எங்கள் வெற்றிக்கு இது தான் காரணம்.. பிரசன்னா பற்றி டாப் டூ பாட்டம் சொன்ன சினேகா!
சென்னை: சினிமாவில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் வெற்றி ஜோடி என்று சொன்னால் அதில் சினேகா பிரசன்னா ஜோடி கண்டிப்பாக இருப்பார்கள்.
பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா.
தங்களது வெற்றிக்கான காரணத்தையும் பிரசன்னாவை பற்றியும் சினேகா கூறியுள்ளார்.

பிரசன்னாவின் படங்கள்
பைவ் ஸ்டார் படத்திற்கு பிறகு ரகசியமாய், காதல் டாட் காம், அழகிய தீயே, கஸ்தூரிமான், கண்ட நாள் முதல், போன்று தொடர்ந்து பல படங்களில் நடித்தார் இருந்தும் அஞ்சாதே படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்திருந்தார் பிரசன்னா. அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன், துப்பறிவாளன் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஃபிங்கர் டிப் சீசன் 2 வில் நடித்துள்ளார். இது ஜீ 5 OTT தளத்தில் வெளியாகியுள்ளது.

சினேகாவின் பயணம்
அதேபோல் பிரசன்னாவின் மனைவியான சினேகா என்னவளே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் . ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, பார்த்திபன் கனவு ,வசூல்ராஜா எம்பிபிஎஸ் , ஆட்டோகிராப் என்று பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். சினேகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா என்று பல மொழிகளிலும் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நடிகை சினேகா வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பிரிவோம் சந்திப்போம் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

காதல் ஜோடி
நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சினிமா நட்சத்திர ஜோடிகள் என்றால், அதில் ஒரு முக்கியமானவர்களாக இருக்கின்றனர். தங்களது இந்த வெற்றி வாழ்க்கைக்கான காரணத்தை நடிகை சினேகா கூறியுள்ளார். தங்களது உறவைப் பற்றி நடிகை சினேகா கூறுகையில்," கிட்டத்தட்ட நான் 75 படங்களுக்கு மேல் அடித்து விட்டேன். ஒரு படத்தில் நடித்தவர்கள் மற்றொரு படத்தில் நடிப்பதற்குள்ளேயே மாறி விடுகிறார்கள் அவர்களது நடவடிக்கை ஆட்டிட்யூட் அனைத்தும் மாறி விடுகின்றன.

மாறாத பிரசன்னா
ஆனால் பிரசன்னாவை நான் முதல் நாள் எப்பொழுது பார்த்தேனோ அப்போது முதல் இன்று வரை அவர் மாறவே இல்லை. நல்ல விஷயங்களுக்காக ஒருவர் மாறினால் தப்பில்லை. ஆனால் பிரபலமான பிறகு தேவையில்லாத விஷயங்களுக்காக தங்களை மாற்றிக் கொள்வது எனக்கு பிடிக்காத விஷயம். எனக்கான கம்ஃபோர்ட்டை பிரசன்னா கொடுத்துள்ளார். பல பேருக்கு அது கிடைப்பதில்லை. நண்பர்களாக இருக்கும் போதே என்னைப் பற்றி அனைத்து விஷயம் அவருக்கு தெரியும். அன்று முதல் இன்று வரை அவர் மாறாமல் இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதுவே எங்கள் வெற்றிக்கு காரணம் என்று நடிகை சினேகா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











