»   »  ரீமா- சிம்பு வெள்ளை கொடி! சிம்புவும், ரீமா சென்னும் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசி பிரச்சினைகளை சரி செய்துகொண்டு விட்டனர். இதனால் வல்லவன் படப்பிடிப்பு மறுபடியும் தொடங்கியுள்ளது.தேனப்பன் தயாரிப்பில் சிம்புவின் கதை, வசனம், இயக்கம், நடிப்பில் உருவாகி வரும்படம் வல்லவன். ரொம்ப காலமாக தயாரிப்பில் இருந்து வரும் வல்லவன் ஆரம்பம்முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.முதலில் நயனதாராவுக்கு சிம்பு கொடுத்த உதட்டுக் கடி-இழுவை முத்தம் சலசலப்பைஏற்படுத்தியது. பின்னர் படப்பிடிப்பை படு மெதுவாக சிம்பு எடுத்து வருவதால்தேனப்பன் அப்செட் ஆனார்.அப்புறம், ரீமா சென், சந்தியா ஆகியோரின் ரோல்களை சிம்பு டம்மி ஆக்கிவிட்டதாகவும், தனக்கு நெருக்கமாகிவிட்ட நயனதாராவின் ரோலை ஸ்டிராங்க்செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.இதற்கு முத்தாய்ப்பாக ரீமாவுக்கும் சிம்புவுக்கும் கடும் பிரச்சினை ஏற்பட்டது. ஒருபாடல் காட்சியின்போது ஆபாசமான உடைகளைக் கொடுத்ததாக சிம்புவுடன்சண்டைக்குப் போனார் ரீமா.சண்டையில் இருவரும் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து ஸ்பாட்டிலிருந்து கிளம்பி கொல்கத்தா போய் விட்டார்.இதனால் கடுப்பாகிப் போன சிம்பு, ரீமாவைத் தூக்கி விட்டு வேறு நடிகையைப்போட்டுக் கொள்ளலாம் என தேனப்பனிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு அரண்டுபோன தேனப்பன், ஏற்கனவே பட்ஜெட் எகிறிக் கொண்டிருக்கிறது. இந் நிலையில்ரீமாவைத் தூக்குவது சரி வராது என்று கூறிவிட்டார்.இதைப் பற்றிக் கேள்விப்பட்ட ரீமா, நான் நடித்த காட்சிகளை தூக்கினால் வழக்குபோடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அதைப் பற்றுக் கவலைப்படாத சிம்பு, வேறு நடிகையை போடும் முயற்சியில்இறங்கினார். அசின், சோனியா அகர்வால் ஆகியோரை அணுகி ரீமா கேரக்டரில்நடிக்கக் கேட்டார்.ஆனால் இருவருமே தலையை அங்கிட்டும், இங்கிட்டுமாக வேகமாக ஆட்டி ஸாரிசொல்லி விட்டார்கள்.இப்படியே விட்டால் சிம்புவால் பெரிய நொம்பலமாகிப் போய் விடும் என்று பயந்துபோன தேனப்பன், ரீமா சமீபத்தில் சென்னைக்கு வந்தபோது போய் சந்தித்துப்பேசினார். தனது நிலையை எடுத்துக் கூறி கண்ணீர் விடாத குறையாக புலம்பினார்.இதனால் சற்றே இறங்கி வந்தார் ரீமா.இதையடுத்து சிம்புவிடம் பேசி, ரீமாவை சந்தித்து பிரச்சினையைத் தீர்க்குமாறுகேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இரவுவிருந்தில் ரீமாவும், சிம்புவும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் மனம் விட்டுப் பேசிபிரச்சினைகளை பட்டியலிட்டு ஒவ்வொன்றையும் பேசி சரி செய்து கொண்டுவிட்டனராம்.இந்த சந்திப்பின் விளைவு, ரீமா மீண்டும் வல்லவனில் நடிக்க ஒத்துக்கொண்டுவிட்டார். சங்கடத்தோடு வந்த இருவரும் சந்தோஷமாக திரும்பினர். (எங்கேபோனாங்கன்னு கேட்கக் கூடாது!)

