twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போட்டுத் தாக்கும் ரோஷினி! திருச்சியிலிருந்து வந்து தித்திக்கும் குரலில் கோலிவுட்டைக் கலக்கிக்கொண்டிருக்கிறார் ரோஷினி. ரோஷினி நடிகை அல்ல, வளரும் பின்னணிப் பாடகி. இவர் நிறையப் பாடல்கள் பாடியிருந்தாலும் குத்து படத்தில் வந்த போட்டுத்தாக்குதான் ரோஷினியை ரசிகர்களுக்கு அடையாளம் காட்ட உதவியது.ரோஷினியின் அப்பா ஜோசப் கலியபெருமாள் தமிழ்ப் பேராசிரியர். ஜனாதிபதி கலாம்படித்த திருச்சி ஜோசப் கல்லூரியில்தான் வேலை பார்க்கிறார். அம்மா லூசிஇல்லத்தரசி, ரோஷினியின் பக்க பலமே இவர்தான்.சின்ன வயசிலேயே நல்ல குரல் வளம் படைத்தவரான ரோஷினி, தனது அக்காஅனிதா ஷாலினி மற்றும் அம்மாவின் தூண்டுதலால்தான் பாடுவதற்கு பயிற்சி எடுக்கஆரம்பித்தாராம்.3ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது இவரது பள்ளிக்கு சிறப்பு விருந்தினராகவந்த இசையமைப்பாளர் வித்யாசாகர் முன்னிலையில் இயேசுவைப் பற்றிய பாடலைரோஷினி பாட, குரலில் லயித்துப் போன வித்யாசாகர் இவரை தான் இசையமைத்தஆஹா என்ன பொருத்தம் படத்தில் பாட வைத்திருக்கிறார்.பின்னர் பள்ளியில் படித்துக் கொண்டே வேட்டியை மடிச்சுக் கட்டு, தாயுமானவன் எனசில படங்களில் பாடியுள்ளார்.ஆனால் இவரை பிரபலமாக்கியது குத்து படத்தில் வந்த போட்டு தாக்குதான்.அந்தப் பாடலை பாடியபோது பிளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தாராம். தொடர்ந்துஸ்ரீகாந்த் தேவா இசையில் சாணக்யா, பம்பரக் கண்ணாலே ஆகிய படங்களிலும்பாடியுள்ளார்.லேட்டஸ்டாக இவர் பாடிஹிட் ஆன பாடல், பட்டியல் படத்தில் வரும் நம்ம காட்டுலபாட்டு. தொடர்ந்து ஜாம்பவான், லயா, உறுதி, சிறுகதை என நிறைய படங்களில் பாடிவருகிறார் ரோஷினி.போட்டுத் தாக்கு மாதிரியான குத்துப் பாடல்களை பாடும் போது எபபடி உணர்வீர்கள்என்று கேட்டால், ஒரு உணர்வும் இல்லை. நான் ஒரு பாடகி. எந்த வகையானபாடலையும் பாடும் திறமை எனக்கு உண்டு. எனவே எப்படிப்பட்ட பாடலையும்பாடுவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன் என்கிறார் படுவிவரமாக.2000ம் ஆண்டில் அக்கா அனிதாவும் இவரும் இணைந்து திருச்சியில் 37மணி நேரம்நிறுத்தாமல் பாடி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார் ரோஷினிா. மேலும் அக்காவும்தங்கையுமாக பல மியூசிக் ஆல்பங்களையும் வெளியிட்டதோடு, 2,500 மேடைக்கச்சேரிகளையும் முடித்துவிட்டார்களாம்.ஆனால், அதன்மூலம் எல்லாம் கிடைக்காத பேரும் புகழும் போட்டத் தாக்கு.. சும்மாபோட்டுத் தாக்கு பாடல் மூலம் கிடைத்துவிட்டது ரோஷினிக்கு.அனிதா என்ஜினியரிங் முடித்துவிட்டு அமெரிக்காவில் எம்.எஸ். முடித்துவிட்டு ஒருசாப்ட்வேர் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறாராம்.இப்போது ரோஷினியும் என்ஜீனியரிங் படித்துக் கொண்டிருக்கிறார். நீங்களும்படிப்பை முடிச்சுட்டு அமெரிக்காவா என்று கேட்டால், சான்ஸே இல்லை, முழு மூச்சாகஇசைத் துறையில் கலக்கப் போகிறேன் என்கிறார்.

    By Staff
    |

    திருச்சியிலிருந்து வந்து தித்திக்கும் குரலில் கோலிவுட்டைக் கலக்கிக்கொண்டிருக்கிறார் ரோஷினி. ரோஷினி நடிகை அல்ல, வளரும் பின்னணிப் பாடகி.

    இவர் நிறையப் பாடல்கள் பாடியிருந்தாலும் குத்து படத்தில் வந்த போட்டுத்தாக்குதான் ரோஷினியை ரசிகர்களுக்கு அடையாளம் காட்ட உதவியது.

    ரோஷினியின் அப்பா ஜோசப் கலியபெருமாள் தமிழ்ப் பேராசிரியர். ஜனாதிபதி கலாம்படித்த திருச்சி ஜோசப் கல்லூரியில்தான் வேலை பார்க்கிறார். அம்மா லூசிஇல்லத்தரசி, ரோஷினியின் பக்க பலமே இவர்தான்.

    சின்ன வயசிலேயே நல்ல குரல் வளம் படைத்தவரான ரோஷினி, தனது அக்காஅனிதா ஷாலினி மற்றும் அம்மாவின் தூண்டுதலால்தான் பாடுவதற்கு பயிற்சி எடுக்கஆரம்பித்தாராம்.

    3ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது இவரது பள்ளிக்கு சிறப்பு விருந்தினராகவந்த இசையமைப்பாளர் வித்யாசாகர் முன்னிலையில் இயேசுவைப் பற்றிய பாடலைரோஷினி பாட, குரலில் லயித்துப் போன வித்யாசாகர் இவரை தான் இசையமைத்தஆஹா என்ன பொருத்தம் படத்தில் பாட வைத்திருக்கிறார்.

    பின்னர் பள்ளியில் படித்துக் கொண்டே வேட்டியை மடிச்சுக் கட்டு, தாயுமானவன் எனசில படங்களில் பாடியுள்ளார்.

    ஆனால் இவரை பிரபலமாக்கியது குத்து படத்தில் வந்த போட்டு தாக்குதான்.

    அந்தப் பாடலை பாடியபோது பிளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தாராம். தொடர்ந்துஸ்ரீகாந்த் தேவா இசையில் சாணக்யா, பம்பரக் கண்ணாலே ஆகிய படங்களிலும்பாடியுள்ளார்.

    லேட்டஸ்டாக இவர் பாடிஹிட் ஆன பாடல், பட்டியல் படத்தில் வரும் நம்ம காட்டுலபாட்டு. தொடர்ந்து ஜாம்பவான், லயா, உறுதி, சிறுகதை என நிறைய படங்களில் பாடிவருகிறார் ரோஷினி.

    போட்டுத் தாக்கு மாதிரியான குத்துப் பாடல்களை பாடும் போது எபபடி உணர்வீர்கள்என்று கேட்டால், ஒரு உணர்வும் இல்லை. நான் ஒரு பாடகி. எந்த வகையானபாடலையும் பாடும் திறமை எனக்கு உண்டு. எனவே எப்படிப்பட்ட பாடலையும்பாடுவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன் என்கிறார் படுவிவரமாக.

    2000ம் ஆண்டில் அக்கா அனிதாவும் இவரும் இணைந்து திருச்சியில் 37மணி நேரம்நிறுத்தாமல் பாடி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார் ரோஷினிா. மேலும் அக்காவும்தங்கையுமாக பல மியூசிக் ஆல்பங்களையும் வெளியிட்டதோடு, 2,500 மேடைக்கச்சேரிகளையும் முடித்துவிட்டார்களாம்.

    ஆனால், அதன்மூலம் எல்லாம் கிடைக்காத பேரும் புகழும் போட்டத் தாக்கு.. சும்மாபோட்டுத் தாக்கு பாடல் மூலம் கிடைத்துவிட்டது ரோஷினிக்கு.

    அனிதா என்ஜினியரிங் முடித்துவிட்டு அமெரிக்காவில் எம்.எஸ். முடித்துவிட்டு ஒருசாப்ட்வேர் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறாராம்.

    இப்போது ரோஷினியும் என்ஜீனியரிங் படித்துக் கொண்டிருக்கிறார். நீங்களும்படிப்பை முடிச்சுட்டு அமெரிக்காவா என்று கேட்டால், சான்ஸே இல்லை, முழு மூச்சாகஇசைத் துறையில் கலக்கப் போகிறேன் என்கிறார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X