»   »  அண்ணியானார் ரசிகா தொடர்ந்து பாண்டியராஜன் மாதிரியான ஆசாமிகளுடன் ஜோடியாக நடித்து தனது தலையில் மண்ணைப் போட்டுக் கொண்டரசிகா என்ற சங்கீதா இப்போது வேறு வழியில்லாமல் அண்ணி கேரக்டருக்குத் தயாராகிவிட்டார்.கட்டுக்கடங்காத இளமைக்கும் அதை மறைக்காமல் காட்டும் திறமைக்கும் பெயர் போனவர் ரசிகா.தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த இவர் அப்போது தெலுங்கில் பிரபலமாக இருந்த மந்த்ரா, தமிழில் பிரபலமாக இருந்த மீனாபோன்ற மலைகளுடன் மோதியவர்.தமிழில் தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், யாருக்கு ஜோடியாக.. பாண்டியராஜன், பிரபுதேவாபோன்றவர்களுடன். இதனால் இவருடன் இளவட்டங்கள் யாரும் கூட்டு சேர முன் வரவில்லை.மேலும் பெரிசுகளும் இவரை ஒதுக்கிவிட்டன. இதனால் கிளம்பிய இடமான தெலுங்குக்கே போனார். ஆனால், பெயரை சங்கீதாஎன்று மாற்றிக் கொண்டார். பெயர் மாறினாலும் ரசிகாவுக்கு ராசி மாறவில்லை. அங்கு இரட்டை ஹீரோயின்களில் செகண்ட்ஹீரோயினாகவே இதுவரை காலம் கடத்தி வந்தார். இந் நிலையில் தான் இவரை பிதாமகன் படத்தில் நடிக்கக் கூப்பிட்டார் பாலா. கஞ்சா விற்கும் பெண்மணியாக கச்சிதமாகப்பொருந்திய ரசிகாவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், அடுத்து படங்கள் தான் கிடைக்கவில்லை.தெலுங்கிலும் மார்க்கெட்டில் பெரும் சரிவு. கல்யாணம் வரை வீட்டில் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக இப்போதுதெலுங்கில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டார் ரசிகா.தமிழிலும் ஒத்தை பாட்டுக்கு ஆட ரெடி என்று தாக்கீது அனுப்பினார் ரசிகா. ஆனால், ஒரு பாட்டுக்கு ஆட சான்ஸ் வரவில்லை.மாறாக அண்ணியாக நடிக்க அழைப்பு வந்துள்ளது.ஸ்ரீகாந்த் நடிக்கும் உயிர் என்ற படத்தில் தான் அவருக்கு அண்ணியாக நடிக்கக் கூப்பிட்டிருக்கிறார்களாம். சாமி என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.பார்க்க கொஞ்சம் முத்தலாக இருந்தாலும் ரசிகாவுக்கும் ஸ்ரீகாந்த் வயசு தானாம். ஆனாலும் வேறு பட வாய்ப்புக்களே இல்லாதநிலையில் அண்ணியாக நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம்.இதையடுத்து விரைவில் தெலுங்கிலும் அண்ணி, அம்மா கேரக்டர்களையும் ஒப்புக் கொண்டுவிடுவார் என்கிறார்கள்.உயிர் படத்தின் கதையில் ரொம்ப முக்கியமான கேரக்டர் இது. அதனால் தான் அண்ணி ரோலுக்கு ஒத்துக்கிட்டேன் என்று கூறும்ரசிகா, தொடர்ந்து கோடம்பாக்கத்தில் சிங்கிள் டான்சுக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.அவரது முயற்சி வெல்ல வாழ்த்துவோம்.

அண்ணியானார் ரசிகா தொடர்ந்து பாண்டியராஜன் மாதிரியான ஆசாமிகளுடன் ஜோடியாக நடித்து தனது தலையில் மண்ணைப் போட்டுக் கொண்டரசிகா என்ற சங்கீதா இப்போது வேறு வழியில்லாமல் அண்ணி கேரக்டருக்குத் தயாராகிவிட்டார்.கட்டுக்கடங்காத இளமைக்கும் அதை மறைக்காமல் காட்டும் திறமைக்கும் பெயர் போனவர் ரசிகா.தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த இவர் அப்போது தெலுங்கில் பிரபலமாக இருந்த மந்த்ரா, தமிழில் பிரபலமாக இருந்த மீனாபோன்ற மலைகளுடன் மோதியவர்.தமிழில் தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், யாருக்கு ஜோடியாக.. பாண்டியராஜன், பிரபுதேவாபோன்றவர்களுடன். இதனால் இவருடன் இளவட்டங்கள் யாரும் கூட்டு சேர முன் வரவில்லை.மேலும் பெரிசுகளும் இவரை ஒதுக்கிவிட்டன. இதனால் கிளம்பிய இடமான தெலுங்குக்கே போனார். ஆனால், பெயரை சங்கீதாஎன்று மாற்றிக் கொண்டார். பெயர் மாறினாலும் ரசிகாவுக்கு ராசி மாறவில்லை. அங்கு இரட்டை ஹீரோயின்களில் செகண்ட்ஹீரோயினாகவே இதுவரை காலம் கடத்தி வந்தார். இந் நிலையில் தான் இவரை பிதாமகன் படத்தில் நடிக்கக் கூப்பிட்டார் பாலா. கஞ்சா விற்கும் பெண்மணியாக கச்சிதமாகப்பொருந்திய ரசிகாவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், அடுத்து படங்கள் தான் கிடைக்கவில்லை.தெலுங்கிலும் மார்க்கெட்டில் பெரும் சரிவு. கல்யாணம் வரை வீட்டில் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக இப்போதுதெலுங்கில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டார் ரசிகா.தமிழிலும் ஒத்தை பாட்டுக்கு ஆட ரெடி என்று தாக்கீது அனுப்பினார் ரசிகா. ஆனால், ஒரு பாட்டுக்கு ஆட சான்ஸ் வரவில்லை.மாறாக அண்ணியாக நடிக்க அழைப்பு வந்துள்ளது.ஸ்ரீகாந்த் நடிக்கும் உயிர் என்ற படத்தில் தான் அவருக்கு அண்ணியாக நடிக்கக் கூப்பிட்டிருக்கிறார்களாம். சாமி என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.பார்க்க கொஞ்சம் முத்தலாக இருந்தாலும் ரசிகாவுக்கும் ஸ்ரீகாந்த் வயசு தானாம். ஆனாலும் வேறு பட வாய்ப்புக்களே இல்லாதநிலையில் அண்ணியாக நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம்.இதையடுத்து விரைவில் தெலுங்கிலும் அண்ணி, அம்மா கேரக்டர்களையும் ஒப்புக் கொண்டுவிடுவார் என்கிறார்கள்.உயிர் படத்தின் கதையில் ரொம்ப முக்கியமான கேரக்டர் இது. அதனால் தான் அண்ணி ரோலுக்கு ஒத்துக்கிட்டேன் என்று கூறும்ரசிகா, தொடர்ந்து கோடம்பாக்கத்தில் சிங்கிள் டான்சுக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.அவரது முயற்சி வெல்ல வாழ்த்துவோம்.

