twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் அரவிந்த்சாமி! அரவிந்த்சாமி ரொம்ப காலத்திற்கு முன்பு நடித்த சாசனம் ஜூலை 28ம் தேதி திரைக்குவருகிறது.ஒரு காலத்தில் இளம்பெண்களின் சார்மிங் பாய் ஆக திகழ்ந்தவர் அரவிந்த்சாமி.மணிரத்தினத்தின் கண்டுபிடிப்பான அரவிந்த்சாமி படு பிசியாக நடித்து வந்தார்.திடீரென திரையுலகிலிருந்து விலகி சர்வதேச கண்சல்ட் நிறுவனம் ஒன்றிற்கு தலைமைஏற்கச் சென்றுவிட்டார்.இப்போது பிஸினஸ் நிமித்தமாக பிஸியாக உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார்.அரவிந்த்சாமி கடைசியாக நடித்த படம் சாசனம். தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்தயாரித்த இந்தப் படத்தை மகேந்திரன் இயக்கினார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்குஜோடியாக ரஞ்சிதா நடித்திருந்தார்.இப்படத்திற்கு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஒதுக்கிய பட்ஜெட் ரூ. 35லட்சம்தான். இதற்குள் படத்தை எடுக்க வேண்டியிருந்ததால் மகேந்திரன் படுசிரமப்பட்டு ஒரு வழியாக ரூ. 50 லட்சம் பட்ஜெட்டில் படத்தை முடித்தார்.காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் கிராமத்தில்தான் முழுப் படத்தையும்எடுத்துள்ளார் மகேந்திரன். நகரத்தார் எனப்படும் நகரத்து செட்டியார்களின்வாழ்ககையை இப்படத்தில் படம் பிடித்துள்ளார் மகேந்திரன்.நகரத்தார்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறையை கதைக்களமாக கொண்டுஇப்படத்தை உருவாக்கியுள்ள மகேந்திரன், இப்படத்தில் நடித்துள்ள அரவிந்த்சாமி,ரஞ்சிதா, கெளதமி ஆகியோரை மேக்கப் போடாமல் இயற்கையாகவே நடிக்கவைத்துள்ளார்.சர்வதேச தரத்தில் இப்படத்தைப் படமாக்கியிருப்பதாக கூறும் மகேந்திரன், படத்தைரிலீஸ் செய்வதற்கு பட்ட பாட்டையே தனிப் படமாக எடுத்து விடலாம். படம் முடிந்துபல வருடங்களாகியும் வெளிவராமல் போனதற்கு தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் அர்த்தமற்ற விதிமுறைகள்தான் காரணம்.இப்போது அத்தனை தடைகளையும் தாண்டி ஒரு வழியாக படம் வெளியாகவுள்ளது.ஜூலை 28ம் தேதி திரையரங்குகளை எட்டிப் பார்க்கவுள்ளது சாசனம்.மகேந்திரன் இயக்கத்தில் உருவான உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே,கோபுங்கள் சாய்வதில்லை, ஜானி, முள்ளும் மலரும் போன்ற அற்புதப் படங்களின்வரிசையில் சாசனமும் சேரும் என்பதில் சந்தேகம் இல்லை.

    By Staff
    |
    அரவிந்த்சாமி ரொம்ப காலத்திற்கு முன்பு நடித்த சாசனம் ஜூலை 28ம் தேதி திரைக்குவருகிறது.ஒரு காலத்தில் இளம்பெண்களின் சார்மிங் பாய் ஆக திகழ்ந்தவர் அரவிந்த்சாமி.மணிரத்தினத்தின் கண்டுபிடிப்பான அரவிந்த்சாமி படு பிசியாக நடித்து வந்தார்.திடீரென திரையுலகிலிருந்து விலகி சர்வதேச கண்சல்ட் நிறுவனம் ஒன்றிற்கு தலைமைஏற்கச் சென்றுவிட்டார்.

    இப்போது பிஸினஸ் நிமித்தமாக பிஸியாக உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

    அரவிந்த்சாமி கடைசியாக நடித்த படம் சாசனம். தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்தயாரித்த இந்தப் படத்தை மகேந்திரன் இயக்கினார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்குஜோடியாக ரஞ்சிதா நடித்திருந்தார்.

    இப்படத்திற்கு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஒதுக்கிய பட்ஜெட் ரூ. 35லட்சம்தான். இதற்குள் படத்தை எடுக்க வேண்டியிருந்ததால் மகேந்திரன் படுசிரமப்பட்டு ஒரு வழியாக ரூ. 50 லட்சம் பட்ஜெட்டில் படத்தை முடித்தார்.

    காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் கிராமத்தில்தான் முழுப் படத்தையும்எடுத்துள்ளார் மகேந்திரன். நகரத்தார் எனப்படும் நகரத்து செட்டியார்களின்வாழ்ககையை இப்படத்தில் படம் பிடித்துள்ளார் மகேந்திரன்.

    நகரத்தார்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறையை கதைக்களமாக கொண்டுஇப்படத்தை உருவாக்கியுள்ள மகேந்திரன், இப்படத்தில் நடித்துள்ள அரவிந்த்சாமி,ரஞ்சிதா, கெளதமி ஆகியோரை மேக்கப் போடாமல் இயற்கையாகவே நடிக்கவைத்துள்ளார்.

    சர்வதேச தரத்தில் இப்படத்தைப் படமாக்கியிருப்பதாக கூறும் மகேந்திரன், படத்தைரிலீஸ் செய்வதற்கு பட்ட பாட்டையே தனிப் படமாக எடுத்து விடலாம். படம் முடிந்துபல வருடங்களாகியும் வெளிவராமல் போனதற்கு தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் அர்த்தமற்ற விதிமுறைகள்தான் காரணம்.

    இப்போது அத்தனை தடைகளையும் தாண்டி ஒரு வழியாக படம் வெளியாகவுள்ளது.ஜூலை 28ம் தேதி திரையரங்குகளை எட்டிப் பார்க்கவுள்ளது சாசனம்.

    மகேந்திரன் இயக்கத்தில் உருவான உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே,கோபுங்கள் சாய்வதில்லை, ஜானி, முள்ளும் மலரும் போன்ற அற்புதப் படங்களின்வரிசையில் சாசனமும் சேரும் என்பதில் சந்தேகம் இல்லை.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X