»   »  கணவரின் ஆண்மையின்மை-குமுறும் ஷக்தி சிதம்பரம் மைத்துனி

கணவரின் ஆண்மையின்மை-குமுறும் ஷக்தி சிதம்பரம் மைத்துனி

Subscribe to Oneindia Tamil

தனது கணவருக்கு ஆண்மையே கிடையாது. கல்யாணமானது முதல் இதுவரை இரண்டு முறைமட்டுமே அவர்என்னைத் தொட்டுள்ளார். ஆனால் நான் அவரைத் தொட்டவுடன் உடல் குலுங்கி, நடுங்கிப் போய் விட்டார்.அவருடன் குடும்பம் நடத்தவே முடியாது என்று இயக்குநர் ஷக்தி சிதம்பரத்தின் மைத்துனி திலகலட்சுமிபோலீஸில் கொடுத்துள்ள புகாரில் கூறியுள்ளார்.

சென்னை நெற்குன்றம் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் செல்லகுமரன். இவர் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்,ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் மீது நேற்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்புகார் கொடுத்தார்.

அதில் ஷக்தி சிதம்பரமும், ஜாகுவார் தங்கமும் தனது வீட்டுக்கு வந்து மனைவி திலகட்சுமியைக் கடத்திச் சென்றுவிட்டதாக கூறியிருந்தார். ஆனால் திலகட்சுமி, தனது சகோதரி ராதாவுடன் ஆணையர் அலுவலகத்திற்கு வந்துசெல்லக்குமரன் மீது புகார் கொடுத்தார்.

அதில் கணவர் செல்லக்குமரன் ஆண்மையற்றவர், அவருடன் குடும்பம் நடத்தவே முடியாது என்று பரபரப்பாககூறியுள்ளார்.

திலகலட்சுமியின் உறவினர்கள் வீட்டிற்கு வருவதையே செல்வகுமரன் விரும்பவில்லையாம். மேலும்திலகலட்சுமியை அவரது பெற்றோருடன் போனில் பேசவும் அனுமதிக்கவில்லை.

ஒரு வழியாக திலகலட்சுமி ஷக்தியை போனில் தொடர்பு கொண்டு அழுத்துள்ளார்.

இதையடுத்து வியாபாரி படபிடிப்பில் இருந்த ஷக்தி சிதம்பரம் நண்பரான ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார்தங்கத்தை அழைத்துக் கொண்டு நெற்குன்றத்தில் உள்ள செல்லகுமரன் வீட்டிற்கு சென்று திலகலட்சுமி மீட்டுவந்தார்.

இதையடுத்து தத் செல்லகுமரன் மதுரவாயல் போலீசில், எனது மனைவியை திரைப்பட இயக்குனர் ஷக்திசிதம்பரம் மற்றும் சிலர் கடத்திச் சென்று விட்டனர் என்று புகார் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து மதுரவாயல் போலீசார் வடபழனியில் உள்ள ஷக்தி சிதம்பரத்தின் வீட்டிற்கு விசாரிக்கசென்றனர். அங்கு இருந்த திலக லட்சுமி தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறினார்.

பின்னர் திலக லட்சுமி வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், எனது கணவர் என்னைஅடித்து சித்ரவதை செய்தார். அவருக்கு ஆண்மையில்லை என்ற பலவீனத்தை நான் தெரிந்து கொண்டதால்என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். என்னை யாரும் கடத்தவில்லை என்று கூறினார்.

மேலும் தனது அக்காவுடன் கமிஷ்னர் அலுவலகத்துக்கும் சென்று, தன்னை யாரும் தன்னைக் கடத்தவில்லைஎன்று கூறி கணவர் மீது சரமாரியான புகார்களைச் சுமத்தி ஒரு புகாரைக் கொடுத்தார்.

இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திலகட்சுமி, திருமணம் முடிந்த நாள் முதல் என் கணவர்வரதட்சணைக் கொடுமை செய்து வருகிறார். அவருக்கு அவரது அண்ணன் முருகன், அவரது மனைவி புனிதா,தம்பி வெற்றிவேல் ஆகியோரும் உடந்தை.

நேற்று எனது வாயில் துணியை அடைத்து, துப்பட்டாவால் கழுத்தை நெரிக்க முயற்சி செய்தனர். இதுபற்றி என்அக்காள் கணவர் ஷக்தி சிதம்பரத்திடம் தகவல் கொடுத்தேன். அவர் வந்து என்னை அழைத்துச் சென்றார்.

எங்களுக்கு திருமணம் ஆகி 45 நாட்கள் ஆகிறது. திருமணமான இரண்டாவது நாளே தனியாக கடை வைக்கவேண்டும் பத்து லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டார்.

திருமணமான இத்தனை நாட்களில் இரண்டு முறை மட்டுமே எனது அருகில் அவர் வந்தார். என்னை கண்டுவிலகியவரை என்னை தொட வைத்தேன். எனது உடலை தொட்டதும் அவரது உடல் குலுங்கியது. என்னைவிட்டு ஓடிப் போய் விட்டார். வேறு அறையில் படுத்து தூங்கினார்.

அவருக்கு ஆண்மை இல்லாத தகவல் எனக்கு தெரிய வந்தது. அதனை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். என்னை ஒரு தனி அறையில் அடைத்து வைத்து, காஸ் சிலிண்டரை திறந்து விட்டார்.சத்தம் போட்டால் கொளுத்தி விடுவதாக மிரட்டினார். அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து கிடைத்தால்போதும் என்றார் திலகலட்சுமி.

Read more about: tilagalakshmi blames husband

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil