»   »  பிரியாணி நடிகைகள்! சாப்பாட்டு ராமன்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தடபுடலாக சாப்பிடும், நடிகைகள் குறித்து தெரியுமா?கோலிவுட்டில் உள்ள சில நடிகைகள் சாப்பாட்டு விஷயத்தில் பின்னி பெடலெடுப்பவர்களாம். வெளியில்பார்த்தால் குச்சி மாதிரி இருக்கும் இவர்கள், டைனிங் டேபிள் முன்பு உட்கார்ந்து விட்டால், டேபிளே திணறிப்போகும் அளவுக்கு பெரும் கட்டு கட்டுவார்களாம்.முதலில் ரீமா சென். இவர் ஒரு பிரியாணிப் பிரியை. என்ன வகையான பிரியாணி என்றாலும் அம்மணியின்நாவில் எச்சில் ஊற்று பெருக்கெடுத்து ஓடுமாம். அந்த அளவுக்கு பிரியாணி என்றால் உயிராம்.ஒரே நேரத்தில் குறைந்தது 2 பிளேட் பிரியாணியை போட்டுத் தாக்கி விடுவாராம். இன்னும் வேண்டுமா என்றுகேட்டாலும், ஆமாமாம் என்று விரலை சூப்பியபடி கெஞ்சலாக கூறுவாராம். அப்படி ஒரு பிரியாணி நாக்குரீமாவுக்கு.எவ்வளவு பிரியாணி சாப்பிட்டாலும் ரீமாவின் எடை அப்படியே குறையாமல் சிக்கென இருப்பதன் ரகசியம்அந்த பிரியாணிக்கே வெளிச்சம்!

பிரியாணி நடிகைகள்! சாப்பாட்டு ராமன்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தடபுடலாக சாப்பிடும், நடிகைகள் குறித்து தெரியுமா?கோலிவுட்டில் உள்ள சில நடிகைகள் சாப்பாட்டு விஷயத்தில் பின்னி பெடலெடுப்பவர்களாம். வெளியில்பார்த்தால் குச்சி மாதிரி இருக்கும் இவர்கள், டைனிங் டேபிள் முன்பு உட்கார்ந்து விட்டால், டேபிளே திணறிப்போகும் அளவுக்கு பெரும் கட்டு கட்டுவார்களாம்.முதலில் ரீமா சென். இவர் ஒரு பிரியாணிப் பிரியை. என்ன வகையான பிரியாணி என்றாலும் அம்மணியின்நாவில் எச்சில் ஊற்று பெருக்கெடுத்து ஓடுமாம். அந்த அளவுக்கு பிரியாணி என்றால் உயிராம்.ஒரே நேரத்தில் குறைந்தது 2 பிளேட் பிரியாணியை போட்டுத் தாக்கி விடுவாராம். இன்னும் வேண்டுமா என்றுகேட்டாலும், ஆமாமாம் என்று விரலை சூப்பியபடி கெஞ்சலாக கூறுவாராம். அப்படி ஒரு பிரியாணி நாக்குரீமாவுக்கு.எவ்வளவு பிரியாணி சாப்பிட்டாலும் ரீமாவின் எடை அப்படியே குறையாமல் சிக்கென இருப்பதன் ரகசியம்அந்த பிரியாணிக்கே வெளிச்சம்!

Subscribe to Oneindia Tamil

சாப்பாட்டு ராமன்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தடபுடலாக சாப்பிடும், நடிகைகள் குறித்து தெரியுமா?

கோலிவுட்டில் உள்ள சில நடிகைகள் சாப்பாட்டு விஷயத்தில் பின்னி பெடலெடுப்பவர்களாம். வெளியில்பார்த்தால் குச்சி மாதிரி இருக்கும் இவர்கள், டைனிங் டேபிள் முன்பு உட்கார்ந்து விட்டால், டேபிளே திணறிப்போகும் அளவுக்கு பெரும் கட்டு கட்டுவார்களாம்.

முதலில் ரீமா சென். இவர் ஒரு பிரியாணிப் பிரியை. என்ன வகையான பிரியாணி என்றாலும் அம்மணியின்நாவில் எச்சில் ஊற்று பெருக்கெடுத்து ஓடுமாம். அந்த அளவுக்கு பிரியாணி என்றால் உயிராம்.

ஒரே நேரத்தில் குறைந்தது 2 பிளேட் பிரியாணியை போட்டுத் தாக்கி விடுவாராம். இன்னும் வேண்டுமா என்றுகேட்டாலும், ஆமாமாம் என்று விரலை சூப்பியபடி கெஞ்சலாக கூறுவாராம். அப்படி ஒரு பிரியாணி நாக்குரீமாவுக்கு.

எவ்வளவு பிரியாணி சாப்பிட்டாலும் ரீமாவின் எடை அப்படியே குறையாமல் சிக்கென இருப்பதன் ரகசியம்அந்த பிரியாணிக்கே வெளிச்சம்!

இதேபோலத்தான் ஆசினும். அவருக்கு ரொம்பப் பிடித்தது சிக்கன் பிரியாணி. எந்த நேரமாக இருந்தாலும்விரும்பிச் சாப்பிடுவாராம். கோழியை கொல் (கொள்)லாத நாளே இல்லை எனும் அளவுக்கு தினசரிபிரியாணியை ஒரு பிடி பிடித்து விடுவாராம்.

பிரியாணியுடன் வஞ்சிரம் மீனை வறுத்து பிளேட்டில் வைத்து விட்டால் போதும் ஒரே மூச்சில் கோழியையும்,மீனையும் உள்ளே தள்ளி ஸ்வாஹா செய்வதில் அசின் ரொம்ப சமர்த்தாம்.

இவர்கள் இப்படி என்றால் நயனதாரா இன்னொரு ரகம். இவருக்கும் பிரியாணி என்றால் உயிராம். மற்றவர்கள்என்றால் பாதி பாதி பிளேட்டாக வாங்கி உள்ளே தள்ளிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நயன்ஸ் அப்படி இல்லை.முழு முழு பிளேட்டாக வாங்கி வாகாக உள்ளே அனுப்புவது இவரது ஸ்டைல். லெக் பீஸாக எடுத்துக்கொடுத்தால் ஒரே அப்புதான்!முன்பு மும்தாஜும் இப்படித்தான் பிரியாணியை பெரும் பிடியாக பிடித்துக் கொண்டிருந்தார். உடல் எடைஓவராக கூடி விடவே பிரியாணிக்கு விடை கொடுத்து விட்டார். இப்பெல்லாம் எப்பவாச்சும்தான் பிரியாணியைமோப்பம் பிடிக்கிறாராம்.

இப்படி கட்டு கட்டென்று கட்டினாலும் கூட எடை விஷயத்தில் அத்தனை பேரும் படு ஜாக்கிரதையாகஇருக்கிறார்கள். செய்ய வேண்டியதைச் செய்து எடையை கும்மென குறைத்து விடுகிறார்கள்.

இல்லாட்டி தூக்க முடியாம ஹீரோக்களும், பாக்க முடியாம ரசிகர்களும் அவஸ்தைப்படுவார்களே!

Read more about: briyani actresses
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil