ஸ்பெஷல்ஸ்
படையப்பா வெற்றிவிழா மேடையில் ரஜினி பரிசாகக் கொடுத்த வேலில் வைரக்கல் பதித்த செயினை, ரம்யா கழற்றுவதேயில்லை.
எனக்கு சினிமா உலகிற்கு வந்த பிறகு எத்தனையோ பரிசுகள் கிடைத்திருக்கின்றன, என்றாலும் இந்த செயின் விலைமதிக்க முடியாதது. ரஜினி சார்படத்திலே, அவருக்கு சவால் விடும்படியான ஒரு கதாபாத்திரத்திலே நடித்தற்காகவே, அவரே கொடுத்த விருது இது. அதனால் நான் பெருமையடைகிறேன்என்ற அவர் சொன்ன இன்னொரு சேதி:
தெலுங்கில் கோடி ராம கிருஷ்ணா டைரக்ஷனில் அம்மன் (அம்மரு) படத்தில் நடித்ததால் அங்கே உள்ள ரசிகர்கள் என்னைப் பார்க்கும் போது அம்மருஎன்று கையெடுத்து வணங்குகிறார்கள்.
ராஜகாளியம்மன் படம், அதைப் போல தமிழ் நாட்டில் எனக்கு ஒரு மரியாதையை நிச்சயம் ஏற்படுத்தும்என்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications