»   »  பிரஷாந்த் அம்மாவாக ரோஜா? கோலிவுட்டின் லேட்டஸ்ட் திகில் கிசுகிசு, புலன் விசாரணை- பாகம் 2 படத்தில் பிரஷாந்த்துக்கு அம்மாவாக, ரோஜா நடிக்கப்போகிறார் என்பதுதான்.விஜயகாந்த் நடித்து சக்கை போடு போட்ட படம் புலன் விசாரணை. ஆர்.கே.செல்வமணி இப்படத்தை இயக்கியிருந்தார். 200நாட்கள் வரை ஓடிய அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்கவிருக்கிறார், விஜயகாந்த்தின் முன்னாள் நண்பரானஇப்ராகிம் ராவுத்தர்.சிறிது காலமாக படத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்து வந்த இப்ராகிம் ராவுத்தர், தற்போது புலன் விசாரணையின் இரண்டாம்பாகத்தை செல்வமணியை வைத்தே எடுக்கிறார். படத்திற்கு புலன் விசாரணை- பாகம் 2 என்று பெயரிட்டுள்ளார்கள்.ஏற்கனவே வெளியான ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறையாகும்.பிரஷாந்த் நாயகனாக நிடிக்கிறார். சென்னையிலிருந்து டெல்லி சென்று குடியேறி விட்ட காவல்துறை அதிகாரி வேடத்தில்பிரஷாந்த் நடிக்கவுள்ளார்.ஒரிஜினல் புலன் விசாரணையில், ஆட்டோ சங்கர் விவகாரத்தை கையாண்டிருந்தார் ஆர்.கே.செல்வமணி. இரண்டாவது பாகத்தில்என்ன மாதிரியான கதையை சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.சரி அது இருக்கட்டும், சூடான மேட்டருக்கு வருவோம். இப்படத்தில் பிரஷாந்த்தின் அம்மா வேடத்தில் ரோஜாவை நடிக்கவைக்க ஆர்.கே.செல்வமணி யோசித்து வருவதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.ரோஜா தமிழில் நடிகையாக அறிமுகமாகிய செம்பருத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரஷாந்த். ஆர்.கே.செல்வமணிதான் அந்தப் படத்தையும் இயக்கியிருந்தார். இப் படத்திற்குப் பிறகு பிரஷாந்த்துடன் அவர் ஒரு படத்திலும் சேர்ந்துநடிக்கவில்லை.செம்பருத்திக்குப் பிறகு பெரிய ரவுண்டு அடித்து முடித்து விட்ட ரோஜா, 100 படங்களைத் தாண்டிய நாயகி என்ற பெயரையும்பெற்று விழாவும் கண்டார். நாயகி வாய்ப்பு குறையத் தொடங்கிய பின்னர் அக்கா, அண்ணி ரோலுக்கு மாறினார்.பின்னர் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த ஆர்.கே. செல்வமணியைத் திருமணம் செய்து கொண்டு அழகான குழந்தையையும்பெற்று, இப்போது வீட்டோடு செட்டிலாகி விட்டார்.இந் நிலையில் பிரஷாந்த்துக்கு அம்மா வேடத்தில் ரோஜாவை நடிக்க வைக்க ஆர்.கே.செல்வமணி திட்டமிட்டிருப்பதாகவந்துள்ள செய்தியால் கோலிவுட் வட்டாரம் ஆச்சரியப்பட்டுப் போய் நிற்கிறது.ஏற்கனவே சரத்குமாருக்கு அம்மாவாக ரோஜா நடித்திருந்தாலும், தன் முதல் பட நாயகனுக்கே அம்மா ரோலில் ரோஜா நடிப்பார்என்பது பரபரப்பை ஏற்படுத்தியது.இது நெசமா என்று செல்வமணியிடம் கேட்டபோது, அய்யோ.. இல்லீங்க. அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை. யார் இந்தவதந்தியை கிளப்பி விட்டாங்கன்னு தெரியலை. நிச்சயமா, எனக்கோ அல்லது ரோஜாவுக்கோ இப்படி ஒரு ஐடியாவே கிடையாதுஎன்கிறார்.புலன் விசாரணை வெற்றி பெற்றதை விட இரண்டு மடங்கு வெற்றியை இரண்டாம் பாகம் பெறும். அதைப் பொறுக்க முடியாதயாரோ சிலர்தான் இதுமாதிரியான குதர்க்கமான வதந்தியை பரப்பி விட்டிருக்கிறார்கள் என்கிறா செல்வமணி.

பிரஷாந்த் அம்மாவாக ரோஜா? கோலிவுட்டின் லேட்டஸ்ட் திகில் கிசுகிசு, புலன் விசாரணை- பாகம் 2 படத்தில் பிரஷாந்த்துக்கு அம்மாவாக, ரோஜா நடிக்கப்போகிறார் என்பதுதான்.விஜயகாந்த் நடித்து சக்கை போடு போட்ட படம் புலன் விசாரணை. ஆர்.கே.செல்வமணி இப்படத்தை இயக்கியிருந்தார். 200நாட்கள் வரை ஓடிய அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்கவிருக்கிறார், விஜயகாந்த்தின் முன்னாள் நண்பரானஇப்ராகிம் ராவுத்தர்.சிறிது காலமாக படத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்து வந்த இப்ராகிம் ராவுத்தர், தற்போது புலன் விசாரணையின் இரண்டாம்பாகத்தை செல்வமணியை வைத்தே எடுக்கிறார். படத்திற்கு புலன் விசாரணை- பாகம் 2 என்று பெயரிட்டுள்ளார்கள்.ஏற்கனவே வெளியான ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறையாகும்.பிரஷாந்த் நாயகனாக நிடிக்கிறார். சென்னையிலிருந்து டெல்லி சென்று குடியேறி விட்ட காவல்துறை அதிகாரி வேடத்தில்பிரஷாந்த் நடிக்கவுள்ளார்.ஒரிஜினல் புலன் விசாரணையில், ஆட்டோ சங்கர் விவகாரத்தை கையாண்டிருந்தார் ஆர்.கே.செல்வமணி. இரண்டாவது பாகத்தில்என்ன மாதிரியான கதையை சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.சரி அது இருக்கட்டும், சூடான மேட்டருக்கு வருவோம். இப்படத்தில் பிரஷாந்த்தின் அம்மா வேடத்தில் ரோஜாவை நடிக்கவைக்க ஆர்.கே.செல்வமணி யோசித்து வருவதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.ரோஜா தமிழில் நடிகையாக அறிமுகமாகிய செம்பருத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரஷாந்த். ஆர்.கே.செல்வமணிதான் அந்தப் படத்தையும் இயக்கியிருந்தார். இப் படத்திற்குப் பிறகு பிரஷாந்த்துடன் அவர் ஒரு படத்திலும் சேர்ந்துநடிக்கவில்லை.செம்பருத்திக்குப் பிறகு பெரிய ரவுண்டு அடித்து முடித்து விட்ட ரோஜா, 100 படங்களைத் தாண்டிய நாயகி என்ற பெயரையும்பெற்று விழாவும் கண்டார். நாயகி வாய்ப்பு குறையத் தொடங்கிய பின்னர் அக்கா, அண்ணி ரோலுக்கு மாறினார்.பின்னர் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த ஆர்.கே. செல்வமணியைத் திருமணம் செய்து கொண்டு அழகான குழந்தையையும்பெற்று, இப்போது வீட்டோடு செட்டிலாகி விட்டார்.இந் நிலையில் பிரஷாந்த்துக்கு அம்மா வேடத்தில் ரோஜாவை நடிக்க வைக்க ஆர்.கே.செல்வமணி திட்டமிட்டிருப்பதாகவந்துள்ள செய்தியால் கோலிவுட் வட்டாரம் ஆச்சரியப்பட்டுப் போய் நிற்கிறது.ஏற்கனவே சரத்குமாருக்கு அம்மாவாக ரோஜா நடித்திருந்தாலும், தன் முதல் பட நாயகனுக்கே அம்மா ரோலில் ரோஜா நடிப்பார்என்பது பரபரப்பை ஏற்படுத்தியது.இது நெசமா என்று செல்வமணியிடம் கேட்டபோது, அய்யோ.. இல்லீங்க. அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை. யார் இந்தவதந்தியை கிளப்பி விட்டாங்கன்னு தெரியலை. நிச்சயமா, எனக்கோ அல்லது ரோஜாவுக்கோ இப்படி ஒரு ஐடியாவே கிடையாதுஎன்கிறார்.புலன் விசாரணை வெற்றி பெற்றதை விட இரண்டு மடங்கு வெற்றியை இரண்டாம் பாகம் பெறும். அதைப் பொறுக்க முடியாதயாரோ சிலர்தான் இதுமாதிரியான குதர்க்கமான வதந்தியை பரப்பி விட்டிருக்கிறார்கள் என்கிறா செல்வமணி.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டின் லேட்டஸ்ட் திகில் கிசுகிசு, புலன் விசாரணை- பாகம் 2 படத்தில் பிரஷாந்த்துக்கு அம்மாவாக, ரோஜா நடிக்கப்போகிறார் என்பதுதான்.

விஜயகாந்த் நடித்து சக்கை போடு போட்ட படம் புலன் விசாரணை. ஆர்.கே.செல்வமணி இப்படத்தை இயக்கியிருந்தார். 200நாட்கள் வரை ஓடிய அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்கவிருக்கிறார், விஜயகாந்த்தின் முன்னாள் நண்பரானஇப்ராகிம் ராவுத்தர்.

சிறிது காலமாக படத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்து வந்த இப்ராகிம் ராவுத்தர், தற்போது புலன் விசாரணையின் இரண்டாம்பாகத்தை செல்வமணியை வைத்தே எடுக்கிறார். படத்திற்கு புலன் விசாரணை- பாகம் 2 என்று பெயரிட்டுள்ளார்கள்.


ஏற்கனவே வெளியான ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறையாகும்.பிரஷாந்த் நாயகனாக நிடிக்கிறார். சென்னையிலிருந்து டெல்லி சென்று குடியேறி விட்ட காவல்துறை அதிகாரி வேடத்தில்பிரஷாந்த் நடிக்கவுள்ளார்.

ஒரிஜினல் புலன் விசாரணையில், ஆட்டோ சங்கர் விவகாரத்தை கையாண்டிருந்தார் ஆர்.கே.செல்வமணி. இரண்டாவது பாகத்தில்என்ன மாதிரியான கதையை சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

சரி அது இருக்கட்டும், சூடான மேட்டருக்கு வருவோம். இப்படத்தில் பிரஷாந்த்தின் அம்மா வேடத்தில் ரோஜாவை நடிக்கவைக்க ஆர்.கே.செல்வமணி யோசித்து வருவதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.


ரோஜா தமிழில் நடிகையாக அறிமுகமாகிய செம்பருத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரஷாந்த். ஆர்.கே.செல்வமணிதான் அந்தப் படத்தையும் இயக்கியிருந்தார். இப் படத்திற்குப் பிறகு பிரஷாந்த்துடன் அவர் ஒரு படத்திலும் சேர்ந்துநடிக்கவில்லை.

செம்பருத்திக்குப் பிறகு பெரிய ரவுண்டு அடித்து முடித்து விட்ட ரோஜா, 100 படங்களைத் தாண்டிய நாயகி என்ற பெயரையும்பெற்று விழாவும் கண்டார். நாயகி வாய்ப்பு குறையத் தொடங்கிய பின்னர் அக்கா, அண்ணி ரோலுக்கு மாறினார்.

பின்னர் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த ஆர்.கே. செல்வமணியைத் திருமணம் செய்து கொண்டு அழகான குழந்தையையும்பெற்று, இப்போது வீட்டோடு செட்டிலாகி விட்டார்.


இந் நிலையில் பிரஷாந்த்துக்கு அம்மா வேடத்தில் ரோஜாவை நடிக்க வைக்க ஆர்.கே.செல்வமணி திட்டமிட்டிருப்பதாகவந்துள்ள செய்தியால் கோலிவுட் வட்டாரம் ஆச்சரியப்பட்டுப் போய் நிற்கிறது.

ஏற்கனவே சரத்குமாருக்கு அம்மாவாக ரோஜா நடித்திருந்தாலும், தன் முதல் பட நாயகனுக்கே அம்மா ரோலில் ரோஜா நடிப்பார்என்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது நெசமா என்று செல்வமணியிடம் கேட்டபோது, அய்யோ.. இல்லீங்க. அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை. யார் இந்தவதந்தியை கிளப்பி விட்டாங்கன்னு தெரியலை. நிச்சயமா, எனக்கோ அல்லது ரோஜாவுக்கோ இப்படி ஒரு ஐடியாவே கிடையாதுஎன்கிறார்.

புலன் விசாரணை வெற்றி பெற்றதை விட இரண்டு மடங்கு வெற்றியை இரண்டாம் பாகம் பெறும். அதைப் பொறுக்க முடியாதயாரோ சிலர்தான் இதுமாதிரியான குதர்க்கமான வதந்தியை பரப்பி விட்டிருக்கிறார்கள் என்கிறா செல்வமணி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil