»   »  அமீர்கான் தம்பியும், சதாவும்!

அமீர்கான் தம்பியும், சதாவும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழும், தெலுங்கும் சேர்ந்து டொங்கென்று தன்னைக் கைவிட்டு விட்டதால்கடுப்பாகியிருந்த சதா, இப்போது இந்தியிலிருந்து வந்துள்ள வாய்ப்பால்சந்தோஷமாகி உள்ளார்.

ஜெயம், சதாவுக்கு புதிய பாதையைப் போட்டுக் கொடுத்தது. ஆனால் அந்தப்பாதையை சரியாக பராமரிக்காமல் விட்டு விட்டதால் கல்லும், முள்ளுமாக மாறி கரடுமுரடாகிப் போய் விட்டது சதாவின் தென்னிந்திய திரை வாழ்க்கை.

பண்ணிய பந்தாக்கள், செய்த சில்மிஷங்கள் எல்லாம் மொத்தமாக கூடி சதாவின்மார்க்கெட்டை மொட்டையடித்து விட்டன. அதிகம் எதிர்பார்த்த அந்நியனும்அவருக்குப் பெரிய பிரேக்கைக் கொடுக்கவில்லை (ஷங்கரையும் விடவில்லைசதாவின் சத்தாய்ப்பு!).

இப்போது சதாவிடம் உள்ள ஒரே தமிழ்ப் படம் ஜூலைக் காற்றில் மட்டுமே. இந்தப்படம் கூட எப்போது முடியும், எப்போது ரிலீஸ் ஆகும் என்பது தெரியவில்லை.இதனால், வெறுத்துப் போய் வீட்டோடு முடங்கிக் கிடந்த சதாவுக்கு சந்தோஷமானஒரு செய்தி சமீபத்தில் வந்தது. அது அமீர்கானின் தம்பி ஹைதர்கானுக்கு ஜோடியாகநடிக்கும் புதிய இந்திப் பட வாய்ப்புதான்.

தமிழ், தெலுங்கில் பிரவுஸ் செய்து கொண்டிருந்தாலும் இந்திப் பக்கம் ஒரு கண்வைத்திருந்தவர்தான் சதா. இப்போது அந்த வாய்ப்பு கைகூடி வந்ததால் குஷியாகிப்போன அவர் விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு ஷூட்டிங்குக்காக கிளம்பவுள்ளாராம்.

படத்தோட பெயர் தெரியுமா? சிர்ஃரப் ரொமான்ஸ் லவ் பை சான்ஸ். இந்தப் படத்தின்மூலம் இந்தி ஏணியில் தொத்தி ஏறி கொடியேத்தி விட வேண்டும் என்றுதீர்மானித்துள்ளார் சதா.

இந்தப் படத்தின் லாஞ்ச் பார்ட்டி சமீபத்தில் மும்பையில் நடந்தது. அதில் அமீர்கானின் தந்தை தாகில் ஹூசேன்,தாயார் மற்றும் யுக்தா முகி உள்ளிட்ட ஏகப்பட்ட விஐபிக்கள் கலந்து கொண்டனர்.

தீபா கி தரன்னும் என்ற படத்திலேயே ஹைதர் கான் அறிமுகமாகிவிட்டாலும் இன்னும் சக்ஸஸ் ஆகவில்லை. இந்நிலையில் தான் சதாவோடு ஜோடி போட்டு சிர்ப் ரொமான்ஸ்.. லப் பை சான்ஸ் படத்தில் நடிக்கப் போகிறார்.

தமிழ், தெலுங்கில்தான் கிளாமருக்கு ஏகப்பட்ட கண்டிஷன்களைப் போட்டு வந்தார்சதா. ஆனால் இந்தியில் இதெல்லாம் போயே போச்சாம். இந்தப் படத்தில் ஃபுல்மீல்ஸ் கொடுக்கத் தயாராக இருக்கிறாராம்.

அப்படி போட்டு அசத்தித் தள்ளு..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil