படமெடுக்கும் ரஞ்சிதா நெட்ட நெடு குதிரை என்று பெயரெடுத்த ரஞ்சிதா இயக்குனர் அவதாரம் பூண்டுள்ளார்.பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான ரஞ்சிதா, தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஒருரவுண்டு கட்டியவர். குறிப்பாக சத்யராஜ், நெப்போலியன் போன்ற வளர்த்தியானஹீரோக்களுடன் செமத்தியாக நடித்தவர்.தமிழ் சினிமா கண்ட புத்திசாலி நடிகைகளில் ரஞ்சிதாவும் ஒருவர். நிறைய புத்தகம்படிப்பார், உலக விஷயங்களை விரல் நக நுனியில் வைத்திருப்பார். உள்ளூர் முதல்அண்டார்டிகா வரை நடக்கும் அன்றாட மேட்டர்கள் அம்மணிக்கு அத்துப்படி.சினிமாவில் பிசியாக இருந்தபோதே கேரளாவைச் சேர்ந்த ராணுவ கேப்டன் ஒருவரைகரம் பிடித்து செட்டிலானார் ரஞ்சிதா. ஆடின காலு சும்மா இருக்குமோ?திருமணமான கொஞ்ச காலத்திலேயே மீண்டும் நடிக்க வந்தார். விட்டுப் போன இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட சுந்தரிகள் கோலிவுட்டை கிளாமர்களமாக்கி விட, வயது போய், கிளாமரும் போய் விட்ட ரஞ்சிதாவுக்கு வஸ்தியானவாய்ப்புகள் வரவில்லை.மாறாக அக்கா, அண்ணி, ஆத்தா வேடம்தான் காத்திருந்தது. அஜீத்துக்கு அண்ணியாகஒரு படத்தில் நடிக்கச் சொன்னபோது, கால்ஷீட் கேட்டு வந்தவர்களைவிரட்டியடித்துவிட்டு, அதே வேகத்தில் டிவி பக்கம் கண்ணை ஓட விட்டார் ரஞ்சிதா.ரோஜா என்ற சீரியல் அவருக்காக காத்துக் கொண்டிருந்தது. கப்பென்று அதைப்பிடித்துக் கொண்ட ரஞ்சிதா, ரொம்ப நாளாக அந்த சீரியலில் நடித்துக் கொண்டுள்ளார்.சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும், சினிமா ஆசையை அவர் விட்டு விடவில்லை.சரியான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.திரைப்பட விழாக்கள் எதையும் விடாமல் கலந்து கொண்டார். எல்லா விழாக்களிலும்ரஞ்சிதா அட்டகாச கெட்டப்புடன், கிளாமர் காஸ்ட்யூடன் வந்து போனதால் விழவேண்டிய சிலரின் கண்களில் கரெக்டாக விழுந்தார், ஆனாலும் வாய்ப்புகளைத்தான்காணவில்லை.இதனால் இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இத்தனை கால சினிமா அனுபவத்தைவைத்து படத்தை இயக்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளார் ரஞ்சிதா.முதல் போணியாக இந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். கதையை ரெடி செய்துவிட்ட ரஞ்சிதா, ஆர்ட்டிஸ்டுகளை வலை வீசித் தேடி வருகிறாராம்.அவரது கதையின் நாயகிதான் படத்திற்கு ஆணி வேராம். அதனால் முதலில்ஹீரோயினை முடிவு செய்ய திட்டமிட்டுள்ள ரஞ்சிதா, இந்தி திரையுலகின் இம்சைஅழகி கரீனா கபூரை அணுகியுள்ளார்.கதையைக் கேட்டுள்ள கரீனா, கால்ஷீட் கொடுப்பதற்காக தேதிகளை அட்ஜஸ்ட்செய்து கொண்டிருக்கிறாராம். ஜூன் மாதம் ஷூட்டிங்கை ஆரம்பிக்கதிட்டமிட்டுள்ளார்.முதலில் இந்திப் படம். அப்புறம் அதே கதையை தமிழிலும் எடுக்கத்திட்டமிட்டுள்ளேன். எடுத்தவுடனேயே இங்கு வந்தால் அட இவருக்கு என்ன தெரியும்என்பது போல இளக்காரமாக பார்க்கும் ஆட்கள் இங்கு நிறைய. அதனால்தான்முதலில் இந்தி, அப்புறம் தமிழ் என திட்டமிட்டுள்ளேன் என்று புன்னகையுடன்கூறுகிறார் ரஞ்சிதா.நடிப்பில் ஓரளவு சாதித்து விட்டேன் (அப்டியா?). இயக்கத்திலும் சாதிக்க வேண்டும்.இதில் எனக்கு ரேவதிதான் இன்ஸ்பிரேஷன் என்கிறார் படு தெம்பாக.ரொம்ப தைரியம்...

By Staff
நெட்ட நெடு குதிரை என்று பெயரெடுத்த ரஞ்சிதா இயக்குனர் அவதாரம் பூண்டுள்ளார்.

பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான ரஞ்சிதா, தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஒருரவுண்டு கட்டியவர். குறிப்பாக சத்யராஜ், நெப்போலியன் போன்ற வளர்த்தியானஹீரோக்களுடன் செமத்தியாக நடித்தவர்.

தமிழ் சினிமா கண்ட புத்திசாலி நடிகைகளில் ரஞ்சிதாவும் ஒருவர். நிறைய புத்தகம்படிப்பார், உலக விஷயங்களை விரல் நக நுனியில் வைத்திருப்பார். உள்ளூர் முதல்அண்டார்டிகா வரை நடக்கும் அன்றாட மேட்டர்கள் அம்மணிக்கு அத்துப்படி.

சினிமாவில் பிசியாக இருந்தபோதே கேரளாவைச் சேர்ந்த ராணுவ கேப்டன் ஒருவரைகரம் பிடித்து செட்டிலானார் ரஞ்சிதா. ஆடின காலு சும்மா இருக்குமோ?

திருமணமான கொஞ்ச காலத்திலேயே மீண்டும் நடிக்க வந்தார்.

விட்டுப் போன இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட சுந்தரிகள் கோலிவுட்டை கிளாமர்களமாக்கி விட, வயது போய், கிளாமரும் போய் விட்ட ரஞ்சிதாவுக்கு வஸ்தியானவாய்ப்புகள் வரவில்லை.

மாறாக அக்கா, அண்ணி, ஆத்தா வேடம்தான் காத்திருந்தது. அஜீத்துக்கு அண்ணியாகஒரு படத்தில் நடிக்கச் சொன்னபோது, கால்ஷீட் கேட்டு வந்தவர்களைவிரட்டியடித்துவிட்டு, அதே வேகத்தில் டிவி பக்கம் கண்ணை ஓட விட்டார் ரஞ்சிதா.

ரோஜா என்ற சீரியல் அவருக்காக காத்துக் கொண்டிருந்தது. கப்பென்று அதைப்பிடித்துக் கொண்ட ரஞ்சிதா, ரொம்ப நாளாக அந்த சீரியலில் நடித்துக் கொண்டுள்ளார்.

சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும், சினிமா ஆசையை அவர் விட்டு விடவில்லை.சரியான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.

திரைப்பட விழாக்கள் எதையும் விடாமல் கலந்து கொண்டார். எல்லா விழாக்களிலும்ரஞ்சிதா அட்டகாச கெட்டப்புடன், கிளாமர் காஸ்ட்யூடன் வந்து போனதால் விழவேண்டிய சிலரின் கண்களில் கரெக்டாக விழுந்தார், ஆனாலும் வாய்ப்புகளைத்தான்காணவில்லை.

இதனால் இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இத்தனை கால சினிமா அனுபவத்தைவைத்து படத்தை இயக்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளார் ரஞ்சிதா.

முதல் போணியாக இந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். கதையை ரெடி செய்துவிட்ட ரஞ்சிதா, ஆர்ட்டிஸ்டுகளை வலை வீசித் தேடி வருகிறாராம்.

அவரது கதையின் நாயகிதான் படத்திற்கு ஆணி வேராம். அதனால் முதலில்ஹீரோயினை முடிவு செய்ய திட்டமிட்டுள்ள ரஞ்சிதா, இந்தி திரையுலகின் இம்சைஅழகி கரீனா கபூரை அணுகியுள்ளார்.

கதையைக் கேட்டுள்ள கரீனா, கால்ஷீட் கொடுப்பதற்காக தேதிகளை அட்ஜஸ்ட்செய்து கொண்டிருக்கிறாராம். ஜூன் மாதம் ஷூட்டிங்கை ஆரம்பிக்கதிட்டமிட்டுள்ளார்.

முதலில் இந்திப் படம். அப்புறம் அதே கதையை தமிழிலும் எடுக்கத்திட்டமிட்டுள்ளேன். எடுத்தவுடனேயே இங்கு வந்தால் அட இவருக்கு என்ன தெரியும்என்பது போல இளக்காரமாக பார்க்கும் ஆட்கள் இங்கு நிறைய. அதனால்தான்முதலில் இந்தி, அப்புறம் தமிழ் என திட்டமிட்டுள்ளேன் என்று புன்னகையுடன்கூறுகிறார் ரஞ்சிதா.

நடிப்பில் ஓரளவு சாதித்து விட்டேன் (அப்டியா?). இயக்கத்திலும் சாதிக்க வேண்டும்.இதில் எனக்கு ரேவதிதான் இன்ஸ்பிரேஷன் என்கிறார் படு தெம்பாக.

ரொம்ப தைரியம்...

Read more about: ranjitha to direct a movie
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X