ஆளவந்தான் படத்தில் ஜெயம் ரவி இதனால்தான் பணிபுரிந்தாராம்

சென்னை: 1990-களில் பாட்ஷா, அண்ணாமலை, வீரா, வேடன், ஆஹா போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா.

கடைசியாக 2012-ஆம் ஆண்டு ஒரு கன்னட திரைப்படத்தை இயக்கியவர் அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களை தயாரிக்க தொடங்கினார்.

இந்நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி தொடர்பாக நடந்த ஒரு நிகழ்வில் சுரேஷ் கிருஷ்ணா அவரைப் பற்றி பேசியிருக்கிறார்.

ரஜினி இயக்குநர்

ரஜினி இயக்குநர்

பாட்ஷா திரைப்படத்தின் வெற்றியினாலோ அல்லது அண்ணாமலை, வீரா, பாட்ஷா, பாபா போன்ற படங்களில் ரஜினி மற்றும் சுரேஷ் கிருஷ்ணா ஒன்றாக பணிபுரிந்த காரணத்தினாலோ என்னவோ, ரஜினிகாந்தின் இயக்குநர் என்று அறியப்பட்டவர் சுரேஷ் கிருஷ்ணா. ஆனால் அவரை அறிமுகப்படுத்தியது நடிகர் கமல் ஹாசன். கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் குருநாதரான இயக்குநர் பாலச்சந்திரிடம் துணை இயக்குநராக பணியாற்றியவர் தான் சுரேஷ் கிருஷ்ணா.

ஏக் துஜே கே லியே

ஏக் துஜே கே லியே

முன்னதாக பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திருந்த ஏக் துஜே கேலியே இந்தி திரைப்படத்தை தயாரித்த பிரசாத் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக அதில் பணியாற்றிய சுரேஷ் கிருஷ்ணா பிற்காலத்தில் பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தில் அவரிடம் துணை இயக்குநராக சேர்ந்து கொண்டார். அண்ணாமலை திரைப்படத்திலிருந்து இயக்குநர் வசந்த் விலகிய காரணத்தினால் உடனே தன்னுடைய இன்னொரு மாணவர் சுரேஷ் கிருஷ்ணாவை அதன் இயக்குநராக ஒப்பந்தம் செய்திருப்பார் அந்தப் படத்தை தயாரித்த பாலச்சந்தர்.

கமலுடன் கூட்டணி

கமலுடன் கூட்டணி

கமல்ஹாசன் நடித்த சத்யா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, இந்திரன் சந்திரன் என்ற தெலுங்கு படத்திலும் ஆளவந்தான் திரைப்படத்திலும்

இந்த இருவர் கூட்டணி ஒன்றாக பணிபுரிந்தார்கள். ஆளவந்தான் திரைப்படத்தின்போது சுரேஷ் கிருஷ்ணாவின் நண்பரான எடிட்டர் மோகன் தன்னுடைய மகன் ரவியை துணை இயக்குநராக சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியதால் தனது அசிஸ்டெண்டாக சேர்த்துக் கொண்டாராம் சுரேஷ் கிருஷ்ணா.

நடிப்பும் இயக்கமும்

நடிப்பும் இயக்கமும்

டெல்லியில் ஒரு மாத படப்பிடிப்பில் சுரேஷ் கிருஷ்ணாவுடன் பணிபுரிந்திருக்கிறார் ஜெயம் ரவி. அவர் தன்னிடம் டைரக்சன் கற்றுக் கொள்ள சேரவில்லை எனவும் கமல் ஹாசனைப் பார்த்து நடிப்பை கற்றுக் கொள்ளத்தான் வந்திருக்கிறார் எனவும் பின்னர்தான் எனக்கு புரிந்தது என சுரேஷ் கிருஷ்ணாவிற்கு ஜெயம் ரவி சம்பந்தப்பட்ட நிகழ்வில் கூற,"அவர் பொடி வைத்துப் பேசுகிறார். உண்மையில் இயக் கம் மற்றும் நடிப்பு இரண்டையும் கற்றுக் கொள்ளத்தான் நான் ஆளவந்தான் படத்தில் பணி புரிந்தேன் என்று ஜெயம் ரவி அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X