தீபாவளிக்கு ஏழாம் அறிவு... உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வெளியிடுகிறது!!

இந்தப் படம் தனது ரெட்ஜெயன்ட் பேனரிலேயே வெளியாகும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார் உதயநிதி.
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு கருணாநிதி குடும்ப வாரிசுகள் தொடர்புடைய திரைப்படங்கள் சிக்கலுக்குள்ளாகி வருகின்றன. இந்தப் படங்களைத் திரையிட இப்போது ஆர்வம் காட்டுவோர் குறைந்துவிட்டனர். ஆளும்கட்சியைப் பகைத்துக் கொள்ளக்கூடாது மற்றும் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக இதை செய்கின்றனர்.
ஆனால் உதயநிதி ஸ்டாலின் தனது புதிய படமான 7-ஆம் அறிவை தானே வெளியிடத் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், "7-ஆண் அறிவு திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 26-ம் தேதி வெளியாகிறது. ரெட்ஜெயன்ட் மூவீஸ் பேனரிலேயே இந்தப் படம் வெளியாகும்", என்று கூறியுள்ளார்.
ஏஆர் முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை சன் டிவிக்கு மிகப்பெரிய விலைக்குத் தரப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 10-ம் தேதி படத்தின் ஆடியோ வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











