»   »  சதாவா, ரியாவா? ஜென்மம் படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது.சுரேஷ்கோபி, கோபிகா, கார்த்திகா உள்ளிட்டோர் நடிக்கும் மலையாளப் படம் ஜென்மம். இதில் ஒரே ஒரு பாட்டுக்குஆடுவதற்காக நயனதாராவை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரும் பாட்டுக்கு ஆடுவதற்காக பொள்ளாச்சிக்கு வந்தார். வந்தஇடத்தில் பாட்டுக்கு முன்பு சில வசனம் பேசுமாறு ஒரு சிறு காட்சி உள்ளது. அதில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.இதைக் கேட்டதும் கொந்தளித்த நயனதாரா, பாட்டுக்கு மட்டும் தான் ஆடுவேன். காட்சியில் நடித்தால் எனது இமேஜ்என்னவாகும் என்று கோபமாக கூறியபடி ஷூட்டிங்குக்கு வராமல் கேரளாவுக்குக் கிளம்பிப் போய் விட்டார். இதனால்கடுப்பான படத் தயாரிப்பாளர் மோகன், கேரள நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக அங்குபஞ்சாயத்து நடந்துவருகிறது.இந்த பிரச்சினைக்குப் பின்னர் நயனதாராவை மாற்றி விட்டு வேறு நடிகையைப் போட முடிவு செய்யப்பட்டது. தமிழிலும்,கன்னடத்திலும், தெலுங்கிலும் வாய்ப்பில்லாமல் கிடக்கும் சதாவைப் போடலாம் என இயக்குநர் ஜோஷியும், தயாரிப்பாளரும்ஒரு மனதாக முடிவு செய்தனர். இந்த நிலையில், சதாவைப் போடுவதற்குப் பதில் மலையாள ரசிகர்களிடம் பாப்புலராக உள்ள ஒரு நடிகையைப் போட்டால்நன்றாக இருக்குமே என்ற எண்ணம் இயக்குநருக்கு வந்துள்ளது. சதாவை மலையாளத்தில் அவ்வளவாக யாருக்கும் தெரியாது.படத்தின் கேரக்டரைப் பொறுத்தவரை, நன்கு பாப்புலரான அதேசமயம் கிளாமரான ஒரு நடிகையைப் போட்டால் பெட்டர் என்றுஅவர் ஃபீல் பண்ணியுள்ளார்.அப்போதுதான் ஹீரோ சுரேஷ் கோபி, ரியா சென்னைப் பரிந்துரைத்துள்ளார். ரியா சென் ஏற்கனவே தாஜ்மஹால் படம் மூலம்தமிழில் அறிமுகமாகி மார்க்கெட் கிடைக்காமல் இந்திக்குத் தாவியவர். இவர் மலையாளத்தில் அனந்தபத்ரம் என்ற படத்தில்நடித்திருந்தார். அதில் அவரது கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் ரியா சென்னின் கவர்ச்சியில்கிறங்கிப் போயினர்.அதன் பின்னர் வேறு மலையாளப் படங்களில் நடிக்கவில்லை. அவரைப் போட்டால் செம கிளாமராக இருக்கும் என்றஎண்ணத்தை சுரேஷ்கோபி வெளிப்படுத்த அதை தயாரிப்பாளரும், இயக்குநரும் ஆமோதித்துள்ளனர். எனவே ரியாவையும்முயற்சித்துப் பார்ப்பது, அவரது கால்ஷீட் கிடைத்தால் அவரை போடுவது இல்லாவிட்டால் சதாவை வைத்துக் கொள்வது என்றமுடிவுக்கு வந்துள்ளனராம்.இதனால் சதாவை வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட சதா சோகமாகியுள்ளாராம். கைக்குக்கிடைத்தது வாய்க்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்று அவர் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.எண்ணையைத் தடவி மண்ணில் புரண்டாலும், ஒட்டுவதுதானே ஒட்டும்!

