ரீவைண்ட் ராஜா.. தலைவர்ர்ர்ர்ர்.. ரஜினியை கலாய்த்த ஆச்சி மனோரமா.. சமரசம் செய்த கேப்டன்!

சென்னை: அரசியல் பிரச்சாரத்தின் போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை கலாய்த்த ஆச்சி மனோரமாவின் ஃபிளாஷ்பேக் கதை நம்ம ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில் நினைவுப்படுத்தப்பட்டுள்ளது.

Recommended Video

CHUBBY யாதான் சாதிச்சோம் | REWIND RAJA EP-03 | FILMIBEAT TAMIL

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்தபோது நடிகை மனோரமா 'தலைவர்ர்ர்' என கலாய்த்ததாகவும், அதன் பின்னர், 1000 படங்களுக்கு மேல் நடித்த ஆச்சி மனோரமாவையே சினிமா உலகம் பிளாக் லிஸ்ட் பண்ண கதையையும், இந்த பிரச்சனையை விஜயகாந்த் எப்படி கேப்டன் கூலாக செயல்பட்டு முடித்து வைத்தார் போன்ற பல விஷயங்களை நம்ம ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில் அலசி ஆராய்ந்திருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

Rewind Raja: How Vijaykanth handled the Rajinikanth and Aachi Manorama clash!

யாருமே மனோரமாவுக்கு கை கொடுக்காத நிலையில், சின்ன கவுண்டர் விஜயகாந்த், நான் போய் பேசுறேன் என ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று நடிகர் ரஜினிகாந்தை விஜயகாந்த் சந்தித்துள்ளார்.

விஜயகாந்தை பார்த்தவுடன், வாங்க விஜி என்ன விஷயம் என கேட்க, இருவரும் கேரவனில் அமர்ந்து இந்த பிரச்சனை பற்றி ஆலோசித்துள்ளனர்.

நீங்க சொன்னா சரியா இருக்கும், என விஜயகாந்த் சொன்ன யோசனைக்கு மறு பேச்சே பேசாமல், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முடிவு செய்து மீண்டும் ஆச்சி மனோரமாவை தனது அருணாச்சலம் படத்தில் நடிக்க வைத்தார்.

கருப்பு எம்.ஜி.ஆர் என சும்மா ஒண்ணும் கேப்டன் விஜயகாந்தை புகழவில்லை என்பதற்கு இந்த ஒரு பிளாஷ்பேக் நிகழ்ச்சியும் முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. மேலும், chubby-ஆ தான் சாதிச்சோம் வீடியோவில் அஜித்தின் அமராவதி கதை பற்றி என்ன சொல்றாங்க என வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X