»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

"வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா..." ராம்ஜியும், ரசிகா என்று முன்பு அழைக்கப்பட்ட நடிகை சங்கீதாவும் டான்ஸ்மாஸ்டர் கல்யாண் தலைமையிலான நடனக் குழுவினருடன் ஜப்பான் சென்று நடன நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.

இந்திய-ஜப்பான் நல்லுறவை வலுப்படுத்தும் பொருட்டு பல்வேறு கலைக்குழுக்களை இந்தியாவிலிருந்து ஜப்பான்வரவழைத்து, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. தமிழ் சினிமாக்கள் ஜப்பானில் தற்போது பெரும் புகழ்அடைந்திருப்பதால் தமிழகத்திலிருந்தும் ஒரு சினிமா நடனக் குழுவினரை அழைத்துச் செல்ல ஜப்பான்திட்டமிட்டது.

அதன்படி ராம்ஜி, ரசிகா ஆகியோர் இடம் பெறும் இந்தக் குழுவினர் ஜப்பான் செல்கின்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 18 நகரங்களில் இக்குழுவினர் பல நடன நிகழ்ச்சிகளைநடத்துகின்றனர். செப்டம்பர் 11ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும்மேலாகவே இந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ராம்ஜியின் "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா...", "நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும்..." போன்றகலக்கல் பாடல்கள் இங்கே பட்டி-தொட்டியெங்கும் பிரபலமடைந்திருப்பது போல ஜப்பானிலும்பிரபலமாகியிருக்கின்றன.

இதேபோல, ரசிகாவும், பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த பிறகு பிரபலமடைந்தார். எனவே ராம்ஜிக்கும்,ரசிகாவுக்கும் ஜப்பானில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.

Read more about: abroad, cinema, dance, movie, music, ramji, show, tamilnadu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil