மெரீனாவில் கண்ணகி சிலை.. கணவன் செய்த துரோகத்தால் தனிமரமாக வாழ்ந்த விஜயகுமாரியின் கதை!

சென்னை: தமிழ் சினிமாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகைகளுக்கு என்று தனிப்பெரும் அடையாளங்கள் வகுக்கப்பட்ட நிலையில், முதன்முதலாக தமிழ் சினிமா தாண்டி தமிழ் வரலாற்றிலேயே தமிழ் பெண்ணின் அடையாளமாக அறியப்பட்டு கண்ணகியின் மறுஉருவமாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை விஜயகுமாரி. தமிழ் சினிமாவில் 1950 கால கட்டத்தில் பெரும்பாலும் அண்டை மாநிலத்தை சேர்ந்த பெண்கள் தமிழ் சினிமாவை அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தமிழ் பெண்ணான விஜயகுமாரி தன் நடிப்பாலும், தான் தேர்ந்தெடுத்து நடித்த சிறப்பான கதாபாத்திரங்களாலும் நம் அனைவரின் நெஞ்சத்திலும் நீங்காத இடத்தை பிடித்தார். அது மட்டும் இன்றி பேரறிஞர் அண்ணா தொடங்கி எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா என பல முதல்வர்களோடும் அதிகம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றவர் விஜயகுமாரி.

சினிமா குடும்ப பின்னணி இன்றி சினிமாவில் நுழைந்து தனக்கு என்று தனி பாதை அமைத்துக் கொண்டு தனிப்பெரும் நடிகையாக விஜயகுமாரி முன்னேறி சென்று, தன்னோடு நடித்த நடிகரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டு அவருடைய அதிகளவில் படங்களின் நடித்து, அவருக்காகவே சில பட வாய்ப்புகளை இழந்த விஜயகுமாரி, பின் எவ்வாறு எஸ்.எஸ்.ஆரை பிரிந்தார். விஜயகுமாரி வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Vijayakumari S S Rajendran painful
Photo Credit:

நடிகை விஜயகுமாரி: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை பூர்வீகமாக கொண்ட விஜயகுமாரி. ராமசாமி கவுண்டர் மற்றும் தனலட்சுமி தம்பதியினருக்கு இரண்டாவது மகளாக பிறந்தார். சிறுவயதிலிருந்தே மிகவும் அமைதியான பெண்ணாக வளர்ந்து வந்துள்ள விஜயகுமாரி, பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எந்த ஒரு விளையாட்டுப் போட்டி, பாட்டு போட்டி, நடன போட்டி என எதிரும் கலந்து கொள்ளாது தான் உண்டு, தன் படிப்பு உண்டு என இருந்துள்ளார். இதைப்பார்த்த ஆசிரியர் ஒருவர், விஜயகுமாரியை அழைத்து ஆண்டு விழாவில் நடனம் ஆட வேண்டும் என கூறியுள்ளார். நடனத்தைப் பற்றி எதுவுமே தெரியாத விஜயகுமாரிடம் ஆசிரியர் இவ்வாறு கூறியதால், வேறு வழியே இல்லாமல், பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக நடனமாடினார்.

நடிப்பின் மீது காதல்: பின் அதே ஆசிரியர், சினிமாவில் நடிக்க முயற்சி செய் நிச்சயம் நன்றாக வருவாய் என சொல்ல, விஜயகுமாரிக்கும் சினிமா மீதும், நடிப்பு மீதும் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை முதலில் பெற்றோரிடம் தெரிவித்த போது, அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின், அவர்கள் பச்சைக்கொடி காட்டினார்கள். அப்போது, ஏவிஎம் நிறுவனம் அளித்திருந்து விளம்பரத்தை பார்த்து, தான் புகைப்படங்களை அனுப்பி வைத்தார் விஜயகுமாரி. ஆடிஷனில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு வர, ஆடிசனுக்கு சென்று கடினமான டயலாக்கை சிறப்பான தமிழ் உச்சரிப்போடு பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதன் காரணமாக ஏவிஎம் நிறுவனத்தின் படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு விஜயகுமாரிடம் ஒப்பந்தமும் செய்யப்பட்டார்.

எளிமையான திருமணம்: இவ்வாறு தமிழ் சினிமாவின் முதல் அடியை எடுத்து வைத்த விஜயகுமாரி ஏவிஎம் நிறுவனம் தயாரித்த, குலதெய்வம் என்ற படத்தில் அறிமுகமானதோடு தன் வருங்கால கணவரான எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் ஜோடியாக நடித்தார். இவ்வாறு குலதெய்வம் படத்தில் விஜயகுமாரின் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் விஜயகுமாரின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போக, அந்த சமயத்தில் எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரின் குடும்பத்திற்கு மிகவும் ஆதரவாக இருந்துள்ளார். இதுவே எஸ்.எஸ்.ராஜேந்திரன் மீது விஜயகுமாரிக்கு காதல் ஏற்பட காரணமாக இருந்தது. ஒரு கட்டத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் தாயார் விஜயகுமாரியை சந்தித்து என் பையனை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்க, விஜயகுமாரியும் சம்மதம் சொல்ல, ராஜேந்திரன் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற்றது.

உருகி உருகி காதல்: சினிமாவில் அடி எடுத்து வைத்த சிறிது காலத்திலேயே எஸ்.எஸ்.ஆர்ஐ கைப்பிடித்த விஜயகுமாரி தொடர்ந்து படங்களை நடிக்க துவங்கியதோடு, கணவரோடு இணைந்து அவர் நடத்தி வந்த நாடக குழுவிலும் நடித்து வந்தார். அந்த காலகட்டத்தில் எஸ்.எஸ்.ஆர் விஜயகுமாரி ஜோடிக்கு என்று தமிழ் சினிமாவின் தனி மவுசு இருந்ததோடு, இவர்களின் ஜோடி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதன் காரணமாக பல படங்களில் இவர் இருவருமே ஜோடி போட்டு நடித்தார்கள். இவர்கள் திரையில் எப்படி உருக உருக காதலித்து வந்தார்களோ அதே போல, நிஜத்திலும் கணவன் மனைவியாக ஒருவர் மீது ஒருவர் மிக அதிகமான அன்பும் கொண்டிருந்தனர்.

நடிக்க மறுத்தார்: கணவருடன் மட்டுமே ஜோடியாக நடிக்க விரும்பி விஜயகுமாரி, தனது கணவருக்காக சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். உதாரணமாக கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளியான கற்பகம் படத்தில் நடிக்க இருந்தது விஜயகுமாரி தான். ஆனால், அந்த படத்தில் தனக்கு கதாநாயகன் வாய்ப்பு கொடுத்தால் தான், அதில் விஜயகுமாரி நடிப்பார் என்று எஸ்.எஸ்.ஆர் சொல்லி இருக்கிறார். இதற்கு வாய்ப்பு மறுக்கப்பட, விஜயகுமாரியும் அந்த படத்தில் நடிக்கவிருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார்.

கண்ணகி : கண்ணகி படத்தில் கண்ணகியாக தன் சிறப்பான நடிப்பை கண்ணம்மா, வெளிப்படுத்திய போதும், அதே கதாபாத்திரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்து தான் சிறப்பான நடிப்பாலும், கலைஞரின் வசனங்களை உள்வாங்கி பேசியும் இன்றளவும் கண்ணகியின் உருவமாக நம் அனைவரின் கண் முன் இருக்கிறார் விஜயகுமாரி.
விஜயகுமாரின் கணவரும் நடிகருமான எஸ்எஸ்ஆர் சினிமாவில் நடிப்பதை தாண்டி அரசியலும் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டு இருந்தார். திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு செயலாற்றுகினார். திமுக தலைவரான அண்ணாவின் அன்பு தம்பியாக பார்க்கப்பட்டார். அத்தோடு திமுகவில் மற்ற தலைவர்களான கலைஞர், சிவாஜி, எம்ஜிஆர் போன்றவர்களும் அதிகம் நெருக்கம் காட்டி வந்தார்.

காதல் கணவரை பிரிந்தார்: கண்ணகியின் சிலைக்கு உருவம் தர விஜயகுமாரின் போட்டோவை அந்த கலைஞரிடம் கொடுத்தவர் அண்ணா என்றால், அதனை முழுமையாக செய்து முடித்தவர் கலைஞர். இப்படி அரசியல் நட்சத்திரங்கள் பலரோடு நல்ல பழக்கத்தோடு சினிமாவின் உச்சத்திலும் விஜயகுமாரி இருந்த சமயத்தில் திடீரென விஜயகுமாரின் வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. எஸ்.எஸ்.ஆருக்கு இருந்த குடிப்பழக்கம் விஜயகுமாரிக்கு பிடிக்க வில்லை. இது அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. எஸ்எஸ்ஆர் விஜயகுமாரி இணைந்து ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்றார். ஆனால், ஏதோ ஒரு காரணம் சொல்லி விஜயகுமாரியை சென்னையில் விட்டுவிட்டு அதே படத்தில் நடித்த வேறு ஒரு நடிகையுடன் கொடைக்கானலுக்கு சென்றது விஜயகுமாரியின் கோபத்தை மேலும் தூண்டியதாக தெரிகிறது. இப்படி பல காரணங்களால் 1968ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரனை விட்டு பிரிந்து தன் மகன் ரவிக்குமாரை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியெறினார்.

அதன் பின்னர் 48 ஆண்டுகள் எஸ்எஸ்ஆருடன் பேசாமலும் பார்க்காமலும் இருந்த விஜயகுமாரி, அவர் இறந்த சமயத்தில் அவரை காண ஓடிவந்து, காதலை கண்ணீருடன் வெளிப்படுத்தியதோடு மனைவியாக சடங்குகளை செய்தார். விஜயகுமாரி தற்போது சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி, தன் மகனோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X