twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிளாஷ்பேக்.. அந்தக் காலத்து ரிதம்.. அழகாக நடித்த லட்சுமி.. ரீவைன்ட் பண்ணலாமா?

    |

    சென்னை: லாக்டவுன் நேரத்தில் பார்க்க வேண்டிய படங்களில் ரிதமும் ஒன்று.

    Recommended Video

    Bigg Boss Kavin Special B'Day Wishes to Amirtha Aiyer | Lift

    தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் ஹீரோயின் என்ற பட்டம் தாண்டி , ஒரு கட்டத்துக்கு மேல் குணசித்திர நடிகையாக மாறுவார்கள். ஹீரோயினாக வெற்றி பெற்றவர்கள் இப்படி பட்ட முதிர்ந்த கதாபாத்திரங்களிலும் ஒரு பெரிய ரவுண்ட் வருவார்கள்.

    அப்படி பட்ட ஒரு திறமைசாலி தான் நடிகை லட்சுமி. கருப்பு வெள்ளை காலம் தொடங்கி கலர் படங்கள் வரை 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். தன் இளமை வயதில் துருதுருப் பேச்சும் சுறு சுறுப்பான நடையும் பலரையும் கவர்ந்தது.

    பாத்ரூம்ல குத்த வச்சு துணி துவைச்சா கூட வீடியோவா.. என்னங்கடா டேய்!பாத்ரூம்ல குத்த வச்சு துணி துவைச்சா கூட வீடியோவா.. என்னங்கடா டேய்!

    கிளாமர் கதாபாத்திரங்களும் என்னால் செய்ய முடியும் என்று ஒரு சில படங்களில் நிரூபித்தார். ஆனால் சம்சாரம் அது மின்சாரம், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்கள் இவருக்கு வேறு ஒரு டைமென்ஷன் கொடுத்தது.

     பல விருதுகள்

    பல விருதுகள்

    பூரிப்பை முகத்தில் காட்டுவதில் நம்பர் ஒன் நடிகை இவர். பரவசப்படுவதிலும் , அழுது புலம்பி சாதிப்பதிலும் ஒரு தனி ஸ்டைல் காட்டினார் பல காட்சிகளில் . பல பிலிம்பார் விருதுகள், நந்தி அவார்ட், நேஷனல் அவார்ட் என்று விருதுகள் பட்டியல் ஏராளம். பல மொழி படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் மிக எளிதில் உருவாக்கினார்.

     நடிப்பின் சிகரம்

    நடிப்பின் சிகரம்

    ஐஸ்வர்யா ராய்க்கு பாட்டி என்று ஜீன்ஸ் படத்தில் நடித்தாலும், அதிலும் அந்த கதாபாத்திரத்துக்கு மிக முக்கியதுவும் காட்டி வெரைட்டி செய்தார். சிவாஜி , ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நட்பு, ஜாம்பவான் இயக்குனர்கள் அனைவரிடம் இருந்தும் பெற்ற அனுபவம் என்று இன்று வரை அவர் கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

     எதார்த்தத்தின் டாப்

    எதார்த்தத்தின் டாப்

    ரிதம் திரைப்படத்தில் மற்ற எல்லா கதாபாத்திரங்களைவிடவும் நேர்த்தியாக புனையப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட பாத்திரம் லட்சுமியுடையது. காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்ற கருத்தின் அடிப்படையில் உண்டாக்கப்பட்ட கதாபாத்திரம் அது. தன்னுடைய கொள்கைகள் தான் உயர்ந்தவை என கருதும் ஒருவர் கால ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதை கச்சிதமாக படத்தில் சொன்னது இந்த கதாபாத்திரம்

     தனித்துவமான நடிப்பு

    தனித்துவமான நடிப்பு

    ஏ ஆர் ரகுமானின் வீணை இசை பிண்ணனியில் நடந்து வரும் தொனியே லட்சுமியின் எண்ண ஓட்டத்தை சொல்லாமல் சொல்லிவிடும். வீட்டிற்க்கு நுழையத்தயங்குவதில் தொடங்கி தன்னுடைய சாதிய குணத்தை நேர்த்தியாக அதுதான் நியாயம் என்ற விதத்தில் நேர்த்தியாக பேசிச்செல்லும் போது அவரின் மொத்தகுணமும் அந்தகாட்சியில் வெளிப்பட்டுவிடும்.

     தவறுக்கு பிராயச்சித்தம்

    தவறுக்கு பிராயச்சித்தம்

    அதன் பின் ஜாதிமாறி தன் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்த மகனை வீட்டிற்குள் அனுமதிக்காமல் துரத்தி அந்த பயணத்தில் அவனை இழக்கிறாள். தன் மகன் இறப்பிற்கு மீனா தான் காரணம் என நம்புகிறாள். கடைசியில் இறக்கும் தருவாயில் உள்ள கணவரின் வார்த்தைகளின் மூலம் தன் மகனின் சாவுக்கு காரணம் தான் தான் என உணர்ந்து அதற்கு பிராயச்சித்தமாக தனது மருமகளை தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் பொருட்டு தேடி அலைகிறாள்.

     மருமகளுக்கு மறுமணம்

    மருமகளுக்கு மறுமணம்

    அவளைக் கண்டடைந்து தான் வெறுத்த பெண்ணின்கையால் உணவு உண்கிறாள். தன்னுடைய தவறை உணர்ந்து அழுது மன்னிப்பு கேட்கிறாள். தன்னுடைய தவறுக்கு பிராச்சித்தமாக தன்னுடன் வந்துவிடும்படி மன்றாடுகிறாள். அதை ஏற்று மீனாவும் குழந்தையை அழைத்துக்கொண்டு லட்சுமியுடன் செல்கிறாள். இங்கு தோணலாம் லட்சுமி திருந்திவிட்டாளே, தனியாக கஷ்டப்படும் பெண்ணுக்கு மறுதிருமணம் நடத்தி வைக்க முயன்றிருக்க வேண்டுமே என்று. ஆனால் லட்சுமியின் கதாபாத்திரம் டக்கென்று அப்படி சிந்திக்கும் பாத்திரம் கிடையாது. மீனாவை பம்பாயின் கண்டுபிடித்த பின்பு அவளிடம் அவளை கண்டுபிடிக்க பேங்க் பேங்க் காக தேடி அலைந்ததை சொல்லி அது தனக்கொரு ஷேத்ராடனம் என்று சொல்வாள்.

    மன்னிப்பு

    மன்னிப்பு

    அந்த கதாபாத்திரத்தை பொருத்தவரை முதலில் மீனா தான் தவறு செய்தது என நம்பி அவள் மேல் வெறுப்பாய் இருக்கிறாள். பின்பு அனைத்துக்கும் காரணம் தான் என உணர்ந்து நம்மால் தான் மீனா பாதிக்கப்பட்டுள்ளாள் என்ற நியாயமான முடிவுக்கு வருகிறாள். தான் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு பிராயச்சித்தம் செய்ய நினைக்கிறாள். அது தனியாக இருக்கும் மீனாவையும் குழந்தைகளையும் தன்னுடன் சேர்த்துக்கொள்வது. ஒருகாலத்தில் தன்னால் வெறுக்கப்பட்டவளை தன் ஆதரவில் வைத்துக்கொள்வது. அதுதான் தான் செய்த பாவத்திற்க்கு பிராச்சித்தம் என்ற நம்பிக்கையைத் தாண்டி லட்சுமி மறுமணம் என்றெல்லாம் துளிகூட நினைக்காதவள். அப்படி எண்ணும் சூழலிலும் அவள் பழக்கப்படவில்லை

     ஆழமான கருத்தை கூறும் வசனம்

    ஆழமான கருத்தை கூறும் வசனம்

    கடைசியில் அந்த குழந்தை மூலமாக மீனாவின் பழைய எண்ணம் தெரிய வரும்போது சட்டென தன்னுடைய தவறை உணர்ந்து அர்ஜுனிடம் மீனாவுக்காக பேசுகிறாள். அந்த கிளைமேக்ஸ் காட்சியில் லட்சுமி பேசும் வசனங்கள் தான் படத்தின் ஆகச்சிறந்த வசனம் எனச் சொல்லலாம். நல்லது செய்வதாக நினைத்து தான் செய்ய நினைத்த பெரும் தவறையும், வயதான காலத்தில் தனக்கொரு துணை வேண்டும் என தனக்கிருந்த சுயநலத்தையுமே வெளிப்படையாக சொல்லி அழுகிறாள்.

     நிறைவேற்றும் லட்சுமி

    நிறைவேற்றும் லட்சுமி

    தன்னை பழைய பஞ்சாங்கம் கட்டுப்பெட்டி என மீனா நினைத்திருப்பாள் என்பதை சொல்லி தான் அப்படியல்ல என்றும் எனக்கு இப்படி சிந்திக்க தோணவில்லை அதனால் தவறு செய்யப்பார்த்தேன் எனவும் வெளிப்படையாக பேசி அவர்களை சேர்த்து வைக்கிறாள். முதலில் தன்னால் நேரடியாகவும் பின்னர் மறைமுகமாகவும் மீனா பாதிக்கப்பட்டிருப்பதை லட்சுமி உணரும் தருணம் படத்தின் மிகச்சிறந்த பகுதி.

     நேர்த்தியான நடிப்பு

    நேர்த்தியான நடிப்பு

    ஆரம்பத்தில் பழமையிலும் சாதிவெறியிலும் அதன் உடன் நின்று தவறிழைத்த லட்சுமி படிப்படியாக மாறி கடைசியில் அந்த மறுமணத்தை நடத்தி வைக்க முக்கிய காரணமாய் நிற்கிறார். லட்சுமி நடித்த கதாபாத்திரங்களுள் அவர் மிக நேர்த்தியாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியவற்றுள் இது தலையாயது என்றால் அது மிகையில்லை.

     பார்க்க வேண்டிய படம்

    பார்க்க வேண்டிய படம்

    சில படங்கள் டி.வியில் நாம் நீண்ட நாட்கள் கழித்து திடீர் என்று பார்க்கும் பொழுது தான் நமது ஒட்டு மொத்த வேலையும் நிறுத்தி விட்டு அந்த படத்தை பார்க்க வைக்கும். மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி பட்ட படங்களில் ரிதம் படம் ஒன்று தான். வணிக ரீதியாக இந்த படம் எந்த அளவு வெற்றி என்று பெரிதாக சொல்ல முடியாது. ஆனால் இந்த லாக் டவுன் சமயத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நல்ல படங்கள் என்று எடுத்துக்கொண்டால் ரசிகர்களின் லிஸ்டில் லட்சுமி நடித்த ரிதம் படமும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

    English summary
    Rhythm is a great movie. One of the films that everyone should watch
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X