மீண்டும் மீண்டும் ரம்பா தகர்ந்து போயிருந்த ரம்பாவின் மார்க்கெட் மீண்டும் லேசாக சரியாகியிருக்கிறது. தமிழில் ஒரு படத்தில் மீண்டும் ஹீரோயினாகநடிக்கும் ரம்பாவுக்கு மலையாளத்தில் மார்க்கெட் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.தொடையழகி, கண்ணழகி என ரசிகர்களால் உருகிப் போய் ரசிக்கப்பட்ட ரம்பா இப்போது தமிழில் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். இடையில் கோவிந்தாவின் நட்பால் இந்திக்குப் போனார், அப்படியே மிதுன் சக்ரவர்த்தியுடன் ஏற்பட்ட திடீர் நட்பால்பெங்காலி மொழியிலும் தலை காட்டினார்.தாய் மொழியான தெலுங்கும் கைவிட, தமிழும் டாட்டா காட்டி விட, மதுரையில் வழக்குகள் அலை அலையாக எழும்பவிரக்தியில் உட்கார்ந்திருந்த ரம்பாவைக் கூப்பிட்டு ஒரு படத்தைக் கொடுத்தது மலையாள திரையுலகம்.ரசிகன் என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தில் ரம்பாவுக்கு சூப்பர் வேடம். கிளாமருடன் கூடிய அந்தப் படத்தில் தனது முழுத்திறமையையும் காட்டி கலக்கியிருந்தார் ரம்பா.இப்போது ரசிகன் கேரளா முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி ஆகி விடவே ரம்பாவுக்கு புதிதாக சில படங்கள் வந்துள்ளதாம்.இதனால் குஷியாகியுள்ளார் ரம்பா.அப்படியே முண்டு கட்டிக் கொண்டு மலையாளத்தில் ஒரு ரவுண்டு அடித்து தனது இமேஜை தூக்கி நிறுத்திக் கொள்ளலாம் என்றுமுடிவு செய்துள்ள ரம்பா, கிளாமருக்கு நோ லிமிட் என்றும் மலையாள தயாரிப்பாளர்களுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளாராம்.இதற்கிடையே தமிழில் ஸ்ரீ சர்வ சாய் பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் "ஒரு காதலன் ஒரு காதலி என்றபடத்தில் மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார் ராம்பா. இதில் ஹீரோ சரத் என்ற புதுமுகம். (இவரது ஒரிஜினல் பெயர் சந்திரனாம்)அபிநயஸ்ரீ, தூள் பட வில்லி சொர்ணக்கா சகுந்தலா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தை கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் செல்வேந்திரன்.இவர் டைரக்டர் ஷங்கரிடம் காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்.மாதேஷ் இயக்கிய மதுர, வெங்கடேஷ் டைரக்ட் செய்த சாக்லேட்ஆகிய படங்களில் உதவியாளராக இருந்துள்ளார்.நீண்ட காலத்துக்குப் பின் தமிழில் மீண்டும் ஹீரோயினாக களம் காண்பதால் உடலை கிச் என்று குறைத்து நச் என்றுமாற்றியிருக்கிறார் ரம்ப்ஸ்.பெண் என்றாவே வெறுத்து ஒதுங்கும் ஒருவன் திடீரென ஒரு பெண்ணிடம் காதல் வசப்படுகிறாரானாம். அந்தப் பெண்ணாக ரம்பாநடிக்கிறார். ரம்பாவிடம் அந்த வாலிபன் ஏன் விழுகிறான் என்பது தான் கதையின் கருவாம்.அதே நேரத்தில் தமிழில் ஒத்தை பாட்டுக்கு இனி ஆட மாட்டேன் என்று தனக்குத் தானே தடா போட்டுக் கொண்ட ரம்பா இப்போதுதனது சுய அரசியல் சட்டத்தில் சின்ன திருத்தம் செய்து மசோதா தாக்கல் செய்திருக்கிறார்.அதாவது இனி ஒரு பாட்டு என்றாலும் வந்து ஆடுவாராம். இந்த டூல்ஸ் ரிலாக்ஷேசன் காரணமாக தமிழில் 1-4-3 என்றபடத்திலும் தெலுங்கில் சில படங்களிலும் குத்து டான்ஸ் ஆட வாய்ப்புக்கள் வந்துள்ளனவாம்.

By Staff

தகர்ந்து போயிருந்த ரம்பாவின் மார்க்கெட் மீண்டும் லேசாக சரியாகியிருக்கிறது. தமிழில் ஒரு படத்தில் மீண்டும் ஹீரோயினாகநடிக்கும் ரம்பாவுக்கு மலையாளத்தில் மார்க்கெட் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

தொடையழகி, கண்ணழகி என ரசிகர்களால் உருகிப் போய் ரசிக்கப்பட்ட ரம்பா இப்போது தமிழில் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். இடையில் கோவிந்தாவின் நட்பால் இந்திக்குப் போனார், அப்படியே மிதுன் சக்ரவர்த்தியுடன் ஏற்பட்ட திடீர் நட்பால்பெங்காலி மொழியிலும் தலை காட்டினார்.

தாய் மொழியான தெலுங்கும் கைவிட, தமிழும் டாட்டா காட்டி விட, மதுரையில் வழக்குகள் அலை அலையாக எழும்பவிரக்தியில் உட்கார்ந்திருந்த ரம்பாவைக் கூப்பிட்டு ஒரு படத்தைக் கொடுத்தது மலையாள திரையுலகம்.


ரசிகன் என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தில் ரம்பாவுக்கு சூப்பர் வேடம். கிளாமருடன் கூடிய அந்தப் படத்தில் தனது முழுத்திறமையையும் காட்டி கலக்கியிருந்தார் ரம்பா.

இப்போது ரசிகன் கேரளா முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி ஆகி விடவே ரம்பாவுக்கு புதிதாக சில படங்கள் வந்துள்ளதாம்.இதனால் குஷியாகியுள்ளார் ரம்பா.

அப்படியே முண்டு கட்டிக் கொண்டு மலையாளத்தில் ஒரு ரவுண்டு அடித்து தனது இமேஜை தூக்கி நிறுத்திக் கொள்ளலாம் என்றுமுடிவு செய்துள்ள ரம்பா, கிளாமருக்கு நோ லிமிட் என்றும் மலையாள தயாரிப்பாளர்களுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளாராம்.


இதற்கிடையே தமிழில் ஸ்ரீ சர்வ சாய் பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் "ஒரு காதலன் ஒரு காதலி என்றபடத்தில் மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார் ராம்பா. இதில் ஹீரோ சரத் என்ற புதுமுகம். (இவரது ஒரிஜினல் பெயர் சந்திரனாம்)

அபிநயஸ்ரீ, தூள் பட வில்லி சொர்ணக்கா சகுந்தலா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தை கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் செல்வேந்திரன்.

இவர் டைரக்டர் ஷங்கரிடம் காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்.மாதேஷ் இயக்கிய மதுர, வெங்கடேஷ் டைரக்ட் செய்த சாக்லேட்ஆகிய படங்களில் உதவியாளராக இருந்துள்ளார்.


நீண்ட காலத்துக்குப் பின் தமிழில் மீண்டும் ஹீரோயினாக களம் காண்பதால் உடலை கிச் என்று குறைத்து நச் என்றுமாற்றியிருக்கிறார் ரம்ப்ஸ்.

பெண் என்றாவே வெறுத்து ஒதுங்கும் ஒருவன் திடீரென ஒரு பெண்ணிடம் காதல் வசப்படுகிறாரானாம். அந்தப் பெண்ணாக ரம்பாநடிக்கிறார். ரம்பாவிடம் அந்த வாலிபன் ஏன் விழுகிறான் என்பது தான் கதையின் கருவாம்.

அதே நேரத்தில் தமிழில் ஒத்தை பாட்டுக்கு இனி ஆட மாட்டேன் என்று தனக்குத் தானே தடா போட்டுக் கொண்ட ரம்பா இப்போதுதனது சுய அரசியல் சட்டத்தில் சின்ன திருத்தம் செய்து மசோதா தாக்கல் செய்திருக்கிறார்.

அதாவது இனி ஒரு பாட்டு என்றாலும் வந்து ஆடுவாராம். இந்த டூல்ஸ் ரிலாக்ஷேசன் காரணமாக தமிழில் 1-4-3 என்றபடத்திலும் தெலுங்கில் சில படங்களிலும் குத்து டான்ஸ் ஆட வாய்ப்புக்கள் வந்துள்ளனவாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X