twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    47 ஏ, பெசன்ட் ரோடு வரை... தமிழ் சினிமாவில் டைட்டில் வைப்பதில், கோலிவுட்காரர்களை மிஞ்ச ஆளே கிடையாது. படு டிபிக்கலாக பெயர் வைப்பார்கள்.ஏதாவது ஒரு படத்தின் டைட்டில் ஹிட் ஆகி விட்டால், அதே பாணி டைட்டிலில் குறைந்தது 10 படங்களாக எடுத்துத் தள்ளிவிடுவார்கள். இது அந்தக் காலம் முதலே தொடர்கிறது.காதல் படம் ஹிட் ஆனாலும் ஆனது, உடனே காதல் திருடன் என்றெல்லாம் பெயர் வைத்து படங்கள் எடுக்கப்பட்டன.ஆட்டோகிராப் வெற்றி பெற்றதால், சேரனே, தனது அடுத்த படத்திற்கு ஆல்பம் என்று பெயர் வைத்தது பின்னர் மாற்றியதுநினைவிருக்கலாம்.செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் புதுப்பேட்டை. இந்தப் பெயர் ஹிட் ஆகி விட்டதால், திரைப்பட சேம்பரில் பலபெயர்கள் இதே பாணியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு, தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடு என்று இரண்டு புதிய பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதுவாவது பரவாயில்லை, இன்னொரு படத்தின் பெயர் என்ன தெரியுமா?47 ஏ, பெசன்ட் நகர் வரை!!. முதலில் இந்தப் படத்தின் பெயர் மனசுக்குள் வரலாமா என்ற அழகான தலைப்பில் தான் இருந்தது.ஆனால், 5 வருடமாக தயாரிப்பிலேயே இருந்தது. காரணம், தயாரிப்பாளரிடம் துட்டு இல்லை.ஆனால், தலைப்பில் தான் பிரச்சனையே என்று நியூமராலஜி ஆசாமிகள் சிலர் எடுத்துவிட, அவர்களது யோசனைப்படி படத்தலைப்பை மாற்றிவிட்டார்கள்.லேட்டஸ்ட் டிரண்ட் என்ற பெயரில் அறிவுரை தந்து படத்தின் பெயரை 47 ஏ, பெசன்ட் நகர் வரை என்று மாற்றிவிட்டார்கள்கோலிவுட் புண்ணியவான்கள்.இதையடுத்து இதே பாணியில் மேலும் பல பெயர்கள் பதிவாகியுள்ளனவாம்.டைட்டில் வைப்பதில்தான் நம்மவர்கள் ரொம்ப அக்கறை காட்டுவார்கள். ஆனால் கதையில் பெரிய ஓட்டையைப் போட்டு விட்டுபோய்க் கொண்டே இருப்பார்கள். ஹோட்டலில் ரூம் போட்டு, தண்ணியடித்து, பிரியாணி சாப்பிட்டு, டிஸ்கசன் நடத்தியும் கதைசரியாக அமையாவிட்டால் ரகஸ்யாவையோ, லிண்டாவையோ போட்டு "ரொப்பி" விடுவார்கள்.அடுத்து குயில் குப்பம், டுமீல் குப்பல் என்று கூட பெயர்கள் பதிவு செய்யப்பட்டாலும் நீங்கள் ஆச்சரியப்படக் கூடாது.இந்த 47 ஏ, பெசன்ட் நகர் பஸ் ரூட்டில் போகப் போவது.. ஸாரி நடிக்கப் போவது ரசிகா (அதாவது இப்போது சங்கீதா), அப்பாஸ்மற்றும் ரவளி.இந்தப் படத்தில் நடிக்க வந்தபோது ரசிகா, 55 கிலோ இருந்தார். இப்போது 70 கிலோ ஆகிவிட்டார். ரவளி ஆளையேகாணவில்லை. அப்பாஸ் கையிலும் வாய்ப்புக்கள் ஏதுமில்லை. இதனால், அப்படியே ஒரு ஓரமாக வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.இப்போது மீண்டும் படத்தை எடுக்க காசு தேர்த்திவிட்டதால், படத்தை மீண்டும் எடுக்க முடிவு செய்து, இவர்களை எல்லாம்மீண்டும் நடிக்க வரச் சொல்லியிருக்கிறார்கள். இவர்களுக்கும் வேறு படங்கள் ஏதும் இல்லாததால், உடனே நடிக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்இந்து, கே.ஆர். வத்சலா ஆகிய திரை நிரப்பும் நடிகைகளும் படத்தில் உண்டு. படத்தை இயக்குவது கவுதம் கிருஷ்ணா என்றபுதியவர்.சின்னப் பையன் அப்பாசுக்கும் சங்கீதா, ரவளிக்கு இடையே ஒரு பஸ்சில் நடக்கும் காதல் கதையாம்.ரைட்.. ரைட்.., போட்டும் போட்டும்..

    By Staff
    |

    தமிழ் சினிமாவில் டைட்டில் வைப்பதில், கோலிவுட்காரர்களை மிஞ்ச ஆளே கிடையாது. படு டிபிக்கலாக பெயர் வைப்பார்கள்.

    ஏதாவது ஒரு படத்தின் டைட்டில் ஹிட் ஆகி விட்டால், அதே பாணி டைட்டிலில் குறைந்தது 10 படங்களாக எடுத்துத் தள்ளிவிடுவார்கள். இது அந்தக் காலம் முதலே தொடர்கிறது.

    காதல் படம் ஹிட் ஆனாலும் ஆனது, உடனே காதல் திருடன் என்றெல்லாம் பெயர் வைத்து படங்கள் எடுக்கப்பட்டன.ஆட்டோகிராப் வெற்றி பெற்றதால், சேரனே, தனது அடுத்த படத்திற்கு ஆல்பம் என்று பெயர் வைத்தது பின்னர் மாற்றியதுநினைவிருக்கலாம்.

    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் புதுப்பேட்டை. இந்தப் பெயர் ஹிட் ஆகி விட்டதால், திரைப்பட சேம்பரில் பலபெயர்கள் இதே பாணியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு, தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடு என்று இரண்டு புதிய பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதுவாவது பரவாயில்லை, இன்னொரு படத்தின் பெயர் என்ன தெரியுமா?

    47 ஏ, பெசன்ட் நகர் வரை!!. முதலில் இந்தப் படத்தின் பெயர் மனசுக்குள் வரலாமா என்ற அழகான தலைப்பில் தான் இருந்தது.ஆனால், 5 வருடமாக தயாரிப்பிலேயே இருந்தது. காரணம், தயாரிப்பாளரிடம் துட்டு இல்லை.

    ஆனால், தலைப்பில் தான் பிரச்சனையே என்று நியூமராலஜி ஆசாமிகள் சிலர் எடுத்துவிட, அவர்களது யோசனைப்படி படத்தலைப்பை மாற்றிவிட்டார்கள்.

    லேட்டஸ்ட் டிரண்ட் என்ற பெயரில் அறிவுரை தந்து படத்தின் பெயரை 47 ஏ, பெசன்ட் நகர் வரை என்று மாற்றிவிட்டார்கள்கோலிவுட் புண்ணியவான்கள்.

    இதையடுத்து இதே பாணியில் மேலும் பல பெயர்கள் பதிவாகியுள்ளனவாம்.

    டைட்டில் வைப்பதில்தான் நம்மவர்கள் ரொம்ப அக்கறை காட்டுவார்கள். ஆனால் கதையில் பெரிய ஓட்டையைப் போட்டு விட்டுபோய்க் கொண்டே இருப்பார்கள். ஹோட்டலில் ரூம் போட்டு, தண்ணியடித்து, பிரியாணி சாப்பிட்டு, டிஸ்கசன் நடத்தியும் கதைசரியாக அமையாவிட்டால் ரகஸ்யாவையோ, லிண்டாவையோ போட்டு "ரொப்பி" விடுவார்கள்.

    அடுத்து குயில் குப்பம், டுமீல் குப்பல் என்று கூட பெயர்கள் பதிவு செய்யப்பட்டாலும் நீங்கள் ஆச்சரியப்படக் கூடாது.

    இந்த 47 ஏ, பெசன்ட் நகர் பஸ் ரூட்டில் போகப் போவது.. ஸாரி நடிக்கப் போவது ரசிகா (அதாவது இப்போது சங்கீதா), அப்பாஸ்மற்றும் ரவளி.

    இந்தப் படத்தில் நடிக்க வந்தபோது ரசிகா, 55 கிலோ இருந்தார். இப்போது 70 கிலோ ஆகிவிட்டார். ரவளி ஆளையேகாணவில்லை. அப்பாஸ் கையிலும் வாய்ப்புக்கள் ஏதுமில்லை. இதனால், அப்படியே ஒரு ஓரமாக வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

    இப்போது மீண்டும் படத்தை எடுக்க காசு தேர்த்திவிட்டதால், படத்தை மீண்டும் எடுக்க முடிவு செய்து, இவர்களை எல்லாம்மீண்டும் நடிக்க வரச் சொல்லியிருக்கிறார்கள். இவர்களுக்கும் வேறு படங்கள் ஏதும் இல்லாததால், உடனே நடிக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்

    இந்து, கே.ஆர். வத்சலா ஆகிய திரை நிரப்பும் நடிகைகளும் படத்தில் உண்டு. படத்தை இயக்குவது கவுதம் கிருஷ்ணா என்றபுதியவர்.

    சின்னப் பையன் அப்பாசுக்கும் சங்கீதா, ரவளிக்கு இடையே ஒரு பஸ்சில் நடக்கும் காதல் கதையாம்.

    ரைட்.. ரைட்.., போட்டும் போட்டும்..

      Read more about: 47 a besant road varai
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X