சதாவா, ரியாவா? ஜென்மம் படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது.சுரேஷ்கோபி, கோபிகா, கார்த்திகா உள்ளிட்டோர் நடிக்கும் மலையாளப் படம் ஜென்மம். இதில் ஒரே ஒரு பாட்டுக்குஆடுவதற்காக நயனதாராவை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரும் பாட்டுக்கு ஆடுவதற்காக பொள்ளாச்சிக்கு வந்தார். வந்தஇடத்தில் பாட்டுக்கு முன்பு சில வசனம் பேசுமாறு ஒரு சிறு காட்சி உள்ளது. அதில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.இதைக் கேட்டதும் கொந்தளித்த நயனதாரா, பாட்டுக்கு மட்டும் தான் ஆடுவேன். காட்சியில் நடித்தால் எனது இமேஜ்என்னவாகும் என்று கோபமாக கூறியபடி ஷூட்டிங்குக்கு வராமல் கேரளாவுக்குக் கிளம்பிப் போய் விட்டார். இதனால்கடுப்பான படத் தயாரிப்பாளர் மோகன், கேரள நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக அங்குபஞ்சாயத்து நடந்துவருகிறது.இந்த பிரச்சினைக்குப் பின்னர் நயனதாராவை மாற்றி விட்டு வேறு நடிகையைப் போட முடிவு செய்யப்பட்டது. தமிழிலும்,கன்னடத்திலும், தெலுங்கிலும் வாய்ப்பில்லாமல் கிடக்கும் சதாவைப் போடலாம் என இயக்குநர் ஜோஷியும், தயாரிப்பாளரும்ஒரு மனதாக முடிவு செய்தனர். இந்த நிலையில், சதாவைப் போடுவதற்குப் பதில் மலையாள ரசிகர்களிடம் பாப்புலராக உள்ள ஒரு நடிகையைப் போட்டால்நன்றாக இருக்குமே என்ற எண்ணம் இயக்குநருக்கு வந்துள்ளது. சதாவை மலையாளத்தில் அவ்வளவாக யாருக்கும் தெரியாது.படத்தின் கேரக்டரைப் பொறுத்தவரை, நன்கு பாப்புலரான அதேசமயம் கிளாமரான ஒரு நடிகையைப் போட்டால் பெட்டர் என்றுஅவர் ஃபீல் பண்ணியுள்ளார்.அப்போதுதான் ஹீரோ சுரேஷ் கோபி, ரியா சென்னைப் பரிந்துரைத்துள்ளார். ரியா சென் ஏற்கனவே தாஜ்மஹால் படம் மூலம்தமிழில் அறிமுகமாகி மார்க்கெட் கிடைக்காமல் இந்திக்குத் தாவியவர். இவர் மலையாளத்தில் அனந்தபத்ரம் என்ற படத்தில்நடித்திருந்தார். அதில் அவரது கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் ரியா சென்னின் கவர்ச்சியில்கிறங்கிப் போயினர்.அதன் பின்னர் வேறு மலையாளப் படங்களில் நடிக்கவில்லை. அவரைப் போட்டால் செம கிளாமராக இருக்கும் என்றஎண்ணத்தை சுரேஷ்கோபி வெளிப்படுத்த அதை தயாரிப்பாளரும், இயக்குநரும் ஆமோதித்துள்ளனர். எனவே ரியாவையும்முயற்சித்துப் பார்ப்பது, அவரது கால்ஷீட் கிடைத்தால் அவரை போடுவது இல்லாவிட்டால் சதாவை வைத்துக் கொள்வது என்றமுடிவுக்கு வந்துள்ளனராம்.இதனால் சதாவை வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட சதா சோகமாகியுள்ளாராம். கைக்குக்கிடைத்தது வாய்க்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்று அவர் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.எண்ணையைத் தடவி மண்ணில் புரண்டாலும், ஒட்டுவதுதானே ஒட்டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஜென்மம் படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது.

