»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

கைவசம் அதிகப் படங்கள் இல்லாத நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்துகொண்டிருக்கிறார் ரதி.

"சொல்ல மறந்த கதை"யில் அசத்தலான குடும்பப் பெண்ணாக வந்து நடிப்பில் கவர்ந்த ரதி, அதற்குப்பின் சொல்லிக் கொள்ளும்படியாகப் படம் கொடுக்கவில்லை.

இந்நிலையில், "கவர்ச்சி காட்டினால்தான் கோலிவுட்டில் பிழைக்க முடியும் தாயே" என்று ரதியிடம் சிலதயாரிப்பாளர்கள் கோடிட்டுக் காட்டினர்.

ஆனால் "அதெல்லாம் முடியாது. கவர்ச்சி இல்லாமலே சாதிப்பேன்" என்று ரதி கூறிக் கொண்டிருந்தார்.

மேலும் அதிக வாய்ப்புகள் கிடைக்குமே என்று கூறி குறைவான சம்பளத்துக்கே நடிக்கத் தயாராகஇருந்தார். இப்போதைக்கு கிடைக்கும் சம்பளத்தில் நிறையப் படங்கள் பண்ணிவிட்டு பின்னர்சம்பளத்தை நன்கு ஏற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் திட்டம் போட்டிருந்தார்.

ஆனால் ரதியின் வீட்டுக் கதவைத் தட்ட எந்தத் தயாரிப்பாளரும் தயாராக இல்லை. இப்போதுஅவருக்குக் கையில் ஓரிரண்டு படங்கள் மட்டுமே உள்ளன.

இதையடுத்து தீர ஆலோசித்து கவர்ச்சிக்குத் தாவ முடிவு செய்துவிட்டார் ரதி. கதைக்கேற்றவாறுகாட்சிகள் இருந்தால், நீச்சல் உடையில் கூட நடிக்கத் தயார் என்று அவர் பிரகடனம் செய்துள்ளார்.

மலையாள கரையில் பாபி

பாபிலோனா என்ற நடிகையை எங்குமே காணவில்லையே என்று வருத்தத்துடன் இருப்பவர்களுக்குஒரு நற்செய்தி!

அவர் எங்கும் போய் விடவில்லை. கவர்ச்சி நடிகைகளின் கடைசிப் புகலிடமான மலையாளத்திரையுலகில்தான் பாபிலோனா சாதனை (?) புரிந்து கொண்டிருக்கிறார்.

ஏகப்பட்ட மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் பாபிலோனா. எல்லாமே "கலைநயத்துடன்", காணக் கண் கொள்ளாக் காட்சிகள் நிறைந்த படங்களாம்.

இப்போதைக்கு எந்தப் பக்கமும் நகரடி முயாதபடி படு பிசியாக உள்ளாராம் பாபிலோனா.மலையாளப் படங்களில் நடிப்பதால் தற்போது துட்டுக்கு எந்தக் குறைவும் இல்லாமல் வாழ்க்கைஓடிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

ம்ஹூம்... என்ன பண்றது?? நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil