twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாடும்போது நான் தென்றல் காற்று.. நடிப்பிலும் ஜொலித்த எஸ்.பி.பி! #HappyBirthdaySPB

    பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நடிப்பிலும் கலக்கியிருக்கிறார்.

    |

    Recommended Video

    பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு இன்று 72வது பிறந்தநாள்!- வீடியோ

    சென்னை: சிறந்த பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பல நடிங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார்.

    சினிமா துறையில் பண்முக பரிமாணம் கொண்டவர்கள் வெகு சிலரே. அந்த வரிசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் ஒருவர். சிறந்த பாடகராக புகழ்பெற்றவராக திகழும் எஸ்.பி.பி. பல படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக கேளடி கண்மனி, சிகரம் உள்ளிட்ட பிடங்களில் கதையின் நாயகனாகவும் அவர் நடித்திருக்கிறார்.
    தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் என 100க்கும் அதிகமான படங்களில் நடித்த ஒரே பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான். கமல், அஜித், விஜய், பிரபுதேவா, அரவிந்த்சாமி உள்ளிட்ட பல நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

    அவரது 72வது நாளில் எஸ்.பி.பி. நடித்த தமிழ் படங்கள் பற்றி சிறிய தொகுப்பு பின்வருமாறு...

    மருத்துவராக அறிமுகமாகியவர்...

    மருத்துவராக அறிமுகமாகியவர்...

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழில் நடித்த முதல் படம் மனதில் உறுதி வேண்டும். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சுஹாசினி ஹீரோயினாக நடித்த இந்த படத்தில் மருத்துவராக நடித்திருப்பார் எஸ்.பி.பி. ஏற்கனவே நிறைய தெலுங்கு படங்களில் நடித்த அனுபவத்தால், மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அவர்.

    'மண்ணில் இந்த காதல் இன்றி'

    'மண்ணில் இந்த காதல் இன்றி'

    ஒரு நடுத்தர வயது ஆணக்கும் பெண்ணுக்குமான காதலை மையமாக வைத்து, 1990ம் ஆண்டு வெளிவந்த படம் கேளடி கண்மணி. மனைவியை இழந்த விதவைக் கணவானகவும், ஒரு பெண் குழந்தையின் தந்தையாகவும், ஒரு நடுத்ததர வயது ஆணின் வலியையும், வேதனையையும், மகிழ்ச்சியையும் அழகாக வெளிப்படுத்தி இருப்பார் எஸ்.பி.பி. இந்த படத்தில் வரும் மண்ணில் இந்த காதல் இன்றி பாடலில், இரண்டு சரணங்களை மூச்சு விடாமல் பாடியும், நடித்தும் அசத்தி இருப்பார்.

    முன்னணி கதாநாயகிகளுக்கு ஜோடி...

    முன்னணி கதாநாயகிகளுக்கு ஜோடி...

    1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக விலங்கியவர்கள் ராதா, ராதிகா, கீதா உள்ளிட்ட நடிகைகள். கேளடி கண்மணி படத்தில் ராதிகா மற்றும் கீதாவுடன் இணைந்து நடித்த எஸ்.பி.பி., சிகரம் படத்தில் ராதாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். இந்த படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

    கமலின் மருத்துவர் எஸ்.பி.பி.

    கமலின் மருத்துவர் எஸ்.பி.பி.

    மனதில் உறுதி வேண்டும் தொடங்கி பல படங்களில் மருத்துவர் வேடத்தில் நடித்துள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். குறிப்பாக கமல் படங்களில் மருத்துவர் வேடத்தையே ஏற்றிருக்கிறார் இவர். குணா படத்தில் கமலில் பர்சனெல் மருத்துவராக எஸ்.பி.பி. நடித்திருப்பார். அதேபோல, அவ்வை சண்முகி படத்தில் எஸ்.பி.பி.க்கு மருத்துவர் வேடம் தான்.

    பிரபுதேவாவுடன் நடனம்...

    பிரபுதேவாவுடன் நடனம்...

    பாடுவதில் கவனம் செலுத்திய அளவுக்கு நடிப்பிலும் அக்கறையுடம் செயல்பட்டவர் எஸ்.பி.பி. காதலன் படத்தில் பிரபு தேவாவுக்கு தந்தையாக நடித்த எஸ்.பி.பி., மின்சாரக் கனவு படத்தில் அரவிந்த் சாமிக்கு தந்தையாக நடித்திருப்பார். காதலன் படத்தில் பிரபு வேதாவுடன் சேர்ந்து, அவர் நடனமாடிய 'காதலிக்கு பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்' பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

    தந்தை வேடம்...

    தந்தை வேடம்...

    உல்லாசம் படத்தில் அஜித்துக்கு தந்தையாக நடித்திருப்பார் எஸ்.பி.பி. அதேபோல பிரியமானவளே படத்தில் விஜய்யின் தந்தையாக கலக்கியிருப்பார். ரட்சகன், நாணயம், ஏப்ரல் மாதத்தில், திருடா, திருடா என எஸ்.பி.பி. நடிப்பில் வெளிவந்த ஹிட் படங்கள் ஏராளம்.

    English summary
    The great singer S.P.Balasubramaniam had acted in many movies in tamil, telugu and Kannada cinemas. He is the only singer, acted in more than hundred movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X