ஷீலாவின் மாமி ஆனார் ரஞ்சிதா

By Staff

ஷீலா தெலுங்கில் நடிக்கும் புதிய படத்தில் அவரது மாமியாராக நடிக்கிறார் ரஞ்சிதா.

தெலுங்குப் பெண்ணான ரஞ்சிதா, பாரதிராஜாவின் மோதிரக் கையால் குட்டுப்பட்டு நாடோடித் தென்றல் மூலம் தமிழுக்கு வந்தார். வந்த வேகத்தில் முன்னணி நடிகர்களான கார்த்திக், சத்யராஜ் என பலருடனும் இணைந்து அசத்தினார்.

வாகான உயரம், தோதான அழகு என நேர்த்தியாக இருந்த ரஞ்சிதாவுக்கு அவரது உயரமே வினையாகிப் போனது. உயரமான நடிகர்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து நடிக்க முடியும் என்பதால் குட்டையான நடிகர்கள் ரஞ்சிதாவை நாடவில்லை.

இதனால் குறுகிய கால குமுறலுக்குப் பிறகு வி.ஆர்.எஸ் கொடுத்து விட்டார்கள் ரஞ்சிதாவுக்கு. இதையடுத்து டிவி சீரியல் பக்கம் தாவிய ரஞ்சிதா இப்போது இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.

தனது முதல் படைப்பை இந்தியில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் ரஞ்சிதா. இதற்கான ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து விட்டாராம். இந்த நிலையில் தெலுங்கில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் அப்படத்தில் சாய் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி போடுகிறார் ஜிலு ஜிலு ஷீலா. சாயின் தந்தையாக பானுச்சந்தரும் (முதலில் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக இருந்தது), தாயாக ரஞ்சிதாவும் நடிக்கின்றனர்.

படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள ரஞ்சிதா அதை முடித்துக் கொண்டு மும்பைக்குச் சென்று தனது இந்திப் பட வேலைகளில் மும்முரமாகவுள்ளாராம்.

ஷீலாவுக்கு அழகான மாமியாராக இருப்பாரா அல்லது அடாவடி மாமியாக களேபரம் செய்வாரா, படம் வந்தால் தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X