின் பெயரான அபித்த குஜலாம்பாவை சுருக்கி அபிதா என்பதை தனது பெயராக வைத்ததாகவும் அன்று முதல் அப்படியே அழைக்கப்பட்டதாகவும் அபிதா கூறியுள்ளார்.

திருமதி செல்வம்

திருமதி செல்வம்

அதன் பின்னர் சில படங்களில் நடித்த அபிதா ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தபோதுதான் திருமதி செல்வத்தின் வாய்ப்பு வந்ததாம். முதலில் நடிக்கப் போவதில்லை என்று கூறிய பின்னரும் ஒரு முறை கதை கேட்டு பாருங்கள் என்று இயக்குநர் கூறவே வீட்டிற்கு வரச் சொல்லி கதை கேட்டாராம். இயக்குநர் தன்னை தேர்வு செய்யக்கூடாது என்பதற்காகவே சாதாரண சுடிதார் தலையில் எண்ணெய் தேய்த்து படிய வாரிக் கொண்டு கதை கேட்டதாகவும் கதை கேட்ட பின்னர் சூட்டிங் எப்போது என்று அபிதா கேட்டபோது நாளை முதல் ஷூட்டிங் என்று இயக்குநர் கூறியதாகவும் மேக்கப் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டபோது நீங்கள் இப்போது இருப்பது போலவே வந்து விடுங்கள் என்று அவர் கூறியதாகவும் அபிதா கூறியுள்ளார். தேர்ச்சி பெறக் கூடாது என்பதற்காக அணிந்த உடையே தேர்ச்சி பெறுவதற்கு காரணமாக அமைந்துவிட்டதாம். முதல் நாள் ஷூட்டிங்கில் அந்த சீரியலின் காட்சிகளும் எடுக்கப்பட்ட விதமும் பிடித்து போனதால் அதில் தொடர்ந்து நடித்துள்ளார்.

சர்ச்சையான கிசு கிசு

சர்ச்சையான கிசு கிசு

சேது திரைப்படத்தை தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தபோது ஒரு சமயம் நடிகர் ராமராஜனுடன் ஜோடியாக நடிக்க அபிதாவிற்கு வாய்ப்பு வந்துள்ளது. அந்தப் படத்தில் நடிக்கும்போதுதான் ராமராஜனுக்கும் நளினிக்கும் விவாகரத்து வழக்கு நடந்துள்ளது. அப்போது இவர்கள் விவாகரத்திற்கு அபிதாதான் காரணம் என்று பத்திரிகைகளில் பொய்யான வதந்திகள் வந்தது. சொல்லப்போனால் நளினி மேடம்மை நான் நேரில் பார்த்தது கூட இல்லை. சூட்டிங்கில் கூட எனது காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டால் உடனே எனது அறைக்கு சென்று விடுவேன். அப்படி இருக்கும்போது என்னைப் பற்றி தவறாக வதந்திகள் வந்தது என்று மனம் வருந்தி கூறியுள்ளார் அபிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X