ஸ்பெஷல்ஸ்
"எழுத்துக் கிறுக்கன்" பார்த்திபன் நடிக்கும் அடுத்த படம் காதல் கிறுக்கன்.
சத்யராஜை வைத்து, என்னம்மா கண்ணு என்ற டபுள் மீனிங் வசனத்தால் புகழ் பெற்ற படத்தை இயக்கிய ஷக்திசிதம்பரம் இயக்கும் படம் தான் காதல் கிறுக்கன். கிறுக்கல்கள் என்ற பெயரில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டபார்த்திபனையே ஹீரோவாக போட்டுள்ளனர்.
இதில் "கிறுக்கியாக" (ஸாரி... ஹீரோயினாக) வரப் போகிறவர் ரிச்சா பலோட். இந்த ரோலில் நடிக்கத்தான் தான்முதலில் ஸ்னேகாவைத் தான் அணுகினர். ஆனால், அவர் சா சொல்லி விடவே, ரிச்சாவைப் பிடித்துப்போட்டுள்ளனர்.
விஜய் நடித்த ஷாஜகான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் இந்த ரிச்சா.
பார்த்திபன் நடிப்பதால், வழக்கம்போல வடிவேலுவுக்கு முக்கியமான காமெடி பாத்திரமாம். நாசரும் அசத்தலானவேடத்தில் வருகிறாராம். படத்தில் வினீத்தும் உண்டு.
ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக சில பாடல் காட்சிகளை லெபனான், சிரியா போன்ற மத்தியகிழக்கு நாடுகளில் படமாக்கவுள்ளனராம்.
படம் கிறுக்குத்தனமாக இருக்காத வரை சரி !!


Click it and Unblock the Notifications