ரீமா- சிம்பு வெள்ளை கொடி! சிம்புவும், ரீமா சென்னும் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசி பிரச்சினைகளை சரி செய்துகொண்டு விட்டனர். இதனால் வல்லவன் படப்பிடிப்பு மறுபடியும் தொடங்கியுள்ளது.தேனப்பன் தயாரிப்பில் சிம்புவின் கதை, வசனம், இயக்கம், நடிப்பில் உருவாகி வரும்படம் வல்லவன். ரொம்ப காலமாக தயாரிப்பில் இருந்து வரும் வல்லவன் ஆரம்பம்முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.முதலில் நயனதாராவுக்கு சிம்பு கொடுத்த உதட்டுக் கடி-இழுவை முத்தம் சலசலப்பைஏற்படுத்தியது. பின்னர் படப்பிடிப்பை படு மெதுவாக சிம்பு எடுத்து வருவதால்தேனப்பன் அப்செட் ஆனார்.அப்புறம், ரீமா சென், சந்தியா ஆகியோரின் ரோல்களை சிம்பு டம்மி ஆக்கிவிட்டதாகவும், தனக்கு நெருக்கமாகிவிட்ட நயனதாராவின் ரோலை ஸ்டிராங்க்செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.இதற்கு முத்தாய்ப்பாக ரீமாவுக்கும் சிம்புவுக்கும் கடும் பிரச்சினை ஏற்பட்டது. ஒருபாடல் காட்சியின்போது ஆபாசமான உடைகளைக் கொடுத்ததாக சிம்புவுடன்சண்டைக்குப் போனார் ரீமா.சண்டையில் இருவரும் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து ஸ்பாட்டிலிருந்து கிளம்பி கொல்கத்தா போய் விட்டார்.இதனால் கடுப்பாகிப் போன சிம்பு, ரீமாவைத் தூக்கி விட்டு வேறு நடிகையைப்போட்டுக் கொள்ளலாம் என தேனப்பனிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு அரண்டுபோன தேனப்பன், ஏற்கனவே பட்ஜெட் எகிறிக் கொண்டிருக்கிறது. இந் நிலையில்ரீமாவைத் தூக்குவது சரி வராது என்று கூறிவிட்டார்.இதைப் பற்றிக் கேள்விப்பட்ட ரீமா, நான் நடித்த காட்சிகளை தூக்கினால் வழக்குபோடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அதைப் பற்றுக் கவலைப்படாத சிம்பு, வேறு நடிகையை போடும் முயற்சியில்இறங்கினார். அசின், சோனியா அகர்வால் ஆகியோரை அணுகி ரீமா கேரக்டரில்நடிக்கக் கேட்டார்.ஆனால் இருவருமே தலையை அங்கிட்டும், இங்கிட்டுமாக வேகமாக ஆட்டி ஸாரிசொல்லி விட்டார்கள்.இப்படியே விட்டால் சிம்புவால் பெரிய நொம்பலமாகிப் போய் விடும் என்று பயந்துபோன தேனப்பன், ரீமா சமீபத்தில் சென்னைக்கு வந்தபோது போய் சந்தித்துப்பேசினார். தனது நிலையை எடுத்துக் கூறி கண்ணீர் விடாத குறையாக புலம்பினார்.இதனால் சற்றே இறங்கி வந்தார் ரீமா.இதையடுத்து சிம்புவிடம் பேசி, ரீமாவை சந்தித்து பிரச்சினையைத் தீர்க்குமாறுகேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இரவுவிருந்தில் ரீமாவும், சிம்புவும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் மனம் விட்டுப் பேசிபிரச்சினைகளை பட்டியலிட்டு ஒவ்வொன்றையும் பேசி சரி செய்து கொண்டுவிட்டனராம்.இந்த சந்திப்பின் விளைவு, ரீமா மீண்டும் வல்லவனில் நடிக்க ஒத்துக்கொண்டுவிட்டார். சங்கடத்தோடு வந்த இருவரும் சந்தோஷமாக திரும்பினர். (எங்கேபோனாங்கன்னு கேட்கக் கூடாது!)