சுரேஷ்கோபி, கோபிகா, கார்த்திகா உள்ளிட்டோர் நடிக்கும் மலையாளப் படம் ஜென்மம். இதில் ஒரே ஒரு பாட்டுக்குஆடுவதற்காக நயனதாராவை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரும் பாட்டுக்கு ஆடுவதற்காக பொள்ளாச்சிக்கு வந்தார். வந்தஇடத்தில் பாட்டுக்கு முன்பு சில வசனம் பேசுமாறு ஒரு சிறு காட்சி உள்ளது. அதில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்டதும் கொந்தளித்த நயனதாரா, பாட்டுக்கு மட்டும் தான் ஆடுவேன். காட்சியில் நடித்தால் எனது இமேஜ்என்னவாகும் என்று கோபமாக கூறியபடி ஷூட்டிங்குக்கு வராமல் கேரளாவுக்குக் கிளம்பிப் போய் விட்டார். இதனால்கடுப்பான படத் தயாரிப்பாளர் மோகன், கேரள நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக அங்குபஞ்சாயத்து நடந்துவருகிறது.

இந்த பிரச்சினைக்குப் பின்னர் நயனதாராவை மாற்றி விட்டு வேறு நடிகையைப் போட முடிவு செய்யப்பட்டது. தமிழிலும்,கன்னடத்திலும், தெலுங்கிலும் வாய்ப்பில்லாமல் கிடக்கும் சதாவைப் போடலாம் என இயக்குநர் ஜோஷியும், தயாரிப்பாளரும்ஒரு மனதாக முடிவு செய்தனர்.

இந்த நிலையில், சதாவைப் போடுவதற்குப் பதில் மலையாள ரசிகர்களிடம் பாப்புலராக உள்ள ஒரு நடிகையைப் போட்டால்நன்றாக இருக்குமே என்ற எண்ணம் இயக்குநருக்கு வந்துள்ளது. சதாவை மலையாளத்தில் அவ்வளவாக யாருக்கும் தெரியாது.படத்தின் கேரக்டரைப் பொறுத்தவரை, நன்கு பாப்புலரான அதேசமயம் கிளாமரான ஒரு நடிகையைப் போட்டால் பெட்டர் என்றுஅவர் ஃபீல் பண்ணியுள்ளார்.

அப்போதுதான் ஹீரோ சுரேஷ் கோபி, ரியா சென்னைப் பரிந்துரைத்துள்ளார். ரியா சென் ஏற்கனவே தாஜ்மஹால் படம் மூலம்தமிழில் அறிமுகமாகி மார்க்கெட் கிடைக்காமல் இந்திக்குத் தாவியவர். இவர் மலையாளத்தில் அனந்தபத்ரம் என்ற படத்தில்நடித்திருந்தார். அதில் அவரது கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் ரியா சென்னின் கவர்ச்சியில்கிறங்கிப் போயினர்.

அதன் பின்னர் வேறு மலையாளப் படங்களில் நடிக்கவில்லை. அவரைப் போட்டால் செம கிளாமராக இருக்கும் என்றஎண்ணத்தை சுரேஷ்கோபி வெளிப்படுத்த அதை தயாரிப்பாளரும், இயக்குநரும் ஆமோதித்துள்ளனர். எனவே ரியாவையும்முயற்சித்துப் பார்ப்பது, அவரது கால்ஷீட் கிடைத்தால் அவரை போடுவது இல்லாவிட்டால் சதாவை வைத்துக் கொள்வது என்றமுடிவுக்கு வந்துள்ளனராம்.

இதனால் சதாவை வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட சதா சோகமாகியுள்ளாராம். கைக்குக்கிடைத்தது வாய்க்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்று அவர் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

எண்ணையைத் தடவி மண்ணில் புரண்டாலும், ஒட்டுவதுதானே ஒட்டும்!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil