'பட்டா பட்டி' சடகோபன் ரமேஷ்!

By Chakra

Sadagopan Ramesh
பட்டா பட்டி எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் தமிழக கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ்.

ஏவிஆர் டாக்கீஸ் மற்றும் பிலிக்கர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படம் பட்டா பட்டி 50-50. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது.

முதல் இசைத் தகடை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் வெளியிட, சன் பிக்சர்ஸ் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா பெற்றுக் கொண்டார்.

சடகோபன் ரமேஷ் ஏற்கெனவே சந்தோஷ் சுப்ரமணியன் படத்தில் ஜெயம் ரவியின் அண்ணனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில்தான் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், நான் ஒரு கிரிக்கெட் வீரன் என்றாலும், சினிமாவைப் பொறுத்தவரை புதுமுகம்தான். இந்தப் படத்தில் நடிக்கும்போதுதான் சினிமா எவ்வளவு கஷ்டமானது என்பதைப் புரிந்து கொண்டேன். சினிமா, கிரிக்கெட் இரண்டிலுமே, டீம் ஒர்க்தான் வெற்றியைப் பெற்றுத் தரும். அந்த வகையில் இந்தப் படத்தில் அருமையான டீம் அமைந்துள்ளது. வெற்றி பெறும் என்று நம்புகிறேன், என்றார்.

இந்தப் படத்தை புதுமுகம் யுவராஜ் இயக்குகிறார். அருள்தேவ் என்ற புதுமுகம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வி முரளிராமன் தயாரிக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X