Subscribe to Oneindia Tamil
சிம்புவும், ரீமா சென்னும் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசி பிரச்சினைகளை சரி செய்துகொண்டு விட்டனர். இதனால் வல்லவன் படப்பிடிப்பு மறுபடியும் தொடங்கியுள்ளது.

தேனப்பன் தயாரிப்பில் சிம்புவின் கதை, வசனம், இயக்கம், நடிப்பில் உருவாகி வரும்படம் வல்லவன். ரொம்ப காலமாக தயாரிப்பில் இருந்து வரும் வல்லவன் ஆரம்பம்முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

முதலில் நயனதாராவுக்கு சிம்பு கொடுத்த உதட்டுக் கடி-இழுவை முத்தம் சலசலப்பைஏற்படுத்தியது. பின்னர் படப்பிடிப்பை படு மெதுவாக சிம்பு எடுத்து வருவதால்தேனப்பன் அப்செட் ஆனார்.

அப்புறம், ரீமா சென், சந்தியா ஆகியோரின் ரோல்களை சிம்பு டம்மி ஆக்கிவிட்டதாகவும், தனக்கு நெருக்கமாகிவிட்ட நயனதாராவின் ரோலை ஸ்டிராங்க்செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இதற்கு முத்தாய்ப்பாக ரீமாவுக்கும் சிம்புவுக்கும் கடும் பிரச்சினை ஏற்பட்டது. ஒருபாடல் காட்சியின்போது ஆபாசமான உடைகளைக் கொடுத்ததாக சிம்புவுடன்சண்டைக்குப் போனார் ரீமா.

சண்டையில் இருவரும் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து ஸ்பாட்டிலிருந்து கிளம்பி கொல்கத்தா போய் விட்டார்.

இதனால் கடுப்பாகிப் போன சிம்பு, ரீமாவைத் தூக்கி விட்டு வேறு நடிகையைப்போட்டுக் கொள்ளலாம் என தேனப்பனிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு அரண்டுபோன தேனப்பன், ஏற்கனவே பட்ஜெட் எகிறிக் கொண்டிருக்கிறது. இந் நிலையில்ரீமாவைத் தூக்குவது சரி வராது என்று கூறிவிட்டார்.

இதைப் பற்றிக் கேள்விப்பட்ட ரீமா, நான் நடித்த காட்சிகளை தூக்கினால் வழக்குபோடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் அதைப் பற்றுக் கவலைப்படாத சிம்பு, வேறு நடிகையை போடும் முயற்சியில்இறங்கினார். அசின், சோனியா அகர்வால் ஆகியோரை அணுகி ரீமா கேரக்டரில்நடிக்கக் கேட்டார்.

ஆனால் இருவருமே தலையை அங்கிட்டும், இங்கிட்டுமாக வேகமாக ஆட்டி ஸாரிசொல்லி விட்டார்கள்.

இப்படியே விட்டால் சிம்புவால் பெரிய நொம்பலமாகிப் போய் விடும் என்று பயந்துபோன தேனப்பன், ரீமா சமீபத்தில் சென்னைக்கு வந்தபோது போய் சந்தித்துப்பேசினார். தனது நிலையை எடுத்துக் கூறி கண்ணீர் விடாத குறையாக புலம்பினார்.இதனால் சற்றே இறங்கி வந்தார் ரீமா.

இதையடுத்து சிம்புவிடம் பேசி, ரீமாவை சந்தித்து பிரச்சினையைத் தீர்க்குமாறுகேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இரவுவிருந்தில் ரீமாவும், சிம்புவும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் மனம் விட்டுப் பேசிபிரச்சினைகளை பட்டியலிட்டு ஒவ்வொன்றையும் பேசி சரி செய்து கொண்டுவிட்டனராம்.

இந்த சந்திப்பின் விளைவு, ரீமா மீண்டும் வல்லவனில் நடிக்க ஒத்துக்கொண்டுவிட்டார். சங்கடத்தோடு வந்த இருவரும் சந்தோஷமாக திரும்பினர். (எங்கேபோனாங்கன்னு கேட்கக் கூடாது!)


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil