»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

த்ரிரோஸஸ் படுதோல்விக்குப் பிறகு மீண்டும் ஒரு படம் எடுக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளார் ரம்பா.

இந்தப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார்.

சினிமாவில் காசு சம்பாதித்தால், கையில் காசு இருந்தால் என்ன செய்யலாம்? கல்யாண மண்டபம் கட்டலாம்.ஏழைகள் 4 பேருக்கு தலா ரூ.500 கொடுத்து அதை போட்டோ பிடித்து 10 பத்திரிக்கைகளுக்கு அனுப்பலாம்.

கல்லூரி ஒன்றைக் கட்டி இன்னும் சம்பாதிக்கலாம்.

இந்த விஷயத்தில் நடிகர்கள் எல்லாம் செம கெட்டி.

நடிகைகள் தான் சொந்தப் படம் எடுத்து, உள்ளதும் போச்சுநொள்ளக் கண்ணா என்று கடன்காரர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடுகிறார்கள்.

ரோஜா, தேவ்யானி, ரம்பா ஆகியோரெல்லாம் சொந்தப் படம் எடுத்து படும் கஷ்டம் எல்லாம் சொல்லி மாளமுடியாது. த்ரீ ரோஸஸ் படம் எடுத்ததால் ரம்பாவுக்கு மாபெரும் நஷ்டம். ஒரு வழியாக "கோவிந்தா"வின்உதவியோடு அதிலிருந்து மீண்டார்.

இருந்தாலும் செலவுக்கு காசு வேண்டுமே, அரசியலில் இருங்கி பிரசாரம் மூலம் கொஞ்சம் காசு சேர்த்தார். புதிதாகஒரு காரையும் வாங்கிப் போட்டார்.

ஒரு பாடலுக்கு ஆடவும் தயாராக இருக்கிறார்.

சம்பளமாக ரூ.5 லட்சம் கொடுத்து விட்டால் கவர்ச்சியில் புரட்சிசெய்யத் தயாராம். ஆனால் கண்டு கொள்பவர்கள்தான் யாருமில்லை.

இப்போது அடுத்த ஒரு சொந்தப் படம் எடுக்கத் தயாராகி விட்டார்.

ஏற்கனவே தனுஷிடம் கால்ஷீட் வாங்கிவைத்துள்ள அவர் சுள்ளான் படம் முடிந்த பிறகு தனுஷ் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் தனுஷோடு சேர்ந்து மன்மத ராசாவுக்கு இணையாக அட்டகாசமான ஒரு துள்ளாட்டம் போடஆசையாக உள்ளாராம் ரம்பா.

தனுஷ் ஒத்துக் கொள்வாரா என்றுதான் தெரியவில்லை.

பி.கு. இதற்கிடையே ரமபாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் அவரது வீட்டார் தீவிரமாகஇறங்கியுள்ளனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil