»   »  பாலிவுட்டுக்கு வருவாராமிஸ் ஆஸ்திரேலியா சபரீனா? மிஸ் வேர்ல்ட் பட்டத்தை மயிரிழையில் நழுவ விட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிஸ் ஆஸ்திரேலியாசபரினா ஹூசாமிக்கு இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன.மிஸ் ஆஸ்திரேலியா-2006 ஆக தேர்வான சபரீனா, பிறப்பால் இந்தியர். 20 வயதாகும் சபரீனா, சமீபத்தில் வார்சாநகரில் நடந்த மிஸ்.வேர்ல்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சார்பில் கலந்து கொண்டார். ஆனால் 3வதுஇடத்தைத்தான் அவரால் பிடிக்க முடிந்தது.மிஸ் வேர்ல்ட் பட்டத்தை நழுவ விட்டாலும் கூட சபரீனாவால் இந்தியாவுக்கும் கொஞ்சம் பெருமைகிடைக்கத்தான் செய்தது.இந் நிலையில் அவரை இந்திப் படங்களில் நடிக்க வைக்க பாலிவுட் பார்ட்டிகள் தீவிர முயற்சிகளில்இறங்கியுள்ளன. அவருக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் இதுவரை படங்களில்நடிப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்கிறார் சபரீனா.சபரீனாவின் தாயார் இந்தியாவைச் சேர்ந்த இந்து, தந்தை லெபனானைச் சேர்ந்த முஸ்லீம். இருவர் குறித்தும்பேசும்போது சபரீனாவுக்கு பெருமை பிடிபடவில்லை.எனது தாயார் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. எனது இதயத்தில்இந்தியாவுக்கென்று தனி இடம் உள்ளது. நான் இந்தியாவை மிக நேசிக்கிறேன்.இதுவரை 12 முறை இந்தியா சென்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் அங்கு போகும்போதும் உணர்ச்சிஅலைகளால் உந்தப்படுகிறேன். ஏதோ புண்ணிய யாத்திரைக்கு போவது போலத்தான் அது அமைகிறது என்றுபுல்லரிக்க வைக்கிறார் சபரீனா.நடிப்பதில் ஆர்வம் காட்டாவிட்டாலும் கூட மனதுக்குள் ஒரு ஓரம் சினிமா குறித்த சிந்தனை இருப்பதை சபரீனாமறுக்கவில்லை. ஆனால் தற்போதைக்கு டிவி செய்தியாளராக பணியாற்றவே விரும்புவதாக சபரீனா கூறுகிறார்.ஆரம்பத்தில் இருந்தே மாடலிங்கில் ஆர்வம் கொண்ட சபரீனா, முதலில் மிஸ் டீன் ஆஸ்திரேலியா போட்டியில்வென்று பின்னர் மிஸ் ஆஸ்திரேலியா போட்டியிலும் வென்றவர்.சிட்னி பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சபரீனா செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச பொது மன்னிப்புஅமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் உள்ளிட்ட அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவர்.மிஸ் டீன் ஆஸ்திரேலியா பட்டம் பெற்ற பின் அதைத் தொடர்ந்து சபரீனா பல சாரிட்டி ஷோக்களில் பங்கேற்றசபரீனா அதன் மூலம் 1.2 மில்லியன் டாலர்களைத் திரட்டி செஞ்சிலுவை சங்கத்துக்கு வழங்கியிருக்கிறார்.இப்படிப்பட்டவருக்கு இந்தி சினிமா சரிப்பட்டு வருமா என்று தெரியவில்லை.

பாலிவுட்டுக்கு வருவாராமிஸ் ஆஸ்திரேலியா சபரீனா? மிஸ் வேர்ல்ட் பட்டத்தை மயிரிழையில் நழுவ விட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிஸ் ஆஸ்திரேலியாசபரினா ஹூசாமிக்கு இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன.மிஸ் ஆஸ்திரேலியா-2006 ஆக தேர்வான சபரீனா, பிறப்பால் இந்தியர். 20 வயதாகும் சபரீனா, சமீபத்தில் வார்சாநகரில் நடந்த மிஸ்.வேர்ல்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சார்பில் கலந்து கொண்டார். ஆனால் 3வதுஇடத்தைத்தான் அவரால் பிடிக்க முடிந்தது.மிஸ் வேர்ல்ட் பட்டத்தை நழுவ விட்டாலும் கூட சபரீனாவால் இந்தியாவுக்கும் கொஞ்சம் பெருமைகிடைக்கத்தான் செய்தது.இந் நிலையில் அவரை இந்திப் படங்களில் நடிக்க வைக்க பாலிவுட் பார்ட்டிகள் தீவிர முயற்சிகளில்இறங்கியுள்ளன. அவருக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் இதுவரை படங்களில்நடிப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்கிறார் சபரீனா.சபரீனாவின் தாயார் இந்தியாவைச் சேர்ந்த இந்து, தந்தை லெபனானைச் சேர்ந்த முஸ்லீம். இருவர் குறித்தும்பேசும்போது சபரீனாவுக்கு பெருமை பிடிபடவில்லை.எனது தாயார் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. எனது இதயத்தில்இந்தியாவுக்கென்று தனி இடம் உள்ளது. நான் இந்தியாவை மிக நேசிக்கிறேன்.இதுவரை 12 முறை இந்தியா சென்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் அங்கு போகும்போதும் உணர்ச்சிஅலைகளால் உந்தப்படுகிறேன். ஏதோ புண்ணிய யாத்திரைக்கு போவது போலத்தான் அது அமைகிறது என்றுபுல்லரிக்க வைக்கிறார் சபரீனா.நடிப்பதில் ஆர்வம் காட்டாவிட்டாலும் கூட மனதுக்குள் ஒரு ஓரம் சினிமா குறித்த சிந்தனை இருப்பதை சபரீனாமறுக்கவில்லை. ஆனால் தற்போதைக்கு டிவி செய்தியாளராக பணியாற்றவே விரும்புவதாக சபரீனா கூறுகிறார்.ஆரம்பத்தில் இருந்தே மாடலிங்கில் ஆர்வம் கொண்ட சபரீனா, முதலில் மிஸ் டீன் ஆஸ்திரேலியா போட்டியில்வென்று பின்னர் மிஸ் ஆஸ்திரேலியா போட்டியிலும் வென்றவர்.சிட்னி பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சபரீனா செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச பொது மன்னிப்புஅமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் உள்ளிட்ட அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவர்.மிஸ் டீன் ஆஸ்திரேலியா பட்டம் பெற்ற பின் அதைத் தொடர்ந்து சபரீனா பல சாரிட்டி ஷோக்களில் பங்கேற்றசபரீனா அதன் மூலம் 1.2 மில்லியன் டாலர்களைத் திரட்டி செஞ்சிலுவை சங்கத்துக்கு வழங்கியிருக்கிறார்.இப்படிப்பட்டவருக்கு இந்தி சினிமா சரிப்பட்டு வருமா என்று தெரியவில்லை.

Subscribe to Oneindia Tamil

மிஸ் வேர்ல்ட் பட்டத்தை மயிரிழையில் நழுவ விட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிஸ் ஆஸ்திரேலியாசபரினா ஹூசாமிக்கு இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன.

மிஸ் ஆஸ்திரேலியா-2006 ஆக தேர்வான சபரீனா, பிறப்பால் இந்தியர். 20 வயதாகும் சபரீனா, சமீபத்தில் வார்சாநகரில் நடந்த மிஸ்.வேர்ல்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சார்பில் கலந்து கொண்டார். ஆனால் 3வதுஇடத்தைத்தான் அவரால் பிடிக்க முடிந்தது.

மிஸ் வேர்ல்ட் பட்டத்தை நழுவ விட்டாலும் கூட சபரீனாவால் இந்தியாவுக்கும் கொஞ்சம் பெருமைகிடைக்கத்தான் செய்தது.

இந் நிலையில் அவரை இந்திப் படங்களில் நடிக்க வைக்க பாலிவுட் பார்ட்டிகள் தீவிர முயற்சிகளில்இறங்கியுள்ளன. அவருக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் இதுவரை படங்களில்நடிப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்கிறார் சபரீனா.

சபரீனாவின் தாயார் இந்தியாவைச் சேர்ந்த இந்து, தந்தை லெபனானைச் சேர்ந்த முஸ்லீம். இருவர் குறித்தும்பேசும்போது சபரீனாவுக்கு பெருமை பிடிபடவில்லை.

எனது தாயார் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. எனது இதயத்தில்இந்தியாவுக்கென்று தனி இடம் உள்ளது. நான் இந்தியாவை மிக நேசிக்கிறேன்.

இதுவரை 12 முறை இந்தியா சென்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் அங்கு போகும்போதும் உணர்ச்சிஅலைகளால் உந்தப்படுகிறேன். ஏதோ புண்ணிய யாத்திரைக்கு போவது போலத்தான் அது அமைகிறது என்றுபுல்லரிக்க வைக்கிறார் சபரீனா.

நடிப்பதில் ஆர்வம் காட்டாவிட்டாலும் கூட மனதுக்குள் ஒரு ஓரம் சினிமா குறித்த சிந்தனை இருப்பதை சபரீனாமறுக்கவில்லை. ஆனால் தற்போதைக்கு டிவி செய்தியாளராக பணியாற்றவே விரும்புவதாக சபரீனா கூறுகிறார்.

ஆரம்பத்தில் இருந்தே மாடலிங்கில் ஆர்வம் கொண்ட சபரீனா, முதலில் மிஸ் டீன் ஆஸ்திரேலியா போட்டியில்வென்று பின்னர் மிஸ் ஆஸ்திரேலியா போட்டியிலும் வென்றவர்.

சிட்னி பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சபரீனா செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச பொது மன்னிப்புஅமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் உள்ளிட்ட அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவர்.

மிஸ் டீன் ஆஸ்திரேலியா பட்டம் பெற்ற பின் அதைத் தொடர்ந்து சபரீனா பல சாரிட்டி ஷோக்களில் பங்கேற்றசபரீனா அதன் மூலம் 1.2 மில்லியன் டாலர்களைத் திரட்டி செஞ்சிலுவை சங்கத்துக்கு வழங்கியிருக்கிறார்.

இப்படிப்பட்டவருக்கு இந்தி சினிமா சரிப்பட்டு வருமா என்று தெரியவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil