twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்பெஷல்ஸ்

    By Staff
    |

    ரஜினி, கமலை வைத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை டைரக்ட் செய்து வரும் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சத்தம்போடாமல் ஒரு பெரிய வேலையை செய்துள்ளார்.

    லுமினேஸ் என்ற பெயரில் வி.சி.டிக்கள் விற்கும் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.

    படங்களை விசிடியில் வெளியிடுவது மட்டுமல்லாமல், அந்தப் படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின், முக்கிய நடிகர்களுடன்பேட்டி, இயக்குனர், கேமராமேன் உள்ளிட்ட படத்தின் டெக்னீசியன்களுடன் உரையாடல் என இன்ட்ரஸ்டிங் விஷயங்களுடன்சிடிக்களை வெளியிடவுள்ளார்.

    முதல்கட்டமாக தனது சொந்தப்படமான தெனாலியை சி.டியில் வெளியிட்டுள்ளார். தனது அன்பிற்குரிய நடிகை ரம்யாகிருஷ்ணனை வைத்து இந்த சி.டியை வெளியிட்டார். கமல், தேவயானி, பிரபு உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    படத்தின் தயாரிப்பாளரும் ரவிக்குமாரின் மனைவியுமான கற்பகமும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    ஸ்டார் மூவிசின் பிகைன்ட் த சீன்ஸ் மாதிரி இருக்கிறது இந்த சி.டி.

    அடுத்து நாகர்ஜூனாவை வைத்து தெலுங்குப் படம் தயாரித்து வருகிறார் ரவி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்திப்படங்களுக்கும் இது போன்ற பிகைன்ட் த சீன்ஸ் சி.டிக்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளார். இதற்காக தெலுங்கு, ஹிந்தி படத்தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுநடத்தி வருகிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X