Subscribe to Oneindia Tamil

தொடர்ந்து பாண்டியராஜன் மாதிரியான ஆசாமிகளுடன் ஜோடியாக நடித்து தனது தலையில் மண்ணைப் போட்டுக் கொண்டரசிகா என்ற சங்கீதா இப்போது வேறு வழியில்லாமல் அண்ணி கேரக்டருக்குத் தயாராகிவிட்டார்.

கட்டுக்கடங்காத இளமைக்கும் அதை மறைக்காமல் காட்டும் திறமைக்கும் பெயர் போனவர் ரசிகா.

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த இவர் அப்போது தெலுங்கில் பிரபலமாக இருந்த மந்த்ரா, தமிழில் பிரபலமாக இருந்த மீனாபோன்ற மலைகளுடன் மோதியவர்.

தமிழில் தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், யாருக்கு ஜோடியாக.. பாண்டியராஜன், பிரபுதேவாபோன்றவர்களுடன். இதனால் இவருடன் இளவட்டங்கள் யாரும் கூட்டு சேர முன் வரவில்லை.


மேலும் பெரிசுகளும் இவரை ஒதுக்கிவிட்டன. இதனால் கிளம்பிய இடமான தெலுங்குக்கே போனார். ஆனால், பெயரை சங்கீதாஎன்று மாற்றிக் கொண்டார். பெயர் மாறினாலும் ரசிகாவுக்கு ராசி மாறவில்லை. அங்கு இரட்டை ஹீரோயின்களில் செகண்ட்ஹீரோயினாகவே இதுவரை காலம் கடத்தி வந்தார்.

இந் நிலையில் தான் இவரை பிதாமகன் படத்தில் நடிக்கக் கூப்பிட்டார் பாலா. கஞ்சா விற்கும் பெண்மணியாக கச்சிதமாகப்பொருந்திய ரசிகாவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், அடுத்து படங்கள் தான் கிடைக்கவில்லை.

தெலுங்கிலும் மார்க்கெட்டில் பெரும் சரிவு. கல்யாணம் வரை வீட்டில் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக இப்போதுதெலுங்கில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டார் ரசிகா.

தமிழிலும் ஒத்தை பாட்டுக்கு ஆட ரெடி என்று தாக்கீது அனுப்பினார் ரசிகா. ஆனால், ஒரு பாட்டுக்கு ஆட சான்ஸ் வரவில்லை.மாறாக அண்ணியாக நடிக்க அழைப்பு வந்துள்ளது.


ஸ்ரீகாந்த் நடிக்கும் உயிர் என்ற படத்தில் தான் அவருக்கு அண்ணியாக நடிக்கக் கூப்பிட்டிருக்கிறார்களாம். சாமி என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.

பார்க்க கொஞ்சம் முத்தலாக இருந்தாலும் ரசிகாவுக்கும் ஸ்ரீகாந்த் வயசு தானாம். ஆனாலும் வேறு பட வாய்ப்புக்களே இல்லாதநிலையில் அண்ணியாக நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம்.

இதையடுத்து விரைவில் தெலுங்கிலும் அண்ணி, அம்மா கேரக்டர்களையும் ஒப்புக் கொண்டுவிடுவார் என்கிறார்கள்.

உயிர் படத்தின் கதையில் ரொம்ப முக்கியமான கேரக்டர் இது. அதனால் தான் அண்ணி ரோலுக்கு ஒத்துக்கிட்டேன் என்று கூறும்ரசிகா, தொடர்ந்து கோடம்பாக்கத்தில் சிங்கிள் டான்சுக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

அவரது முயற்சி வெல்ல வாழ்த்துவோம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil