»   »  சிலு சிலு மழை .. குளு குளு ரம்பா!

சிலு சிலு மழை .. குளு குளு ரம்பா!

Subscribe to Oneindia Tamil

பாயும் புலி என்ற மலையாளப் படத்தில் படு ஜில்லான டான்ஸ் ஒன்றில் தூள் பறத்தியுள்ளாராம் நம்ம ஊரு ரம்பா.

தொடையழகி என ரசிகர்களால் புளகாங்கிதமாக அழைக்கப்பட்ட ரம்பா இப்போது சைலடன்ட் ராணியாகி விட்டார். எம்பிய சினிமாவும் லூஸில்விட்டு விட்டது, நம்பிய அரசியலும் கை விட்டு விட்டது. போக்கிடம் ஏதும் இல்லாமல் கால் போன போக்கில் ஒவ்வொரு திரையுலகமாக விசிட்அடித்து வருகிறார் ரம்பா.

போஜ்பூரியிலும் போய் நடித்துப் பார்த்தார். அங்கு கொஞ்சம் போல கிளிக் ஆகவே சந்தோஷமாகி விட்டார். இப்போது மலையாளத்திலும் தலைகாட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் மலையாளத்தில்தான் அறிமுகமானார் ரம்பா. பின்னர் தெலுங்குக்குப் போனார். அப்படியே தமிழுக்கும் தாவினார். தமிழில் கொஞ்சம்டல் அடித்தபோது மறுபடியும் மலையாளப் பக்கம் போனார். இப்போது மூணாவது வாட்டியாக மலையாளத்திற்குள் நுழைந்துள்ளார்.

கலாபவன் மணியுடன் இணைந்து பாயும் புலி என்ற படத்தில் திறமை காட்டியுள்ள ரம்பா, படு கிளாமரான காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.எடையைக் குறைத்து, இடையின் இறுக்கத்தைக் கூட்டி, கண்ணில் கூடுதல் கிளாமருடன் படு துள்ளலாக படத்தில் வருகிறார் ரம்பா.

ரம்பாவுக்காக ஸ்பெஷலாக ஒரு மழைப் பாட்டையும் இப்படத்தில் வைத்துள்ளார்களாம். படு ஜில்லாக இருக்கிறதாம் இந்தப் பாட்டு. அதற்கு ரம்பாபோட்டுள்ள ஆட்டம், படு சூடாக வந்திருக்கிறதாம்.

ரம்பாவையும் அவர் போட்டுள்ள ஆட்டத்தையும் பார்த்தால் ரசிகர்களுக்கு பல நாட்களுக்கு தூக்கம் வராதாம். படத்தைப் பார்த்து விட்டு துக்கம்வராமல் இருந்தால் சரிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil