»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

காணாமல் போனவர்கள் லிஸ்ட்டில் ஏறக்குறைய சேர்ந்து விட்ட ரவளி மீண்டும் வருகிறார்.

அறிமுகமான புதிதில் சீமைப்பசு என்று ரசிகர்களாலும், இயக்குனர்களாலும் செல்லமாக அழைக்கப்பட்ட ரவளிமானவாரியாக கவர்ச்சி காட்டி, எல்லா நடிகர்களுடனும் நெருக்கமாக நடித்து வந்தார்.

இதனால் தமிழ், தெலுங்குமொழிகளில் மளமளவென 65 படங்களில் நடித்தார்.

பின்பு புதிய வரவுகள் காரணமாக காணாமல் போனார். வாய்ப்புகள் குவிந்திருந்தபோது சென்னை வளசரவாக்கம்பகுதியில் சொந்த வீடு வாங்கியிருந்தார்.

இப்போது வாய்ப்புகள் இல்லாததால் அந்த வீட்டை சின்னத்திரைசீரியல்களுக்கு வாடகைக்கு விட்டு விட்டு, ஹைதராபாத்தில் செட்டிலானார்.

அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கணிசமாக பணம் பார்த்த ரவளி, அந்தப் பணத்தில் சொந்தமாக ரெக்கார்டிங்தியேட்டர் ஒன்றைக் கட்டியிருக்கிறார்.

இதற்கிடையே தொழிலதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார்என்றும், நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் என்றும் தகவல்கள் வந்தன.

இந் நிலையில் நதிகள் நனைவதில்லை என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நதிகள்நனையவிட்டாலும், ரவளியை கவர்ச்சியில் நனையவிட்டுத் தான் படத்தை எடுத்து வருகிறார்கள்.

உள்ளம் கேட்குமே, வானம் வசப்படும் ஆகிய படங்களில் நடித்திருக்கும் ஹேமந்த் மற்றும் இளம்கதாநாயகன்கள் கதாநாயகிகள் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தின் கதாநாயகி ரவளி இல்லை. அவர் சும்மாகவர்ச்சி ஊறுகாய்தான்.

இந்தப் படம் மூலமாக பெரிய வாழ்வு ஒன்றும் வந்துவிடாது என்ற தெரிந்ததாலோ என்னவோ, நமோவெங்கடேசா என்ற புராண டிவி சீரியலில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் ரவளி.

ரெக்கார்டிங் தியேட்டர், தேர்தல் பிரசாரம், சினிமா, டிவி சீரியல் என கிடைத்த வாய்ப்புகள் எதையும் மிஸ்பண்ணாமல், காசு சேர்ப்பதே கண்ணாக இருந்து வருகிறார் ரவளி. பொழைக்கத் தெரிஞ்சவர்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil