»   »  மச்சினியை கடத்தினாரா ஷக்தி?

மச்சினியை கடத்தினாரா ஷக்தி?

Subscribe to Oneindia Tamil

மனைவியின் சகோதரியை இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கடத்திச் சென்றதாக அவரது மச்சினியின் கணவர் புகார் கொடுத்துள்ளார். இந்தக்கடத்தலுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் உதவியதாகவும் கூறியுள்ளார்.

சென்னை நெற்குன்றம் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் செல்லகுமரன். இன்று காலை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்ஒன்றை கொடுத்தார்.

அதில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந் தேதியன்று எனக்கும், திலகலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தது முதல் எனதுமனைவியின் அக்காள் ராதா (ஷக்தி சிதம்பரத்தின் மனைவி) தொலைபேசி மூலமும், நேரடியாகவும் தனிக்குடித்தனம் போகுமாறு வற்புறுத்தஆரம்பித்தார்.

அவர்களது தொல்லை தாங்க முடியாமல், நானும், மதுரவாயலில் தனி வீடு பார்த்தேன். ஆனால், அந்த வீடு வேண்டாம் என்றும், பங்களா ஒன்றைவாடகைக்கு எடுக்குமாறும் கூறினர்.

கோயம்பேட்டில் நான் பேன்சி கடை வைத்துள்ளேன். அதில் எனக்கு போதிய வருமானம் இல்லை என்று பேசி வந்தனர். இந்நிலையில், நேற்றுஎனது மனைவியின் அக்காள் கணவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரம், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகிய இருவரும் என் வீட்டிற்கு வந்துஎன் மனைவியை அழைத்துச் சென்று விட்டனர்.

இவர்கள் இருவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து எனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

திலகலட்சுமி போட்டி புகார்:

இந்நிலையில், திலகலட்சுமி தனது அக்காள் கணவர் ஷக்தி சிதம்பரம், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோருடன் ஆணையர்அலுவலகம் வந்து செல்லகுமரன் மீது புகார் கொடுத்தார்.

அதில், திருமணம் முடிந்த நாள் முதல் என் கணவர் வரதட்சணைக் கொடுமை செய்து வருகிறார். அவருக்கு அவரது அண்ணன் முருகன், அவரதுமனைவி புனிதா, தம்பி வெற்றிவேல் ஆகியோரும் உடந்தை.

திருமணத்தின் போது எனக்கு 60 பவுன் நகையும், 75 ஆயிரம் ரொக்கப் பணமும் 10 லட்ச ரூபாய் செலவில் கல்யாணமும் செய்து வைத்தனர்.ஆனால் என் கணவர் ஒரு "சேடிஸ்ட் போல நடந்து கொள்கிறார்.

எப்போது பார்த்தாலும் அவரது தாயாருடனே இருக்கிறார். என்னுடன் தனிமையில் இருக்கும் போது தவறு செய்துவிட்டேன் என்று கூறுகிறார்.குடும்பம் நடத்தவே அவர் தகுதியற்றவர்.

கடந்த 17-ந் தேதி என்னை சமையல் அறையில் அடைத்து, சிலிண்டரை திறந்து விட்டு கதவை வெளிப்புறமாக பூட்டிச் சென்றனர். நான் ஜன்னலைத்திறந்து சத்தம் போட்டு உயிர் தப்பினேன்.

நேற்று மாலை எனது வாயில் துணியை அடைத்து, துப்பட்டாவால் கழுத்தை நெரிக்க முயற்சி செய்தனர். இதுபற்றி என் அக்காள் கணவர் ஷக்திசிதம்பரத்திடம் தகவல் கொடுத்தேன். அவர் வந்து என்னை அழைத்துச் சென்றார். என் கணவரும், என் குடும்பத்தாரும் என்னை கொடுமைப்படுத்துகின்றனர் என்று தனது புகாரில் திலகலட்சுமி கூறியுள்ளார்.

ஷக்தி சிதம்பரம் கதறல்:

மைத்துனியை கடத்தியதாக புகார் கூறப்பட்டுள்ளது குறித்து ஷக்தி சிதம்பரம் கூறுகையில், எனது மனைவியின் அண்ணன் மும்பையில் உள்ளார்.எனவே, திலகலட்சுமி-செல்லகுமரன் திருமணத்தை நானே முன் நின்று நடத்தினேன்.

அண்ணா நகரில் உள்ள புரோக்கர் ஒருவர் மூலம் செல்லகுமரனின் ஜாதகம் எங்களிடம் வந்தது. ஜாதகப் பொருத்தம் பார்த்து ஆடம்பரமாகதிருமணம் செய்தோம். ஆனால், திருமணம் ஆனது முதல் செல்லகுமரன் என் மைத்துனியை மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

"கூத்தாடிக் குடும்பம் என எங்களைப் பற்றி தரக்குறைவாக திட்டியுள்ளார். நேற்று "வியாபாரி பட ஷூட்டிங்கில் நான் இருந்தேன். அப்போது என்மைத்துனி செல்போனில் தொடர்பு கொண்டு தான் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படுவதாக கூறினார்.

உடனே நானும், ஜாக்குவார் தங்கமும் சென்றோம். எங்களை வீட்டிற்கு உள்ளேயே அனுமதிக்க வில்லை. சிரமப்பட்டு எனது மைத்துனியைஅங்கிருந்து அழைத்து வந்தோம்.

திருமணம் ஆன 45 நாட்களுக்குள்ளாகவே செல்லகுமரன் இந்த அளவு கொடுமையுடன் நடந்துள்ளார் என்று ஷக்தி சிதம்பரம் கண்ணீர் மல்ககூறினார்.

இதில் ஜாகுவார் தங்கம் ஏற்கனவே நடிகை அனாமிகா விவகாரத்தில் அடிபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil