twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்களை பாடல்களால் கட்டிப் போட்ட ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி.க்கு இன்று 72வது பிறந்தநாள் !

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று தமது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்!

    |

    Recommended Video

    பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு இன்று 72வது பிறந்தநாள்!- வீடியோ

    சென்னை: உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான திரைப் பாடல்களைப் பாடியவர் என்ற கின்னஸ் சாதனைப் படைத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாள் இன்று.

    ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தவர் எஸ்.பி.பி. என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், எந்த மொழியில் பாடல் கொடுத்தாலும் அந்த மொழிக்கேற்ற இயல்பான உச்சரிப்புடன் பாடுவதே இவரது சிறப்பு.

    S.P.Balasubramaniam celebrating his 72nd birthyday today

    இன்று 72வது பிறந்தநாள் கொண்டாடும் எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு உங்களுக்காக..

    • எஸ்.பி.பி.யின் அப்பாவும் இசைக்கலைஞர் தான். ஹரிகதா காலட்சேபம் செய்வதில் வல்லவர். இதனால் இளம் இளவயதிலேயே எஸ்.பி.பி.க்கும் பாடல் பாடுவதில் ஆர்வம் ஏற்பட்டது.
    • 1966ம் ஆண்டு கோதண்டபாணி இசையமைப்பில் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் பாடகராக அறிமுகமானார் எஸ்.பி.பி. தமிழில் ஜெமினி நடித்த சாந்தி நிலையம் திரைப்படம் தான் அவர் முதன்முதலாகப் பாடியது. ஆனால், அப்பட ரிலீசுக்கு முன்னரே எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தில் அவர் பாடிய 'ஆயிரம் நிலவே வா' பாடல் வெளியாகி ஹிட்டானது.
    • ஆரம்பமே அமர்க்களமாகிவிட, தொடர்ந்து தமிழில் ஏராளமான வாய்ப்புகள் வரத் தொடங்கின. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி சாதனை படைத்ததால் எஸ்.பி.பி.யின் பெயர் கின்னஸ் உலகசாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது.
    • முறையாக கர்நாடக சங்கீதம் கற்காதபோதும், சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களைச் சிறப்பாகப் பாடி பாராட்டுகளை அள்ளினார். இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருதைப் பெற்றார். பிடித்துள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது, தமிழக, கர்நாடக அரசுகளின் பல விருதுகள், 25 முறை ஆந்திர அரசின் நந்தி விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருது என இவர் விருதுகளின் நாயகன்.
    • எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் என தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். அவர் உடலுக்கு வயது கூடினாலும், குரல் என்றுமே இளமையாகத் தான் உள்ளது. நான்கு தலைமுறை நடிகர்களுக்குப் பின்னணி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமையுடன் அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் அதே இளமைத் துள்ளலுடன் அவரது பயணம் தொடர்வதே இதற்குச் சாட்சி.
    • 1981-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள ஒரு ரெகார்டிங் தியேட்டரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களைக் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காகப் பாடிச் சாதனை புரிந்துள்ளார். தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடிச் சாதனை செய்துள்ளார்.
    • பாடல் மட்டுமின்றி கமல், ரஜினி, பாக்யராஜ் உள்ளிட்ட பலருக்கு பல்வேறு மொழிப் படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். நடிப்பிலும் தான் சளைத்தவரல்ல என தென்னிந்திய மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 45 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.
    • 60-களில் தொடங்கிய இவரது இசைப் பயணம் இன்றளவும் தொடர்கிறது.

    English summary
    The world guiness record holder and great playback singer S.P.Balasubramaniam celebrating his 72nd birthyday today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X