»   »  நெஞ்சிருக்கும் வரை சிக்கல்!

நெஞ்சிருக்கும் வரை சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சித்திரம் பேசுதடி நாயகன் நரேனும், தீபாவும் நடித்து வெளிவந்துள்ள நெஞ்சிருக்கும்வரை படத்தை டிவிக்கு விற்பனை செய்வதற்கும், வேறு மொழிகளில் டப்பிங்செய்வதற்கும் இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டது.

சுவாசம் படத்தின் இயக்குனரும், முன்னாள் தயாரிப்பாளர் குஞ்சுமோனின் மகனுமானஎபி குஞ்சுமோன் இதுதொடர்பாக தாக்கல் செய்திருந்த மனுவில், சுவாசம் படத்தைநான் தயாரித்து வந்தேன். அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் காப்பி அடுத்து அவரது நெஞ்சிருக்கும் வரை படத்தின் கிளைமாக்ஸ்காட்சிக்கு வைத்து விட்டார்.

அப்படத்தைத் திரையிட தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குதொடர்ந்தேன். அதில், படத்தைத் திரையிட அனுமதி கொடுத்து, ரூ. 25 லட்சத்தைவங்கியில் டெபாசிட் செய்து அதன் ரசீதை உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெனரலிடம் தரவேண்டும் என எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், படத்தின் கதாசிரியர் ஷோபாவுக்கும்உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை இருவரும் செயல்படுத்தவில்லை. நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டனர். எனவே அந்தப் படத்தை வேறு மொழிகளில் டப்பிங் செய்யவும், டிவிக்குவிற்பதற்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி தணிகாச்சலம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்தநீதிபதி, நீதிமன்ற உத்தரவ மதிக்காவிட்டால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்புவழக்குதான் தொடர முடியும். அதில் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றுகூறினார். மேலும் வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிபதி,சந்திரசேகர்-ஷோபா ஆகியோர் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil