»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஜெமினி படத்தில் ஓ போட்ட கவர்ச்சி கனல் ராணி கார்த்திக் நடிக்கும் கேம் படத்திலும் அதேபோன்ற ஒரு ஆட்டத்தைப் போட்டுள்ளார்.

ஓ போடுவுக்குக் கிடைத்த அதே பிரபலத்தை ராணியும் பெற்றார். அதற்கு முன்காதல்கோட்டையில் வெள்ளரிக்கா.. பிஞ்சு வெள்ளரிக்காவுக்கு அவர் போட்ட டான்சும் காட்டியகவர்ச்சியும் ராணிக்கு பெயர் வாங்கித்தந்தது.

அந்த வரிசையில் தனக்கு கேம் படமும் பேர் வாங்கித் தரும் என்கிறார் ராணி. உடைகளையும் முடிந்தஅளவுக்குக் குறைத்துள்ளாராம்.

பாலுவிடம் அப்ளிகேஷன்

ஓல்டு ஈஸ் கோல்ட் என்ற பார்முலாவை தனது ஜூலி கணபதியில் கையாண்டு வெற்றி பெற்றுள்ளபாலுமகேந்திராவுக்கு இப்போது பல முன்னாள் நடிகைகளிடமிருந்து ஏகப்பட்ட அப்ளிகேஷன்கள்வந்து கொண்டிருக்கிறதாம்.

மாபெரும் சைசுக்கு வந்துவிட்ட சரிதாவை வைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தைத் தரும் வகையில்ஹாலிவுட் பாணியில் ஜூலி கணபதியைத் தந்துள்ளார் பாலு. சரிதாவின் கேரக்டரை அழுத்தமாகஅமைத்து சர்வதேச தரத்துக்கு கதை சொல்லியிருக்கிறார்.

அவரது முயற்சிக்கு பலனும் கிடைத்துள்ளது. மக்கள் மத்தியில் ஜூலி கணபதி நன்றாகவேபேசப்படுகிறது. இதனால் சரிதாவுக்கு பல வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இதையடுத்து பல முன்னாள் முன்னணி நடிகைகளும் தங்களுக்கும் ஒரு நல்ல நடிக்கும் வாய்ப்பைஏற்படுத்தித் தருமாறு பாலு மகேந்திராவை நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். சம்பளத்தைக் கூட நீங்ககொடுக்கிறத கொடுங்க என்று இறங்கி வந்துள்ளனர்.

ஆனால், யாருக்கும் எந்த உறுதிமொழியையும் தர மறுத்துவிட்டாராம் பாலு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil