‘கொல வெறியை’ காட்சிப்படுத்த ரூ. 2 கோடி
உலக மெங்கும் புகழ்பெற்ற கொலைவெறி பாடலை 2 கோடி ரூபாய் செலவு செய்து காட்சிப்படுத்தியுள்ளனர். பாடல் செய்த சாதனை படத்தில் தெரியுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து இருக்கும் படம் '3'. ஐஸ்வர்யா தனுஷ் முதன் முறையாக இயக்கி இருக்கும் படம் இது. அனிருத் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 'ஒய் திஸ் கொலவெறி ' பாடல் மூலமாக தான் 3 படத்திற்கு ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
'கொலவெறி' பாடலுக்கு கிடைத்த எதிர்ப்பார்ப்பால் இப்பாடலை எப்படி காட்சிப்படுத்துவது என்பதை ஆலோசித்து வந்தார்கள் '3' படக்குழுவினர். இந்நிலையில் இப்பாடலை காட்சிப்படுத்துவதற்கு படத்தின் ஸ்பான்ஸர்கள் '3' படத்தின் தயாரிப்பு தரப்புக்கு 2 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்களாம்.
Comments


Click it and Unblock the Notifications