»   »  மீண்டும் கடலோரக் கவிதை! கடலோரக் கவிதை நாயகி ரேகா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் சான்ஸ் பிடிக்க வரமுயன்று வருகிறார்.பாரதிராஜாவின் மோதிர (முரட்டு) கையால் குட்டுப் பட்ட ரேகா, கடலோரக் கவிதை மூலம் ஒரே நாளில்ரசிகர்களின் மனதில் ஒய்யாரமாக உட்கார்ந்தவர். அதன் பின்னர் ஜெனீபராக கொஞ்ச காலம் ரசிகர்களைஇம்சித்த ரேகா, கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு அடித்தார்.போகப் போக புதுமுகங்களின் வரவால் ரேகாவுக்கு வாய்ப்புகள் மங்கின. இடையில் சில காலம் காணாமல்போனார். மீண்டும் திரும்பி வந்த ரேகா, டிவி சீரியலுக்குத் தாவினார். ஆனால் அதிலும் ரொம்ப நாள் அவர்நீடிக்கவில்லை.பெரிய திரைக்கு மறுபடியும் தாவிய ரேகா, அண்ணி, அம்மா, அக்கா ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர்மறுபடியும் ஒரு தொய்வு. இதையடுத்து தாய் மொழியான மலையாளத்தில் டிவி சீரியல்களுக்குப் போனார்.இந் நிலையில் மீண்டும் தமிழ் உள்பட சினிமாவில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம் ரேகா. ஒரு வேளை மணவாழ்க்கையில் குழப்பமோ?அதெல்லாம் கிடையாது. ஹாரிஸ்தான் (அவர்தாங்க மிஸ்டர் ரேகா!) என்னிடம் அடிக்கடி சொல்வார். நீ பெரியநடிகையாக இருந்தவள். அப்படி இருக்கும்போது ஏன் இப்படி நடிக்காமல் உனது நடிப்புத் திறமையைவீணடிக்கிறாய். தொடர்ந்து நடியேன் என்று அணத்தி வருகிறார்.நான் குடும்பப் பொறுப்புகளை கவனிப்பதற்காகவே நடிப்புக்கு கொஞ்ச நாள் விடை கொடுத்திருந்தேன்.இப்போது கணவர் வற்புறுத்துவதால் மீண்டும் முன்பு போல நடிக்கலாம் என்றிருக்கிறேன் என்கிறார் ரேகா.சினிமாதான் தனக்கு பணத்தையும், சொகுசான வாழ்க்கையையும் தந்தது என்பதை நன்றியுடன் நினைவுகூறுகிறார் ரேகா. அதிக பணத்தை நான் பார்த்தது சினிமா மூலம்தான். எனவே சினிமாவை நான் மறக்கவேமாட்டேன். அதேபோல நல்ல கணவர் எனக்குக் கிடைத்துள்ளார். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது.எனக்கு எல்லாமும் கிடைக்க காரணமாக இருந்த சினிமாவை விட்டு நான் விலகுவது என்ற பேச்சுக்கேஇடமில்லை. இறுதி மூச்சு வரை கூட நடிக்க நான் தயார்தான் என்கிறார் ரேகா.வாய்ப்பு கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாரா?

மீண்டும் கடலோரக் கவிதை! கடலோரக் கவிதை நாயகி ரேகா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் சான்ஸ் பிடிக்க வரமுயன்று வருகிறார்.பாரதிராஜாவின் மோதிர (முரட்டு) கையால் குட்டுப் பட்ட ரேகா, கடலோரக் கவிதை மூலம் ஒரே நாளில்ரசிகர்களின் மனதில் ஒய்யாரமாக உட்கார்ந்தவர். அதன் பின்னர் ஜெனீபராக கொஞ்ச காலம் ரசிகர்களைஇம்சித்த ரேகா, கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு அடித்தார்.போகப் போக புதுமுகங்களின் வரவால் ரேகாவுக்கு வாய்ப்புகள் மங்கின. இடையில் சில காலம் காணாமல்போனார். மீண்டும் திரும்பி வந்த ரேகா, டிவி சீரியலுக்குத் தாவினார். ஆனால் அதிலும் ரொம்ப நாள் அவர்நீடிக்கவில்லை.பெரிய திரைக்கு மறுபடியும் தாவிய ரேகா, அண்ணி, அம்மா, அக்கா ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர்மறுபடியும் ஒரு தொய்வு. இதையடுத்து தாய் மொழியான மலையாளத்தில் டிவி சீரியல்களுக்குப் போனார்.இந் நிலையில் மீண்டும் தமிழ் உள்பட சினிமாவில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம் ரேகா. ஒரு வேளை மணவாழ்க்கையில் குழப்பமோ?அதெல்லாம் கிடையாது. ஹாரிஸ்தான் (அவர்தாங்க மிஸ்டர் ரேகா!) என்னிடம் அடிக்கடி சொல்வார். நீ பெரியநடிகையாக இருந்தவள். அப்படி இருக்கும்போது ஏன் இப்படி நடிக்காமல் உனது நடிப்புத் திறமையைவீணடிக்கிறாய். தொடர்ந்து நடியேன் என்று அணத்தி வருகிறார்.நான் குடும்பப் பொறுப்புகளை கவனிப்பதற்காகவே நடிப்புக்கு கொஞ்ச நாள் விடை கொடுத்திருந்தேன்.இப்போது கணவர் வற்புறுத்துவதால் மீண்டும் முன்பு போல நடிக்கலாம் என்றிருக்கிறேன் என்கிறார் ரேகா.சினிமாதான் தனக்கு பணத்தையும், சொகுசான வாழ்க்கையையும் தந்தது என்பதை நன்றியுடன் நினைவுகூறுகிறார் ரேகா. அதிக பணத்தை நான் பார்த்தது சினிமா மூலம்தான். எனவே சினிமாவை நான் மறக்கவேமாட்டேன். அதேபோல நல்ல கணவர் எனக்குக் கிடைத்துள்ளார். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது.எனக்கு எல்லாமும் கிடைக்க காரணமாக இருந்த சினிமாவை விட்டு நான் விலகுவது என்ற பேச்சுக்கேஇடமில்லை. இறுதி மூச்சு வரை கூட நடிக்க நான் தயார்தான் என்கிறார் ரேகா.வாய்ப்பு கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
கடலோரக் கவிதை நாயகி ரேகா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் சான்ஸ் பிடிக்க வரமுயன்று வருகிறார்.

பாரதிராஜாவின் மோதிர (முரட்டு) கையால் குட்டுப் பட்ட ரேகா, கடலோரக் கவிதை மூலம் ஒரே நாளில்ரசிகர்களின் மனதில் ஒய்யாரமாக உட்கார்ந்தவர். அதன் பின்னர் ஜெனீபராக கொஞ்ச காலம் ரசிகர்களைஇம்சித்த ரேகா, கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு அடித்தார்.

போகப் போக புதுமுகங்களின் வரவால் ரேகாவுக்கு வாய்ப்புகள் மங்கின. இடையில் சில காலம் காணாமல்போனார். மீண்டும் திரும்பி வந்த ரேகா, டிவி சீரியலுக்குத் தாவினார். ஆனால் அதிலும் ரொம்ப நாள் அவர்நீடிக்கவில்லை.

பெரிய திரைக்கு மறுபடியும் தாவிய ரேகா, அண்ணி, அம்மா, அக்கா ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர்மறுபடியும் ஒரு தொய்வு. இதையடுத்து தாய் மொழியான மலையாளத்தில் டிவி சீரியல்களுக்குப் போனார்.

இந் நிலையில் மீண்டும் தமிழ் உள்பட சினிமாவில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம் ரேகா. ஒரு வேளை மணவாழ்க்கையில் குழப்பமோ?

அதெல்லாம் கிடையாது. ஹாரிஸ்தான் (அவர்தாங்க மிஸ்டர் ரேகா!) என்னிடம் அடிக்கடி சொல்வார். நீ பெரியநடிகையாக இருந்தவள். அப்படி இருக்கும்போது ஏன் இப்படி நடிக்காமல் உனது நடிப்புத் திறமையைவீணடிக்கிறாய். தொடர்ந்து நடியேன் என்று அணத்தி வருகிறார்.

நான் குடும்பப் பொறுப்புகளை கவனிப்பதற்காகவே நடிப்புக்கு கொஞ்ச நாள் விடை கொடுத்திருந்தேன்.இப்போது கணவர் வற்புறுத்துவதால் மீண்டும் முன்பு போல நடிக்கலாம் என்றிருக்கிறேன் என்கிறார் ரேகா.

சினிமாதான் தனக்கு பணத்தையும், சொகுசான வாழ்க்கையையும் தந்தது என்பதை நன்றியுடன் நினைவுகூறுகிறார் ரேகா. அதிக பணத்தை நான் பார்த்தது சினிமா மூலம்தான். எனவே சினிமாவை நான் மறக்கவேமாட்டேன். அதேபோல நல்ல கணவர் எனக்குக் கிடைத்துள்ளார். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது.

எனக்கு எல்லாமும் கிடைக்க காரணமாக இருந்த சினிமாவை விட்டு நான் விலகுவது என்ற பேச்சுக்கேஇடமில்லை. இறுதி மூச்சு வரை கூட நடிக்க நான் தயார்தான் என்கிறார் ரேகா.

வாய்ப்பு கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil