'ரெட்டச்சுழி' ஆரி நடிக்கும் தரணி!

By Chakra

Aari
இந்த இயக்குனர்களின் படங்களில் நாம் ஒரு காட்சியிலாவது நடித்து விட மாட்டோமா? என்று ஏங்கித் தவிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் ஆரி ஒருபடி மேலே போய் அந்த இயக்குனர்களுடனே சேர்ந்து நடித்துவிட்டார். அவர்கள் வேறு யாருமல்ல பாரதிராஜா மற்றும் கே.பாலச்சந்தர் ஆகியோர்தான்.

பிரமாண்டமான இயக்கத்துக்கு பெயர்போன இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் தாமிரா இயக்கத்தில் ரெட்டச்சுழி படத்தில் நடித்த ஆரிக்கு அடுத்த வாய்ப்பும் கிடைத்துள்ளது.

படத்தின் பெயர் 'தரணி'. இந்திப் பட உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவை தன்னுடைய மானசீக குருவாகக் கொண்டு இப்படத்தை இயக்கி வருகிறார் புதியவர் குகன் .

இந்தப் படத்தில் ஆரி தவிர மேலும் 2 ஹீரோக்களும் உண்டு. மூன்று ஹீரோக்கள் நடித்தாலும் ஆரிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே மற்ற நடிகர், நடிகைகளுக்கு உடலமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது எப்படி என்ற வழிமுறைகளையும், குறிப்புகளையும் சொல்லிக்கொடுத்து வரும் நடிகர் ஆரி இந்தப் படத்தில் அவருக்கே அவர் உடம்பில் சில மாற்றங்களை செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பதை சந்தோஷமாக சொல்கிறார்.

குறிப்பாக படத்தில் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வரும் அவருடைய கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப தனது உடம்பிலும்,பேச்சு வழக்கிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறாராம் ஆரி.

இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உதவியாளர் இயக்கும் ஒரு படத்திலும், இயக்குனர் பி.வாசுவின் உதவியாளர் இயக்கும் ஒரு படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார் ஆரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X