»   »  தமிழுக்கு வரும் ஜெமினி மகள்!

தமிழுக்கு வரும் ஜெமினி மகள்!

Subscribe to Oneindia Tamil

பாலிவுட்டின் செக்ஸ் சிம்பலாக பல காலம் கலக்கிய காதல் மன்னன் ஜெமினி கணேசன் அழகு மகள் ரேகா, வயது போன காலத்தில் தமிழில் நடிக்கவருகிறார்.

அந்தக் காலத்து கனவுக் கன்னிகளில் முக்கியமானவர் ரேகா. ஜெமினியின் மகளான இவர் இதுவரை தமிழில் ஒரு படத்தில் கூட தலைகாட்டியதில்லை.

பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ரேகா. ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா என பெரும் தலைகளுக்கிடையே கடும் போட்டிநிலவி வந்த காலத்தில் தனது பாணியில் ரசிகர்களை தக தக்க வைத்தவர் ரேகா.

கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம், பிரபல இயக்குநர்கள், சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ரேகா. பாலிவுட்டில் படு பிரபலமாகஇருந்தபோதிலும், கோலிவுட் பக்கம் கண்களைக் கூடத் திருப்பாமல் இருந்தது வந்தார் ரேகா.

அதேசமயம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் லேசாக தலை காட்டியுள்ளார் ரேகா என்பது குறிப்பிடத்தக்கது. அப்பா மீதுகோபமோ என்னவோ, தமிழ் பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை ரேகா.

இந்த நிலையில் ஹீரோயின் ரேஞ்சிலிருந்து அம்மா, வில்லி லெவலுக்கு இறங்கி விட்ட ரேகா, இப்போது தமிழுக்கு நடிக்க வருகிறார். திமிருஇயக்குநர் தருண் கோபியின் புதிய படத்தில்தான் ரேகா நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஹீரோ நம்ம சிம்பு.

இப்படத்தில் ரேகாவுக்கு சூப்பர் கேரக்டர் வைத்துள்ளாராம் தருண் கோபி. கிட்டத்தட்ட அவரை மையமாக வைத்துத்தான் படமே நகருமாம்.படையப்பா ரம்யா கிருஷ்ணன் மாதிரி, போல்டான பெண்மணியாக இப்படத்தில் நடிக்கவுள்ளார் ரேகா. ஆனால் வில்லியாக நடிக்கவில்லையாம்.

இப்படத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார் ரேகா. ஆனால் வழக்கமான அம்மா கேரக்டர் போல இது இருக்காது. படு வித்தியாசமாக இருக்கும்என்று கூறும் தருண்கோபி, ரேகாவின் கேரக்டர் வெகுவாக பேசப்படும் என்று நம்பிக்கையாக கூறுகிறார்.

இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ரேகாவை அணுகியபோது கதை கேட்டாராம். கேட்டவுடனேயே இம்ப்ரஸ் ஆகி ஓ.கே. சொல்லி விட்டாராம்.

படத்திற்கு இன்னும் சரியான பெயர் கிடைக்கவில்லையாம். 3 பெயர்களை செலக்ட் செய்து அதை ரேகாவின் பரிசீலனைக்குஅனுப்பியுள்ளார்களாம். அவர் ஓ.கே. சொல்லும் பெயர்தான் படத்தின டைட்டிலாம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கலாம் என்று தெரிகிறது.

டைட்டா இருந்தபோதே ரேகா தமிழுக்கு வந்திருக்கலாம்!

Read more about: rekhas late debut in tamil

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil