»   »  கேம் ஆடும் சங்கீதா!

கேம் ஆடும் சங்கீதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உயிர் சங்கீதா இப்போது டிவி பெட்டிக்கும் தாவியுள்ளார்.

பல படங்களில் திடித்திருந்தாலும் முன்னாள் ரசிகாவான, இன்னாள் சங்கீதாவுக்கு உயிர் படம்தான் உயிர்கொடுத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து நிறையப் படங்கள் சங்கீதாவைத் தேடி வந்தது. அத்தனையிலும் வித்தியாசமானகதாபாத்திரம்தான். அதில் தனம் என்ற படத்திலும், காசு என்ற படத்திலும் நடித்து வருகிறார் சங்கீதா.

காசு படத்தில் அவருக்கு கலக்கான பல காட்சிகள் பளீரிடும் வகையில் இடம் பெற்றுள்ளதாம். அதிலும் மழையில்நனைந்து அவர் போட்டும் ஆட்டம், பாட்டம், ரசிகர்களுக்கு மனதில் திண்டாட்டத்தை ஏற்படுத்தப் போவதுதிண்ணம் என்கிறது பட யூனிட்.

இந்த மழைப் பாட்டில் சங்கீதா, மதமதக்க ஆடி அசத்தியுள்ளாராம். இப்படிப் படங்களில் ஒருபுறம் பிசியாகஇருந்தாலும், மறுபுறம் ராஜ் டிவிக்காக கேம் ஷோ ஒன்றையும் நடத்த ஒத்துக் கொண்டிருக்கிறார் சங்கீதா.

திங்கள் முதல் வியாழக்கிழமை வரை சுமார் ஒரு மணி நேரம் நடக்கும் இந்த கேம் ஷோவுக்கு காசு மழை என்றுபெயரிட்டுள்ளனர். இதில் வெற்றி பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் வரை பரிசுத் தொகை அளிக்கிறார்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால் போட்டியின் ஒவ்வொரு சுற்றிலும் பங்கேற்பவர்களுக்கு நிச்சயப் பரிசுஉண்டாம். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு சங்கீதாவுக்கு செமத்தியான டப்பை சம்பளமாக கொடுக்கிறதாம் ராஜ்டிவி.

எல்லோருக்கும் முதல் படம் சரியாக ஓடாவிட்டால் ராசியில்லாத நடிகை என்ற பெயர் கிடைக்கும். ஆனால் பலபடங்கள் சரியாக ஓடாமல் இருந்த நிலையிலும் திடீரென வந்த உயிரால் சங்கீதாவின் மார்க்கெட்டுக்கு புத்துயிர்கிடைத்துள்ளது.

சங்கீதாவுடன் நடிக்கும் ஹீரோ உள்ளிட்டவர்களை விட்டு விட்டு சங்கீதாவின் படத்தை பிரமாண்டமாகப் போட்டுபிரமாமதமாக விளம்பரம் செய்யும் அளவுக்கு சங்கீதாவுக்கு பிரபல்யம் கிடைத்துள்ளதை கோலிவுட்காரர்கள்பெருத்த ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

இப்போது அவர் நடிக்கும் தனம் படத்திற்கும் கூட சங்கீதாவின் கேரக்டரையே படத்தின் டைட்டிலாகவைத்துள்ளனர்.

கிட்டத்தட்ட பொம்பள ரஜினி கணக்கில் சங்கீதாவின் வளர்ச்சி பாய்ச்சல் போட ஆரம்பித்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil