»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஆந்திர அரசியலில் குதித்து விடலாமா என்ற தீவிர யோசனையில் இருக்கிறார் நடிகை ரோஜா.

சிம்ரனைப் போலவே ஏகப்பட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் ரோஜா என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார். செக் மோசடிவழக்கு முடிவது போலத் தெரியவில்லை, இழுத்துக் கொண்டே போகிறது.

இது போதாதென்று எந்தப் புதிய படத்தில் புக் ஆனாலும் அந்த சம்பளத்தை கோர்ட் மூலம் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை வேறு அவரை புதிய படங்களில் ஒப்பந்தமாக விடாமல் தடுக்கிறது.

காதலித்து வந்த ஆர்.கே.செல்வமணியும் கடுப்படித்து விட்டதால் வெறுப்புடன் இருக்கிறார். புதிதாக கிடைத்த காதலரும் வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு போகப் போகிறாராம்.

சமீபத்தில் கோர்ட் உத்தரவுப்படி மன நலக் காப்பகத்திற்குச் சென்ற ரோஜா ஒரு நாளை அங்கு செலவிட்டார். மனதில்சுத்தமாக மகிழ்ச்சியே இல்லையாம்.

இத்தனை தொந்தரவுகளால் வெறுத்துப் போயுள்ள ரோஜாவுக்கு, ஆந்திர தேசத்தைச் சேர்ந்த ஒருவர் யோசனை கூறியுள்ளாராம்.

பேசாமல் ஆந்திர அரசியலில் சேர்ந்து விடு, ஏதாவது ஒரு முக்கியக் கட்சியில் சேர்ந்து, எம்.பி. பதவியோ அல்லது வேறு பதவியோ வாங்கி விடு, அதுதான் உனது பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு என்று அவர் கூறியதை கவனத்துடன் கேட்டுக் கொண்டாராம் ரோஜா.

இதையடுத்து தெலுங்கு தேசத்தில் சேர ரோஜா முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசத்தின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவைக்கூட பார்த்து பேசி விட்டதாக சொல்கிறார்கள்.

விரைவில் கட்சியில் சேரும் அறிவிப்பு வெளியாகலாம்.

Read more about: cinema, music, photo, roja, tamil news, thatstamil

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil